உலமாக்களே உஷார்.! நோன்பு கால மோசடி… பள்ளிவாசல்களையும், ஆலிம் களையும் ஏமாற்றி வரும் மர்ம நபர் ஒரு உஷார் ரிப்போர்ட்.!

இந்த படத்தில் காணப்படும் நபர் தனது பெயரை அப்துல் காதர் என்றும் சவூதியில் தான் ஒரு பிரபல பால் தயாரிப்பு  நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறிக்கொண்டு மோசடி செய்து வருகிறான் என ஒரு தகவல் நமக்கு “சத்திய பாதை” இதழுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டும், இன்னும் பிற இடங்களில் விசாரித்த பொழுது பல வகையில் மோசடி செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இவன் எப்படியெல்லாம் மோசடி வேலைகள் செய்கிறான் என்பதை “சத்திய பாதை” குழு விசாரணையில் இறங்கியதில் இவன் செய்த பல்வேறு அதிர்ச்சிகரமான மோசடி வேலைகள் தெரியவந்துள்ளது.! வாருங்கள் பார்ப்போம்.!..

இவனது ஊர் உண்மையான பெயர் என்ன என்று தகவல் கிடைக்கவில்லை. இவனது இலக்கு பள்ளிவாசல் மற்றும் அங்கு பணிபுரியும் இமாம்கள் தான். தனக்கு சவூதி அரசு உம்ரா செல்ல மூன்று விசா இலவசமாக தருவதாக இமாம்களிடத்தில் கூறி எனக்கு ஆலிம்கள் என்றால் கொள்ளை இஷ்டம் என்று கூறுவான். (கொள்ளை அடிக்க என்பது;, பிறகு தான் தெரியவரும்).

பின்னர் உங்களை நான் இலவசமாக உம்ரா அனுப்பி வைக்கிறேன் என்று கூறுவான். பிறகு பாஸ்போர்ட் செலவுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும்,  நான்கு நாட்களுக்குள் நானே எடுத்து கொடுத்து விடுவேன் என்று கூறி பணம் பெற்றுள்ளான்.  பின்னர் பிரபல   ஆலிம்களுடன் தொடர்பு உண்டு என்றும் கூறி நம்ப வைத்துள்ளான். மேலும் தற்போது ரமலான் நோன்பு காலம் என்பதால் நான் டூர் வந்தேன் நிறைய பள்ளிகளை கட்ட போகிறேன் என்று புழுகி பள்ளியில் தங்கி அங்கு இருக்கும் ஹாஃபிழ் ஆலிம்களுடைய பொருட்களை திருடி விட்டு தப்பித்துள்ளான். இவன் தனி ஆளாக இல்லாமல் ஒரு குழுவாக இணைந்து செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

ஆகையால் பள்ளிவாசல் இமாம்கள், மற்றும் நிர்வாகிகள், மேலும் புதியதாக தராவீஹ் தொழுகைக்காக வேறு ஊர்களுக்கு சென்றிருக்கும் ஹாஃபிழ்கள், ஆகியோர் கவனத்திற்கு..!இந்த படத்தில் கண்ட நபரோ அல்லது வேறு யாரேனும் புதிய முகமாக தெரிந்தாலோ தீவிர விசாரணை நடத்தி உண்மைகளை அறிந்து பள்ளிக்குள் அனுமதி அளியுங்கள். சந்தேகம் வரும் பட்சத்தில் காவல்துறைக்கு தகவல் தாருங்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!