மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் முத்து (எ) சங்கர்நாத் (34).இவர் வின் டிவியில் ஒளிப்பதிவாளராகவும் உசிலம்பட்டியிலுள்ள. தனியார் லோக்கல் சானலில் மேனேஜராகவும் பணியாற்றி வந்தார். சங்கர் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.தன்னிடம் பழகியவர்களிடம் குறைந்தது ரூ10 ஆயிரம் கடன் பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.நாளடைவில் பணம் போதவில்லை என நூதன முறையில் மோசடியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். தன்னுடைய உறவினர்கள் மற்றும் பணிபுரியும் இடத்தில் பழகிய பெண்களிடம் தன்னுடைய சோகக்கதையை கூறி அழுது புலம்பி அவர்களை பரிதாபப்பட வைத்து அவர்கள் ஆதார் கார்டை வைத்து மகளிர் குழுவின் மூலம் கடன் வாங்கி அத்தொகையை தானே செலவு செய்ய ஆரம்பித்துள்ளார்.ஓரிரு மாதங்கள் மகளிர் குழுவிற்கு பணம் கட்டி விட்டு அதன் பின் பணம் கட்டுவது கிடையாதாம்.இதேபோல் 10க்கும் மேற்ப்பட்ட பெண்களிடம் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.நாளடைவில் பணம் கேட்டு அனைவரும் நெருக்க சங்கர் ஊரை விட்டு தலைமறைவானார்.இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பணத்தை மீட்டு தரும்படி உசிலம்பட்டி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இது குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்

You must be logged in to post a comment.