போக்குவரத்து மாற்றம் பற்றிய காவல்துறை அறிவிப்பு..

சங்கரன் கோவில் ஆடித்தபசு திருவிழாவை (07.08.2025) முன்னிட்டு போக்கு வரத்தில் பின்வருமாறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

1. திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள் ராஜபாளையம், மதுரை செல்லும் வழி: திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள் சண்முக நல்லூர் விலக்கு வழியாக சின்ன கோவிலான் குளம், சூரங்குடி, தர்மத்தூரணி, நடுவக் குறிச்சி, குத்தாலப்பேரி, பொய்கை மேடு, தளவாய்புரம் வழியாக சங்கரன் கோவில், ரயில்வே பீடர் ரோடு, TB junction signal வழியாக ராஜபாளையம் மதுரை செல்ல வேண்டும்.

 

2. திருநெல்வேலியில் இருந்து சங்கரன் கோவில் செல்லும் சிறப்பு பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையம் கோமதியம்மாள் மகளிர் மேல் நிலைபள்ளி வந்து திரும்பி செல்ல அனுமதிக்கப்படும்.

 

3. ராஜபாளையத்தில் இருந்து வரும் பேருந்துகள் திருநெல்வேலி செல்லும் வழி: ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் அனைத்தும் பாரத ஸ்டேட் பேங்க் எதிரே உள்ள சாலை வழியாக கீதாலயா தியேட்டர் ரோடு, கருவாட்டுகடை விலக்கு, திருவேங்கடம் சாலை, புதிய பேருந்து நிலையம், கழுகுமலை ரோடு, இராமநாதபுரம் விலக்கில் வலதுபுறம் திரும்பி இராமநாதபுரம், நெடுங்குளம் விளக்கு வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும்.

 

4. கோவில்பட்டி, திருவேங்கடத்தில் இருந்து வரும் பேருந்துகள் தென்காசி, சுரண்டை, புளியங்குடி செல்லும் வழி: கோவில் பட்டி, திருவேங்கடத்தில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் செல்வா சில்க்ஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி நெசவாளர் காலணி, உடப்பன் குளம் ரோடு, வையாபுரி மருத்துவமனை ஐந்து வீட்டுமனை வழியாக ராஜபாளையம் ரோடு, TB junction signal ல் வலதுபுறம் திரும்பி ரயில்வே பீடர் சாலை வழியாக தென்காசி, சுரண்டை செல்ல வேண்டும்.

 

5. கழுகுமலையில் இருந்து வரும் பேருந்துகள் தென்காசி, சுரண்டை செல்லும் வழி: கழுகுமலையில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் MP house-ல் இருந்து வலதுபுறம் திரும்பி புதிய பேருந்து நிலையம், திருவேங்கடம் சாலை, செல்வா சில்க்ஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி நெசவாளர் காலணி, உடப்பன் குளம் ரோடு, வையாபுரி மருத்துவமனை ஐந்து வீட்டுமனை வழியாக ராஜபாளையம் ரோடு, TB junction signel ல் வலதுபுறம் திரும்பி ரயில்வே பீடர் சாலை வழியாக தென்காசி, சுரண்டை செல்ல வேண்டும்.                      

 

6. தென்காசி, சுரண்டை, புளியங்குடியில் இருந்து வரும் பேருந்துகள் கோவில் பட்டி, கழுகுமலை, திருவேங்கடம் செல்லும் வழி: தென்காசி, சுரண்டை, புளியங்குடியில் இருந்து கோவில்பட்டி செல்லும் பேருந்துகள் அனைத்தும் சங்கரன் கோவில் இரயில்வே கேட், இரயில்வே பீடர் ரோடு, TB junction signel ராஜபாளையம் ரோடு, பாரத ஸ்டேட் பேங்க் எதிரே உள்ள சாலை வழியாக கீதாலயா தியேட்டர் ரோடு, கருவாட்டு கடை விலக்கு, திருவேங்கடம் சாலை, புதிய பேருந்து நிலையம் தற்காலிக பேருந்து நிலையம் வந்து கோவில்பட்டி, கழுகுமலை, திருவேங்கடம் செல்ல வேண்டும்.

 

7. ராஜபாளையம் ரோடு கல் மண்டபம், தீயணைப்புத் துறை நிலையம் அருகில் தற்காலிக பேருந்து நிலையம் இயக்கப்படும்.

 

8. திருவேங்கடம் ரோடு புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக பேருந்து நிலையம் இயக்கப்படும்.

 

9. சுரண்டை ரோடு சுரண்டை ஜங்சன்-ல் தற்காலிக பேருந்து நிலையம் இயக்கப்படும்.

 

10. திருநெல்வேலி ரோடு கோமதியம்மாள் மகளிர் மேல் நிலைபள்ளி அருகில் தற்காலிக பேருந்து நிலையம் இயக்கப்படும்.

 

சங்கரன் கோவில் ஆடித்தபசு திருவிழா 07.08.2025 அன்று கனரக வாகனங்கள் லாரி, டாரஸ் லாரி, கன்டைனர், ட்ரைலர் லாரி ஆகிய அனைத்து கனரக வாகனங்கள் சங்கரன் கோவில் நகர் பகுதி வழியாக செல்ல அனுமதி இல்லை.   

   

கனரக வாகனங்கள் செல்லும் வழிகள்:

 

1. கோவில்பட்டி, கழுகுமலை வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் குருவிகுளம், திருவேங்கடம் பருவக்குடி விலக்கு வழியாக தென்மலை சிவகிரி வழியாக தென்காசி செல்ல வேண்டும்.

 

2. திருவேங்கடம் வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் திருவேங்கடம் பருவக்குடி விலக்கு வழியாக தென்மலை சிவகிரி வழியாக தென்காசி செல்ல வேண்டும். 

 

3. திருநெல்வேலி வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் சண்முக நல்லூர் விலக்கு சின்ன கோவிலான்குளம், நடுவக் குறிச்சி வீரசிகாமணி, பாம்புக் கோவில், புளியங்குடி ரோடு வழியாக சிந்தாமணி,  வாசுதேவ நல்லூர் வழியாக மதுரை, ராஜபாளையம் செல்ல வேண்டும்.

 

4. தென்காசி வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் கடைய நல்லூர், புளியங்குடி, வாசுதேவ நல்லூர், சிவகிரி, ராஜபாளையம் வழியாக விருதுநகர், மதுரை செல்ல வேண்டும்.

 

பொதுமக்கள் அனைவரும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

செய்தியாளர்- அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!