ராமநாதபுரம் வேலு மாணிக்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை ‘சமத்துவ பொங்கல் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகிகள் இணைந்து பொங்கல் வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுகள், கிராமியப் பாடல்கள் பாடுவது, நாட்டுப்புற நடனம், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கல்லூரி வளாகத்தில் மாணவிகளின் கண்கவரும் புத்தாடை அணிந்து ரங்கோலி கோலங்கள், புள்ளி கோலங்கள் வரைந்து ஆட்டம் பாட்டத்தோடு தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



You must be logged in to post a comment.