இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி, கீழக்கரை அருகே திருப்புல்லாணி கிராமத்திலும், ரூரல் ஒர்க்கர் டெவலப்மென்ட் சொசைட்டி சார்பில் சிறுவர் மன்ற குழந்தைகளுக்கான விளையாட்டு கலை திருவிழா நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி, திருப்புல்லாணி, மண்டபம் வட்டார பனைத்தொழிலாளர்களின்
வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவைகளில் மேம்பாட்டு பணிகளை ரூரல் ஒர்க்கர் டெவலப்மென்ட் சொசைட்டி கடந்த 11ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர் நிகழ்வாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்திலுள்ள சிறுவர் மன்ற குழந்தைகளுக்கான விளையாட்டு சார்ந்த கலைத்திருவிழா கோரவள்ளி தொடக்கப்பள்ளியிலும், திருப்புல்லாணி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
கபடி, வாலிபால், கோ.கோ, சதுரங்கம் போன்ற விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. ஒவ்வொரு குழந்தைகளும் பள்ளி, வட்டார, ஒன்றிய ,மாவட்ட ,மாநில அளவில்
போட்டிகளில் கலந்துகொண்டு சிறந்து விளங்க ஊக்கப்படுத்தபட்டது. ஆர்.டபுள்யூ.டி.எஸ். ஒருங்கிணைப்பாளர் கனகவள்ளி தலைமையில் ராஜாமணி, ராஜாத்தி, சத்யா, உள்ளிட்டோர் ஏற்பாடு செய்தனர். பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்


You must be logged in to post a comment.