கெட்டுப்போன கிரில் சிக்கனால் 20க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாக காரணமான தனியார் உணவகம் மீது நடவடிக்கை எடுக்காத சுகாதாரத் துறையினர் மீது பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றுகரையில் உள்ள தனியார் உணவகமானபிரிடா ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட 20க்கு மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அதில் இன்னும் 8 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் இதில் கூடைப்பந்தாட்ட மாணவர்கள் 10 பேர் மற்றும் மூன்று வயது சிறுமி ஆகியோரும் அடங்கும் மேலும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சைக்கு வருபவர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது ஆகையால் சிக்கன் சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது வரை 40 க்கும் மேற்பட்டவர்கள் இருக்கலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் பொது மக்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது இந்த நிலையில் புகாருக்கு உள்ளான தனியார் உணவகத்தை சோதனை செய்த மாவட்ட மற்றும் வட்டார சுகாதாரத் துறையினர் ரூபாய் 4000 மட்டும் அபராதம் விதித்து சிக்கன் கடையை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் பொதுமக்கள் கொஞ்சம் தாமதித்து இருந்தாலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டு பெரிய அளவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இவ்வளவு பெரிய பிரச்சனைகளுக்கு காரணமான தனியார் உணவகத்திற்கு சாதாரண முறையில் 4000 அபராதம் மட்டும் விதித்து கடையை மீண்டும் தொடர்ந்து நடத்த அனுமதி அளித்த சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் வட்டார சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் கையூட்டு பெற்று இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம் ஆகையால் தமிழக அரசு சுகாதார குழு உயர்மட்ட விசாரணை மூலம் சிறப்பு ஆய்வு செய்து கெட்டுப்போன உணவால் 20க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாக காரணமாக இருந்த தனியார் உணவகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் மேலும் தனியார் உணவகத்தின் உணவு மாதிரிகளை உயர்தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் கையூட்டு பெற்று தனியார் உணவகம் தொடர்ந்து நடத்த அனுமதி அளித்திருப்பது உறுதியாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏனென்றால் இந்த தனியார உணவகத்தை தொடர்ந்து நடத்த அனுமதிக்கும் பட்சத்தில் மற்ற உணவகங்களும் இதேபோன்று கெட்டுப்போன உணவுகளை தைரியமாக விற்கக்கூடிய நிலைமைக்கு ஆளாக்கப்படுவார்கள் இது ஒரு முன்மாதிரியாக மாறி விடக்கூடாது உடனடியாக கெட்டுப் போன கிரில் சிக்கனை விற்பனை செய்த தனியார் உணவகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி விரைவில் போராட்டம் நடத்துவோம் தனியார் உணவகத்தின் அருகிலேயே அரசு பெண்களை மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி முள்ளிப்பள்ளம் ஆகிய இரண்டு பள்ளிகளில் படிக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உள்ள நிலையில் இவர்களும் மாலை நேரங்களில் கிரில் சிக்கனை வாங்கி சாப்பிடும் நிலை தான் உள்ளது ஆகையால் மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக சோழவந்தான் பகுதியில் உள்ள அனைத்து உணவகங்களிலும் கெட்டுப்போன உணவுகள் இருக்கிறதா என்று உயர்மட்ட ஆய்வை நடத்த வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர் தங்கராஜ் கூறினார்
You must be logged in to post a comment.