இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செஸ் அசோசியேஷன் சார்பில் மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியாக மாவட்ட அளவிலான 14வது செஸ் போட்டி இராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நான்கு பிரிவுகளாக ஐந்து சுற்றுகள் நடந்த இப்போட்டியில் 41 பள்ளிகளில் இருந்து 9, 11, 13, 15 வயதிற்குட்பட்ட 176 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நேஷனல் அகாடமி பள்ளி தாளாளர் மருத்துவர் செய்ய தா அப்துல்லா தலைமையில் செஸ் அசோசியேஷன் நிர்வாக குழு உறுப்பினர் பேராசிரியர் ஆ. வள்ளி விநாயகம் முன்னிலையில், துணைத் தலைவர் பி.சுசரிட்டா துவக்கி வைத்தார்.
முதுகுளத்தூர் செஸ் அசோசியேஷன் செயலாளர் எஸ்.துரை பாண்டியன் வரவேற்றார். நான்கு பிரிவுகளிலும் முதல் ஐந்து இடம் பிடித்தோருக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடம் பிடித்தோர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். மாவட்ட சதுரங்க கழக செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. ரெட் கிராஸ் சொசைட்டி புரவலர் என்.ராமநாதன், ராமேஸ்வரம் கிறிஸ்து ராஜா இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் முனைவர் ஷாலினி, துணைத் தலைவர் எம்.தேவி உலக ராஜ், இணை செயலர் தி.ஜீவா, கீழக்கரை தாலுகா செஸ் அசோசியேஷன் செயலர் எஸ்.சுந்தரம் ஆகியோர் பரிசு வழங்கினர். பொருளாளர் சி.குணசேகரன் நன்றி கூறினார். செஸ் ஆர் பிட்டர்கள் ஜி. அதுலன், ஜெ.சாலமன், ரத்தின சேகரன், எஸ்.அன்னபூரணி, எம்.நித்யா, ஆர்.லலிதா ஈஸ்வரி, ஆர்.இளமதி செல்வி ஆகியோர் போட்டிகளை நடத்தினர். ராமேஸ்வரம் எம்.திரவிய சிங்கம், பி.சேகர் ஜெயக்குமார், வி.சதீஷ்குமார் ஆகியோர் ஏற்பாடுகள் செய்தனர்.
முதல் 5 இடம் பிடித்தோர்:- 9 வயது ஆண்கள் பிரிவு
1. சாகிப் நதீம் – நேஷனல் அகாடமி பள்ளி, ராமநாதபுரம் 2. என்.நரேன் கார்த்திக் – பானு மெட்ரிக் பள்ளி, சிக்கல். 3. எம். சாகுல் – நடுநிலைப் பள்ளி, கலங்கா புலி . 4. ஏ. சாய் பிரிஜித் – நேஷனல் மெட்ரிக் பள்ளி, ராமேஸ்வரம் 5. எஸ். அன்ட்ரோ ஜோஸ்வின் ஹாரிஸ் – வேலு மாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்
9 வயது பெண்கள் பிரிவு
1 .ஹர்ஷினி – நடு நிலைப் பள்ளி கலங்கா புலி . 2. ஆர். தன்ஷிகா – நடுநிலைப் பள்ளி, கலங்கா புலி . 3. ஏவிஆர் நிலானி ஸ்ரீ – கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, தேவிபட்டினம். 4. எக்ஸ்.சுவாதி – நடுநிலைப் பள்ளி, கலங்கா புலி . 5. வி.ஏஞ்சல் மேரி – நடு நிலைப்பள்ளி, கலங்கா புலி
11 வயது ஆண்கள் பிரிவு
1. ஷாருக் இப்ராஷ் – நேஷனல் அகாடமி பள்ளி, ராமநாதபுரம் . 2.ஏவிஆர் திவ்யதர்ஷன்-கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, தேவிபட்டினம். 3. வி.விக்னேஸ்வரன் -நடுநிலைப்பள்ளி, கலங்கா புலி . 4. வி.மதன் பிரசாத் – வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம் . 5.ஜே.ஹேமன் – கண்ணாடி வாப்பா இன்டர்நேஷனல் பள்ளி, கீழக்கரை .
11 வயது பெண்கள் பிரிவு
1. சி.ஜேஸ்மின் சுவேதா – அரசு உயர்நிலைப் பள்ளி, வெட்டுகுளம் . 2. சி.ஜாக்குலின் சுஜா – நடு நிலைப் பள்ளி, கலங்கா புலி . 3. ஆர் ஹர்ஷினி – நடு நிலைப்பள்ளி, கலங்கா புலி 4. பி. சுஜிதா – கிரியேட்டிவ் மெட்ரிக் பள்ளி , புலியூர். 5.எல். தர்ஷினி – நடு நிலைப் பள்ளி, கலங்கா புலி . 13 வயது ஆண்கள் பிரிவு
1. கோகுல ரவிச்சந்திரன், நேஷனல் அகாடமி ஐஎஸ்சிஇ பள்ளி, ராமநாதபுரம் . 2. எஸ்.அகமது ஆசிப் – ஷிபான் நூருல் குளோபல் பள்ளி, ராமநாதபுரம் . 3. பி.பவுல் – நடு நிலைப்பள்ளி, கண்டுகொள்ளான் பட்டினம் 4. எம். சூரிய பிரசாத் – வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம் . 5. வி.எம்.ரக்ஷன், நேஷனல் அகாடமி பள்ளி, ராமநாதபுரம்
13 வயது பெண்கள் பிரிவு
1. எஸ்.ஹெலன் டோனிகா – ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி, ஆர்.எஸ்.மங்கலம் 2. எம். கல்பனா- ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி, ஆர்.எஸ்.மங்கலம். 3. எஸ். நூருல் பர்ஹானா – நடு நிலைப் பள்ளி, வாணி. 4. ஜி. துர்கா ஸ்ரீ – செய்யது அம்மாள் மெட்ரிக். பள்ளி, ராமநாதபுரம் . 5. எம்.பர்வத வர்த்தினி – வேலு மாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக். பள்ளி, ராமநாதபுரம்
15 வயது ஆண்கள் பிரிவு
1. எஸ்.ஜாஷ்வா சூடான் – லூயிஸ் லெவேல் மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம் 2.எஸ்.யோகேஷ் குமார் – நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம் 3. ஜி.விஷ்வா – நேஷனல் அகாடமி மெட்ரிக். பள்ளி, ராமநாதபுரம் . 4. எஸ்.எஸ்.ஜெயமாதவன்-நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம் 5 .கே.முகேஷ், ஹோலி ஐலண்ட் லிட்டில் பிளவர், ராமேஸ்வரம்
15 வயது பெண்கள் பிரிவு
1. ஜே.சி.மதுமிதா ஸ்ரீ – புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, வேர்க்கோடு. 2. ஜே.ஆரோ விஷாலி -அரசு உயர்நிலைப் பள்ளி, வெட்டு குளம் . 3. எம்.இஸ்பானா பர்வின் _ நடுநிலைப் பள்ளி, வாணி. 4. எம். சுபா ஸ்ரீ – புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி – வேர்க்கோடு 5. என்.அனுஜா – புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி வேர்க்கோடு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













