சென்னையில் கல்லூரிகளுக்கிடையிலான நட்சத்திரக் கலைவிழா நடிகர்கள் பங்கேற்பு ..
சென்னை, சைதாப்பேட்டை, அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் ASTRAL2K24
எனும் தலைப்பில் கல்லூரிகளுக்கிடையிலான
கலைவிழா இருநாட்கள் நடைபெற்றன. இவ்விழாவினை கல்விக் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் ச. தேவராஜ், துணைநிறுவனர் டாக்டர் டெல்பின் தேவராஜ், செயலர் முனைவர்
தே. தேவ் ஆனந்த் இணைச் செயலர் டாக்டர் தேஸ்ரீதேவி தேவ் ஆனந்த், கல்லூரி முதல்வர் முனைவர் த.விமலா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்
தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் விஷ்ணு விஜய்
நடன இயக்குநர் மணிச்சந்ரா ஆகியோர் கலந்து கொண்டு
மாணவ மாணவிகளுடன்
நடனம் ஆடி மகிழ்ந்தார்
பின்பு மாணவிகளுடன் பேசிய விஷ்ணு ஒவ்வொரு மாணவிகளும் பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் உங்களுக்கு என்று ஒரு லட்சியத்தை வைத்துக் கொண்டு
வாழ்க்கையில் வெற்றி பெற
வேண்டும் என்றனர்.
விழாவின் முதல் நாளான பல்வேறு விதமான உள்ளரங்க போட்டிகள் நடத்தப்பட்டது அதற்கு நடுவர்களாக பல்துறை வல்லுநர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்ததுடன் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









