சிறுவர்கள் ஆபாச படத்தை சேமித்து வைத்தாலும், பார்த்தாலும் போக்சோ பாயும்! உச்சநீதிமன்றம் அதிரடி..

சென்னையை சேர்ந்த வாலிபர் செல்போனில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்தது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல. அவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் குற்றம் என தீர்ப்பு அளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தது.இந்த மனுவை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி., பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-சிறுவர்களின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் அல்ல என்ற தீர்ப்பை ரத்து செய்கிறோம். ஒரு நீதிபதி எவ்வாறு இப்படி கூற முடியும். இது கொடுமையானது. சிறுவர்களின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் தான். குழந்தைகளின் ஆபாச படம் என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்க அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். ஆபாச படத்தை சேமித்து வைத்தாலும், பார்த்தாலும் போக்சோ சட்டம் பாயும் என்று கூறினர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!