நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கம் மற்றும் அரசு அருங்காட்சியகம் இணைந்து நடத்திய பாவேந்தர் பாரதிதாசன் 128-ஆவது பிறந்த நாள் கவிஞர்தின விழா இன்று 29.04.2019-மாலை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளர் கவிஞர் பேரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி வரவேற்புரை வழங்கினார்.
கவிஞர்கள் பாப்பாக்குடி செல்வமணி,மஞ்சுளா, கமல லியானோ சில்வேரா,காஜா மைதீன்,அனீபா ஆகியோர் கவிதை வாசித்தனர். திருக்குறள் இரா.முருகன், நல்லாசிரியர் வை.இராமசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நெல்லைமாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் கா.பொ.இராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக பாவேந்தர் பாரதிதாசன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.கவிஞர் சுப்பையா நன்றி கூறினார்.விழாவில் வட்டாட்சியர் (ப.நி)வலன்சியா, வழக்கறிஞர் பாரதி முருகன், திருவள்ளுவர் கல்லூரி நூலகர் முனைவர் பாலச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற கவிஞர் பே.இராஜேந்திரனுக்கு தமிழ்த் துறைத் துணை இயக்குநர் இராஜேந்திரன் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது இனிதே விழா நிறைவுற்றது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











