தங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் தேவாலய மத நல்லிணக்க தேர்ப்பவனி விழா

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் புனித தெரசாள் பங்கு (சிவகங்கை மண்டலம்) வேர்க்காடு புனித சந்தியாகப்பர் நவநாள் மற்றும் தேர்ப்பவனி விழா 16/7/19 மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது . இதனையொட்டி முதலில் கொடி மரம் ஏற்றம், தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. ராமநாதபுரம் மறை மாவட்ட அதிபர் அருள் ஆனந்த் கொடியேற்றினார். நவ நாட்களில் தினமும் மாலை 5:30 மணி ஜெபமாலை, மாலை 6 மணி திருப்பலி நடைபெற்றது. 24.7.2019 மாலை 5:30 மணிக்கு பெருவிழா திருப்பலி, இரவு 9: 30 மணிக்கு புனித சந்தியாகப்பர், அன்னை மேரி, வன தூதர் மிக்கேல் சமன்ஸ் திரு உருவம் தாங்கி மின்னொளி தேர் தேவாலய வளாகத்தில் பவனி வந்தன. இன்று ( 25.7.19) மாலை5:30 மணிக்கு விழா நிறைவு திருப்பலிக்கு பிறகு கொடியிறக்கப்படுகிறது.

இளையான்குடி அருட்பணியாளர்கள் அருள்தாஸ், பினோட்டன் ஆகியோர் தலைமையில்01.8.19 மாலை 4 மணிக்குகொடி மரம் இறக்கம், திருப்பலி நடைபெறும்.ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, விழாக்குழு தலைவர் பூபதி ஆரோக்கிய ராஜன், புனித தெரசாள் பங்கு தந்தை செபாஸ்டின், கிராமத்தலைவர்கள் அந்தோணி சந்தியாகு , அந்தோணி செபஸ்தியான் (அரியான்குண்டு), தங்கச்சிமடம் ஜமாத் தலைவர் ரப்பானி, வர்த்தக சங்க நிர்வாகி பசீர், தங்கச்சிமடம் யாதவ சமுதாய தலைவர் வல்லப கணேசன், ஜமாத் தலைவர்ரபானி, வர்த்தக சங்கத் தலைவர் பசீர், ஆத்திக் காடு மரிய ஜெயம், வேர்க்கோடு செபஸ்தியான், ஓலைக்குடா சகாயராஜ், அக்காள் மடம் மென்றோ உள்ளிட்டோர் விழா குழுவினரால் கவுரவிக்கப்பட்டனர். தங்கச்சிமடம் புனித தெரசாள் பங்கு தந்தை ச.செபாஸ்டின், விழாக்குழு தலைவர் கே.எஸ். பூபதி ஆரோக்கியராஜன், தண்ணீரூற்று, அரியான் குண்டு, தென்குடா இறை மக்கள், புனித குழந்தை தெரசாள் ஆலய கமிட்டி , தீவு பூர்விக கிறிஸ்தவர்கள், திருச்சிலுவை அருட்சகோதரிகள், கப்புச்சின் அருட்பணியாளர்கள் மற்றும் விழாக்குழுவினர் நவ நாள் தேர்ப்பவனி ஏற்பாடுகளை செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!