துபாயில் நடைபெற்ற தமிழக அளவிலான கிரிக்கெட் போட்டியில் ‘SMASHING STRICKERS’ அணியினர் சேம்பியன் கோப்பையை வென்று அபாரம்

துபாயில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு நண்பர்கள் ஒன்றிணைந்து ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தப்படும் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 அணிகள் பங்கு பெற்றது. இன்று (09.02.18) துபாயில் நடைபெற்ற இறுதி போட்டியில் ‘SMASHING STRICKERS’ அணியினர் மதுக்கூர் கிரிக்கெட் கிளப் அணியினை வீழ்த்தி முதல் பரிசு 2222 திர்ஹம் மற்றும் சேம்பியன் கோப்பையை தட்டி சென்றுள்ளனர். தொடர்ந்து வெறிகளை குவித்து வரும் அணியினருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இது குறித்து ‘SMASHING STRICKERS’ அணியின் கேப்டன் கீழக்கரை சட்டப் போராளி  அசாருதீன் கூறுகையில் ”கடந்த 3 வருடங்களாக கீழக்கரை மற்றும் பெரியப்பட்டினம் நண்பர்கள் இணைந்து விளையாடி வரும் ‘SMASHING STRICKERS’ டீம் இந்த முறை சேம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முந்தைய அரையிறுதியில் அதிராம்பட்டினம் அதிரை பாய்ஸ் அணியினை வென்று முதலிடம் பிடித்தது.

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் பட்டத்தினை பெரியபட்டிணத்தை சேர்ந்த செய்யது என்கிற மாவீரன் பெற்று அணியின் வெற்றி வாகைக்கு வழிவகுத்துள்ளார். இரண்டாம் இடத்தை MCA அணி பெற்றுள்ளது  வெற்றி பெற்று சேம்பியன் கோப்பையை வென்று இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சர்வதேச அளவில் புகழை தேடி தந்த ‘SMASHING STRICKERS’ அணியினரை கீழை நியூஸ் நிர்வாகம் மனமார வாழ்த்துகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!