பழனி அருகே இருசக்கர வாகனம், கேஸ் சிலிண்டர் திருடிய பலே திருடன் கைது, 8 இருசக்கர வாகனம், 10 சிலிண்டர்கள் பறிமுதல்..!
திண்டுக்கல் மாவட்டம் பழனி, பழனி புறநகர், சத்திரப்பட்டி, சாமிநாதபுரம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டர்கள் திருடு போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது
இதுகுறித்து எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பழனி, கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 இருசக்கர வாகனங்கள், 10 கேஸ் சிலிண்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment.