இராஜபாளையத்தை சுற்றி திரியும் சென்னையிலருந்து லாரி மற்றும் சரக்கு வாகனம் மூலம் வந்தவர்கள்..

சென்னையில் இருந்து லாரி மற்றும் சரக்கு வாகனம் மூலம் வந்த 5 பேர் இராஜபாளையம் பகுதியில் சுற்றித் திரிகின்றனர் கொரோணா அச்சத்தில் அப்பகுதி மக்கள் கண்டுகொள்ளாத நகராட்சி மற்றும் காவல்துறையினர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்ஜிஆர் நகர் இரண்டு, மற்றும் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சர்ச் தெரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் 5 பேர் சென்னையில் இருந்து தப்பித்து இராஜபாளையம் பகுதிக்கு வந்துள்ளனர் இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி சுகாதார பணியாளர்கள் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

மேலும் இதுகுறித்து காவல் துறையிடமும் தகவல் கொடுத்தும் அவர்களும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அவரிடம் தகவல் தெரிவித்தோம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு

இது போன்று சென்னையில் இருந்து வந்தவர்களை கண்டால் தகவல் கொடுக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ள நிலையில் அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் இதை பயன்படுத்தி சென்னையில் இருந்து வந்தவர்கள் அந்த பகுதியில் சுற்றித் திரிவதும் அவர்கள் மூலம் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர்களை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்

நகராட்சி அதிகாரிகள் வருவதற்குமுன் இவர்கள் தப்பிச் சென்றதால் இவர்கள் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது மேலும் காவல்துறையும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நகராட்சி நிர்வாக கோரிக்கையாக உள்ளது அதிகாரிகளுக்கு இடையே உள்ள போட்டியினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!