தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். பல கட்சிகளில் பொறுப்பில் இருந்த ராமலிங்கம் தற்பொழுது இந்து முன்னணியில் இணைந்து செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகின்றது. பல்வேறு குற்றப்பின்னணி கொண்ட ராமலிங்கத்திற்கு தொழில் ரீதியாகவும் கட்சி மற்றும் அமைப்புகள் ரீதியாகவும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இவர்மீது பல்வேறு வழக்குகள் திருபுவனம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு ராமலிங்கம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். […]
Category: Uncategorized
எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை ..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் தவறான முறையில் எச் ஐ வி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு சற்று நேரத்துக்கு முன் (17/01/2019) மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல். செய்தி வி.காளமேகம் மதுரை
கஜா புயல் ஏதிரொலி.நாளை நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…
இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி தங்கவேல் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, இராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 16-11-2018 (வெள்ளிகிழமை) அன்று நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் நிலவும் கஜா புயல் காரணமாக மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி இந்த முகாம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகின்றது. அடுத்த கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இது சம்பந்தமாக கீழை […]
பெரியார் சிலை சேதம்-தமிழகத்தில் பதற்றம்…
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் அருகே இருந்த பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக பாஜக நிர்வாகி முத்துராமன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து தலித் மற்றும் சிறுபான்மையினர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் திரிப்புராவில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பாஜக ஆட்சி அமைகின்ற வேளையில் அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டுள்ளது. இவ்வேளையில் பாஜக வின் தேசிய செயலாளர் எச்.ராஜா “ஜாதி வெறியன் பெரியார் […]
துபாய் நகராட்சி மற்றும் “CARS” வணிக குழுமம் இணைந்து நடத்திய “ Cleanup The World” தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி..
இன்று (22-11-2017) துபாய் நகராட்சி மற்றும் CARS நிர்வாகமும் இணந்து தூய்மையை வலியுறுத்தும் விதமாக “உலகை தூய்மைப்படுத்துவோம் 2017” (“Cleanup the World 2017”) என்ற பாதாகைகளோடு விழிப்புணர்்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரத்தில் துபாய் நகராட்சியும், கார்ஸ் குழுமமும் (Cars Group) இணைந்து முகைஸ்னா பகுதியில் அமைந்துள்ள சோனாப்பூரில் குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். வேலை பளுவுக்கு மத்தியிலும் இதில் ஏராளமான ஊழியர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
You must be logged in to post a comment.