ஆன்லைன் வர்த்தகம் மூலம் பலரிடம் பண மோசடி: ரொக்கம், செல்போன்கள் பறிமுதல் .. பட்டதாரி வாலிபர் இருவர் கைது..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் துணை கோட்ட காவலர் சுரேஷ், அவரது நண்பர் அருள்ராஜன் ஆகியோர் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிக் பிரத்யேக எண்ணை (94899 19722) தொடர்பு கொண்டு, ஒரு சர்வதேச மோசடி கும்பல் பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருவதாக தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து  காவலர் சுரேஷ் மற்றும் அருள்ராஜனிடம், மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்  விசாரித்தார். அருள்ராஜன் ரூ.7.50 லட்சம், சுரேஷ் ரூ.49.72 ஏமாற்றப்பட்டது தெரிந்தது.  இது தொடர்பாக, மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயபிட்டா தலைமையில் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் (சைபர் கிரைம்),  திபாகர், தீவிர குற்ற தடுப்பு பிரிவு  சார்பு ஆய்வாளர் குகனேஷ்வரன்  ஆகியோர் அடங்கிய தனிப்படையை  ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் அமைத்தார்.

திபாகர் தலைமையிலான தனிப்படையினர் இணைய  தள மூலம் தீவிரமாக விசாரித்தனர். இந்நிலையில், குகனேஷ்வரன்  தலைமையிலான தனிப்படையினர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் பிரவீன்  குமார்,  விஸ்வநாதன், ஆகியோரை கைது  செய்தனர். விசாரணையில், ஆன்லைன் வர்த்தகம், வெளிநாட்டு பண பரிமாற்றம், போலி நிறுவனம் ஆகியவற்றின் மூலம் பலரிடம் லட்சக்கணக்கான பண மோசடி செய்தது தெரிந்தது. இதன்படி, பொறியியல் பட்டதாரி பிரவீன் குமார், எம்.எஸ்.சி., மென்பொறியியல் பட்டதாரி விஸ்வநாதனிடம் இருந்து ரொக்கம் ரூ.9.70 லட்சம், 25 டெபிட், கிரிடிட் கார்டுகள்,  9 லேப் டாப், 7 செல்போன், 2 டேப், 1 ஹேண்ட் டிஸ்க், 3 பென் டிரைவ், பிளாக் செயின் மூலம் தனி கணக்கில் பதுக்கிய ரூ.1 கோடி மதிப்பிலான ஆவணங்களை பறிமுதல் செய்து மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது  செய்து சிறையில் அடைத்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!