சென்னை மாநகரின் பல பகுதிகளில் இரவிலும் வெளுத்து வாங்கிய கனமழை.
ஜாம்பஜார், மீசாபேட்டை பகுதி சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர். சென்னை ஐஸ்ஹவுஸ் சாலையில் தேங்கிய மழைநீர் இரவோடு இரவாக வெளியேற்றம். 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கிய நிலையில் முற்றிலும் அகற்றம். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணிப்பு.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. சென்னையில் அதிகபட்சமாக எண்ணூரில் 19 சென்டி மீட்டர் மழை கொட்டியது. மணலி, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சென்னைக்கு மிக அருகில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். ஒரே இடத்தில் நகராமல் நீடிப்பதால் சென்னை, புறநகர் பகுதிகளில் தொடரும் மழை. சென்னை புரசைவாக்கம், ஓட்டேரி பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு. சாலைகள், வீதிகளில் தேங்கிய மழைநீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை.


You must be logged in to post a comment.