ராமநாதபுரம் மாவட்டம் குயவன் குடி கிராமத்தில் முதியோர் செயல் இயக்கம் சார்பாக 1000க்கும் மேற்பட்ட முதியோர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. எல்டர்ஸ் ஃபார் எல்டர்ஸ் பவுண்டேஷன் இயக்குநர் இளங்கோ ராஜரத்தினம் தலைமை வகித்தார். காரைக்கால் காவிரி படுகை ஓஎன்ஜிசி செயல் இயக்குநர்உதய் பஸ்வான் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், நவாஸ் கனி, மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிரவீன், ரோட்டரி துணை ஆளுநர் அருண் பிரசாத், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி, அரசு வழக்கறிஞர் முனியசாமி, ராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி தலைவர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் மண்டபம் வட்டார முதியோர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






You must be logged in to post a comment.