சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், சென்னையில் எழும்பூர், புதுப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.இதேபோல், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களிலும் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.சென்னையில் காலை முதல் பெய்து வந்த கனமழை சுமார் ஒரு மணி நேரமாக இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


You must be logged in to post a comment.