தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் தங்கமணி மகன் ஜெயபிரகாஷ் (65). தொழிலதிபரான இவருக்கு மனைவியும் 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது 2வது மகன் சென்னையில் வசித்து வருகிறார். மகனை பார்ப்பதற்காக அவர் குடும்பத்தோடு சென்னை சென்றுள்ளார். இந்நிலையில், அவரது மூத்த மகன் மணிமாறன் இன்று 01.10.19 காலை அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த ஒரு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. இதுகுறித்து சென்னையில் உள்ள ஜெயபிரகாஷுக்கு அவர் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அந்த பீரோவில் 70 பவுன் நகைகள் வைத்திருந்தார்களாம். இதை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில் வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









