அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கும் சென்னை பெருநகர் ஆணையர் AK.விஸ்வநாதன்..

சென்னை பெருநகர காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் அவர்கள் சில மாதங்களுக்கு முன் திருடனை தைரியமாக விரட்டி பிடித்த இளைஞனை பாராட்டி அவனுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தது.

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரை வெளியேற்ற கால்வாயில் ஏற்பட்ட அடைப்பைகளை சரி செய்த வேப்பேரி காவல் ஆய்வாளரை நேரில் சென்று பாராட்டியது.

ஹெல்மட் அணியாமல் வந்த வாகன ஓட்டியை தாக்கிய உதவி ஆய்வாளர் மீது துறைரீதியலான நடவடிக்கை எடுத்தது, மேலும் காயமடைந்த வாகன ஓட்டியின் வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறியது. பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது தாக்குதலுக்கு உள்ளான ஐ.டி நிறுவன பெண் ஊழியரை மருதுவமனையில் சென்று ஆறுதல் கூறியது என மனித நேயமிக்க ஆணையராக மட்டுமில்லாமல் மாநகரம் முழுவதும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களை திடீரென சந்தித்து ஊற்சாகப்படுத்துவது என அசத்தியுள்ளார்.

நேற்று மாநில கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது பட்டாகத்தியை சாலையில் உரசியபடியே அலம்பல் செய்துள்ளனர் இதனால் மாநில கல்லூரிக்கு சென்று மாணவர்கள் தமிழ் இலக்கியம், வரலாறு போன்றவற்றை பயின்று பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு நல்ல பண்பாளராக வளர வேண்டும் என மாணவர்களிடத்தில் அறிவுரை வழங்கியுள்ளார். இப்படி எல்லா தரப்பிலும் களத்தில் இறங்கி மக்களுக்காக பணி செய்யும் இவரது சேவை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!