குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருந்த தாய் உட்பட ஆறு நபர்கள் கைது…

மதுரை முனிச்சாலையில் வள்ளியம்மை அரங்கத்தில் கடந்த 12.12.2018 –ம் தேதி 18 வயது பூர்தியடையாத கயல்விழி 16/18 குழந்தைக்கும் முனிச்சாலை, இஸ்மாயில்புரம் 6வது தெருவை சார்ந்த வெங்கட்ராமன் மகன் ஜெயபிரகாஷ் 28/18 என்பவருக்கும் திருமணம் நடைபெற்றதாக திருப்பரங்குன்றம் ஊராட்சி மகளிர் ஊர்நல அலுவலர் திருமதி.V.ராஜேஸ்வரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அனைத்து மகளிர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரினை பெற்று காவல் ஆய்வாளர் திருமதி.சாரதா வழக்கு பதிவு செய்தார்.

காவல் ஆய்வாளர் விசாரணை செய்தபோது கயல்விழிக்கு 18 வயது பூர்த்தியடையவில்லை என்பது தெரியவந்தது. எனவே நடைபெற்ற இந்த குழந்தை திருமணதிற்கு உடந்தையாக இருந்த மணமகன் ஜெயபிரகாஷ், மாமனார் பாலசுப்ரமணியன், மாமியார் விஜயலெட்சுமி சிறுமியின் உறவினர்களான தாய் கிருஷ்ணவேணி, பெரியப்பா பாலசுப்ரமணி, பெரியம்மா பாண்டீஸ்வரி ஆகிய ஆறு நபர்களையும் காவல் ஆய்வாளர் கைது செய்தார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!