2 பெண்களிடம் 7 பவுன் செயின் வழிப்பறி இருவர் கைது..

இராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் பிருந்தாவன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா, 45. நேற்று முன் தினம் மாலை 5 மணி அளவில் இவர் நடை பயிற்சி சென்றார். அப்போது அது வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் கவிதா கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். ராமநாதbம் வெளிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி , 55. நேற்று முன் தினம் இரவு 9 மணி அள்வில் அப்பகுதியில் சாலை ஓரம் நடந்து சென்ற போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் கஸ்தூரி கமுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசாரின் வாகன சோதனையில் இருவர் சிக்கினர். விசாரணையில் பெருங்குளம் செல்வராஜ் மகன் மதன்குமார் 21, சடையன் வலசை நாகசாமி மகன் தமிழ்ச்செல்வன் 21 ஆகியோர் கவிதா, கஸ்தூரியிடம் செயின் பறித்தது தெரிந்தது. இருவரையும் கேணிக்கரை போலீஸ் எஸ்.ஐ., ஜீவரத்தினம் கைது செய்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!