தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம்; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட முதலாளி குடியிருப்பில் தொடங்கி வைத்து கோமாரி பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும், கால்நடை நல அட்டைகளை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கினார்.

தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 1.35 இலட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த்தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 46 குழுக்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்டு உள்ளாட்சித்துறை, பால்வளம் மற்றும் ஆவின் உடன் இணைந்து செயலாற்ற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் ஊரில் தடுப்பூசி போட குழுவினர் வரும் போது அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இம்முகாமில் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மரு.மு.மகேஷ்வரி, கால்நடை உதவி மருத்துவர்கள், மரு.S. வெள்ளைப்பாண்டி, மரு.S.R.S. செல்வகுத்தாலிங்கம், மரு.S.P.சிவகுமார், மரு.S.புனிதா, மரு. அருண்பாண்டியன், கால்நடை ஆய்வாளர், L.அருண்குமார், M.பூமாரிசெல்வம், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், N.மாடசாமி, L. அந்தோணியம்மாள், இலஞ்சி பேரூராட்சித் தலைவர் சின்னத்தாய், துணை ஊராட்சி மன்றத்தலைவர் முத்தையா, வார்டு உறுப்பினர் இராஜேஸ்வரி, வல்லம் ஊராட்சி மன்றத்தலைவர் ஐமீன் பாத்திமா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா. ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!