பணம் மோசடி சம்பந்தமாக விசாரிக்க முற்பட்ட பத்திரிக்கை ஆசிரியருக்கு மிரட்டல்…காவல் துறையில் புகார்..

சமீபத்தில் சென்னையை சார்ந்த ராதிகா  என்ற பெண்ணிடம் திருநெல்வேலியை சார்ந்த விஜி என்ற பெண் ரூபாய் 2லட்சம் பணம் மோசடி செய்துள்ளதாக அறியப்படுகிறது. இது சம்பந்தமாக விஜியால் பாதிக்கப்பட்ட பெண் ராதிகா,  “சொல்வோம் வெல்வோம்” பத்திரிக்கை ஆசிரியர் பாண்டி மீனாவிடம், தன்னிடம் பணத்தை ஏமாற்றிய விஜியிடம் நியாயத்தை கேட்க கோறி தஞ்சம் அடைந்துள்ளார்

இது சம்பந்தமாக அப்பத்திரிகையின் ஆசிரியர் விஜியிடம் தொலைபேசியில் சம்பவத்தை விசாரித்துள்ளார்.  ஆனால் அதற்கு முறையாக பதில் கூறாமல்  சொல்வோம் வெல்வோம் பத்திரிக்கை ஆசிரியர் பாண்டி மீனாவை, விஜி ஒருமையில் அசிங்கமான வார்த்தையில் பேசியும், மிரட்டிய தொனியில் பேசியதாகவும் அறியப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்   பெண் ராதிகா காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

செய்தி:-அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!