எஸ்.ஆர்.எம் நர்சிங் கல்லூரியில் 8வது தேசிய நர்சிங் மாநாடு!-சுகாதார விநியோகத்தில் முன்னணியிலும், கருணை மற்றும் நிபுணத்துவம் வழங்குவதில் சிறந்தவர்கள் செவிலியர்கள் – பேராசிரியர் டி.சாமுவேல் ரவிக்குமார் பெருமிதம்.!
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் நர்சிங் கல்லூரியில் 8வது தேசிய நர்சிங் மாநாடு நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இணை துணை வேந்தர் டாக்டர் லெப்டினெண்ட் கர்னல் ஏ.ரவிக்குமார் இந்த மாநாட்டினை குத்துவிளக்கு ஏற்றிவைத்து துவக்கி வைத்தார். எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டீன் டாக்டர் நிதின் நாகர்கர் தொடக்க உரையாற்றினார். இந்த மாநாட்டில் இன்றைய காலத்தில் செவிலியர்களின் தொழிலை வழிகாட்டுதல் மற்றும் சுகாதார வசதிகள் செயல்பாடு, உலகளாவிய ஆரோக்கியத்திற்கான வளர்ச்சி குறித்தும் விரிவான சுகாதாரப் பாதுகாப்பு உத்திகளை வடிவமைக்கும் நோக்கில் இந்த மாநாடு குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியின் துவக்கமாக 8வது தேசிய நர்சிங் மாநாட்டு குறித்து விளக்க புத்தகம் வெளியிட்டனர். இதில் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இணை துணை வேந்தர் டாக்டர் லெப்டினெண்ட் கர்னல் ஏ.ரவிக்குமார் கூறுகையில்:- சுகாதாரப் பராமரிப்பில் செவிலியர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்றும், அவர்களின் கல்வி, பயிற்சி மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் தொடர்ந்து ஆதரவு மற்றும் முதலீட்டின் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அவர் எடுத்துரைத்தார். தலைமை விருந்தினராக வேலூர் சி.எம்.சி முன்னாள் பேரழிவு மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் அவசர நர்சிங் தலைவர், பேரழிவு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆலோசகருமான பேராசிரியர் டி.சாமுவேல் ரவிக்குமார்:- செவிலியர்கள் சுகாதார விநியோகத்தில் முன்னணியில் உள்ளனர். பரந்த அளவிலான அமைப்புகளில் கருணை மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த கவனிப்பை வழங்குகிறார்கள் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாநிலத்தின் 34 வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து 570 பங்கேற்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர். சி.கன்னியம்மாள், எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரி துணை முதல்வர் டாக்டர். ஆர்.விஜயலட்சுமி, எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியின் மற்றும் ஆராய்ச்சி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கட்ராமன் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு-சக்திவேல்
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









