கொடைரோடு அருகே சிசுக்கொலையா? போலீசார் மற்றும் தாசில்தார் விசாரணை;
திண்டுக்கல், கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி சிவசக்தி(23) இவருக்கு 16-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது தாயும், குழந்தையும் நலமுடன் இருந்தனர் 20-ம் தேதி பிறந்த பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. குழந்தை உடலை வீட்டின் பின்புறம் புதைத்தனர். குழந்தை ஆரோக்கியமாக வீடு திரும்பிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வட்டார மருத்துவ அலுவலர் வினோத், போலீசில் அளித்த புகாரின் பேரில் அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் அமுதா குழந்தையின் தாய் சிவசக்தி மற்றும் தந்தை பாலமுருகனிடம் விசாரணை நடத்தி சந்தேக வழக்கு பதிவு செய்தனர்.
தாசில்தார் விஜயலெட்சுமி முன்னிலையில் மருத்துவ குழுவினர் தலைமையில் இன்று (ஏப்.23) குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.