குழந்தை வளர்ப்பு ஒரு கலை.. கீழக்கரையில் அக்கலைக்கு ஒரு பயிற்சி..

“குழந்தை மனசு” என்ற தலைப்பிலான குழந்தை வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் 26.08.2018 அன்று சினர்ஜி இண்டர்நேஷனல் கீழக்கரை அலுவலகத்தில் நடைபெற்றது.

கீழக்கரை அலுவலக மேலாளர் முஹம்மது ஆசிப் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சிமுகாமில் சென்னையிலிருந்த வருகைப்புரிந்த உளவியல் ஆலோசகர் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா சிறப்பான முறையில் பயிற்சியளித்தார்.

இந்த நிகழ்வில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பங்கேற்று பலனடைந்தனர். கிளை அலுவலக பணியாளர்கள் கோபி, நித்யா, ராமலஷ்மி உள்ளிட்டோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பொதுமக்களின் விருப்பத்திற்கிணங்க ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு பயிற்சி முகாமை கீழக்கரையில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது என நிறுவன இயக்குநர் பொறியாளர் கீழை இர்பான்  தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!