இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முரளி. இவர் கீழக்கரை நகராட்சியில் பதிவு பெற்ற ஒப்பந்தகாரர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், கீழக்கரை நகராட்சி மின் மோட்டார் பழுது சரி செய்தும், மின் பல்புகள், உபகரணங்கள் சப்ளை செய்த பணிகள் மேற்கொண்டிருந்தார்.
இது சம்பந்தமாக நகராட்சி ஆணையரை அணுகி தனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.62 ஆயிரத்தை விடுவிக்குமாறு கேட்டார்.. இதையடுத்து இத்தொகைக்கான காசோலை விடுவிக்க இளநிலை உதவியாளர் உதயக்குமார், கணக்கர் சரவணன் ஆகியோரிடம் நகராட்சி ஆணையர் செல்வராஜ் அறிவுறுத்தினார். இதன்படி ஒப்பந்ததாரர் முரளி உதயக்குமாரை பலமுறை நேரில் அணுகி முறையிட்டார். ஆனால் தனக்கும் கணக்கர் சரவணனையும் கவனித்தால் மட்டுமே காசோலை தருவதாக உதயக்குமார் பிடிவாதம் காட்டினார். ரூ.2000 கொடுத்துவிட்டு காசோலையை வாங்கிச் செல்லுமாறு உதயக்குமார் கூறினார். இது குறித்து ராமநாதபுரம் ஊழல் தடுப்பு போலீசாரிடம் துறையினருக்கு புகார் அளித்தார். இதன்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்களை முரளியிடம், உதயக்குமார் அறிவுறுத்தல் படி சரவணன் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கினார் அப்போது அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரவணனை கையும் களவுமாக பிடித்தனர். இதனை தொடர்ந்து இது தொடர்பாக உதயக்குமார், சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









