சென்னையில் இருந்து மொத்தம் 3,771 பஸ்களில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்..

சுபமுகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பயணிகள் சிரமமின்றி செல்லும் வகையில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி நேற்று முன்தினம் (வெள்ளிக் கிழமை) 1,618 பஸ்களில் 84 ஆயிரத்து 936 பயணிகளும் நேற்று (சனிக்கிழமை) 1,753 பஸ்களில் 91 ஆயிரத்து 156 பயணிகள் என மொத்தம் 3,771 பஸ்களில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து உள்ளனர்.குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று இரவு கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் வெளியூர் செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதியது. நள்ளிரவு 2 மணிவரை பயணிகள் காத்திருந்து பயணம் செய்தனர். பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.இதேபோல் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப இன்று அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!