மாநில அளவிலான ‘சதுரங்கப்போட்டி’ (Chess) போட்டியில் கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை…

தமிழ்நாடு மாநில அளவிலான சிறுவர்களுக்கான செஸ் போட்டி (TN State Level Children’s Chess Tournament – 2017) திண்டிவனம் V.K.M.வித்யாலயா சி.பிஎஸ்.இ. பள்ளியில், லிட்டில் ராஜு செஸ் அகடமியுடன் இணைந்து, சென்னை லோட்டஸ் செஸ் அகடமி சார்பில் டிசம்பர் 23-24 ஆகிய இரு நாட்களாக நடத்தப்பட்டது.

இப்போட்டியில் பல வயது பிரிவுகளில் மொத்தம் 200 டிரோஃபிகள் வழங்கப்பட்டன. அதில் 10 வயதிற்கு கீழுள்ள பிரிவில் கலந்துகொண்ட 61 மாணவர்களில் கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்களான, ஷாருக் இஃப்ராஸ் (5ஆம் வகுப்பு) 15-ஆம் இடமும், ஸ்டீஃபன் ராஜ் (6ஆம் வகுப்பு) 18-ஆம் இடமும், ஹேமந்த் (5ஆம் வகுப்பு) 20-ஆம் இடமும் பிடித்து கோப்பைகளைப் பெற்றனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களையும், போட்டியில் பங்குபெற்ற ஜெபஷெல்டன் உள்ளிட்ட அனைத்து மாணவர்களையும் பள்ளி முதல்வர் இராஜேஷ் குமார் கிருஷ்ணன், பள்ளி மேலாளர் அபுல் ஹசன், உடற்கல்விஆசிரியர் இராஜாசிங் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!