சாத்தான்குளம் கைப்பேசி வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்க டெல்லியிலிருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள்..

கடந்த சில  நாட்களுக்கு முன்பாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கைபேசி கடை நடத்தி வரும் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதியப்பட்டு பத்து நபர்கள் கைது செய்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு காவல் துறையிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது மதுரை உயர்நீதிமன்ற வழிகாட்டலின் படி சிபிஐ க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இருந்து ADSP விஜயகுமார் சுக்லா, தலைமையில் அனுராக் சிங், பவன்குமார் திவேதி, சைலேஷ்குமார் , சுஷில் குமார் வர்மா , அஜய்குமார், சச்சின், பூனம் குமார் ஆகிய 8 பேர் கொண்ட குழுவினர் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்து 3 கார்கள் மூலம் துத்துக்குடி புறப்பட்டனர்.

முதல்கட்டமாக சிபிசிஐடி அலுவலகத்திலிருந்து வழக்குகள் கூறிய கோப்புகளை கைப்பற்றி முதல் கட்ட விசாரணை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!