சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா..

இராமநாதபுரம், அக்.11-  இராமநாதபுரம் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச பொன் குழந்தைகள் தின விழா இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பரதம், நாடகம், கட்டுரை, பேச்சு போட்டிகளில் வென்ற மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் பரிசு வழங்கினார். 

தேசிய அறிவியல் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர் மோகனா சோமசுந்தரம், சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாவதி, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சத்திய நாராயணன், சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் முத்துலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!