ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 04 ல் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அன்பு கிளினிக் எதிர்புற பகுதியில் 8 நபர்களை நாய் கடித்தது தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் அடிப்படையில் நகராட்சி பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 7 நாய்கள் பிடிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான பள்ளமோர்க்குளம் ABC மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழக்கரை கால்நடை மருத்துவமனை மருத்துவரிடம் நாய்களுக்கு ரேபீஸ் நோய் தொற்று ஏதும் உள்ளதா என்று கண்டறிந்து […]
Category: மருத்துவம்
சேப்பங்கிழங்கில்,இவ்ளோ இருக்கா.?ரத்த சோகை முதல் நீரிழிவு வரை போக்கும் சேப்பங்கிழங்கு..
சேப்பங்கிழங்கில், இவ்ளோ இருக்கா.? ரத்த சோகை முதல் நீரிழிவு வரை போக்கும் சேப்பங்கிழங்கு.. சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வந்தால், சாகும்வரை கண்களுக்கு எந்தவிதமான கோளாறுகளும் நெருங்காதாம்.. அந்தவகையில், கிழங்கு மட்டுமல்ல, சேப்பங்கிழங்கின் இலைகளும் பெருத்த நன்மைகளை தரக்கூடியவை. சேப்பங்கிழங்கை வைத்து அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், புற்றுநோய்க்கு எதிராக சேப்பங்கிழங்கு செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, சேப்பங்கிழங்கில் உள்ள கிரிப்டோக்சாந்தின், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறதாம். அதேபோல, சேப்பங்கிழங்கை சாப்பிட்டு […]
மாரடைப்பால் நின்று போன இதயத்துடிப்பை சீராக்கும் கருவி மதுரை ரயில்வே ஜங்ஷனுக்கு வழங்கல்
மாரடைப்பால் நின்றுபோன இதயத்துடிப்பை சீராக்கும் கருவி சாமானியர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் இக்கருவியை ரயில் பயணிகளின் பயன்பாட்டிற்காக தெற்கு ரயில்வே கோட்டம் மதுரை ரயில் நிலையத்தில் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன் நிறுவனம் (வேலம்மாள் மருத்துவமனை) சார்பில் நிறுவப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் நின்றுபோன நோயாளியின் இதயப் பகுதியில் ஷாக் கொடுத்து இதயத்துடிப்பை சீராக்க முயற்சி செய்வர். இச்சிறிய கருவி விபத்து போன்ற அவசர நேரங்களில் மருத்துவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இக்கருவியை மருத்துவ பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் […]
அறிவோம் மூலிகை மருத்துவம் – சில முக்கிய குறிப்புகள்..
அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம். மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்* எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்…எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. தேன் குளவி கொட்டியதற்கு…….* தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் […]
புற்று நோய் காரணம் தெரியா உயிர்கொல்லி..- விழிப்புணர்வு கட்டுரை..
மரண வலி, இது புற்றுநோய்க்கே உரித்தான வலியின் மொழி. மாத்திரை, மருந்து, ஊசி என எதற்கும் கட்டுப்படாத கொடுமையான வலி புற்றுநோய் தரும் துயரம். இந்தியாவில் ஆண்டுதோறும் பத்து லட்சம் பேர் புதிதாக ஏதாவது ஒரு புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்; ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர்; 2020-ல் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எச்சரிக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR.). ஏன் இந்த நிலை? பல காரணங்கள்! முக்கியக் காரணம் புகைப்பழக்கம். நாட்டில் […]
பெண்களின் வாழ்வியலை மாற்றப்போகும் ORGANIC BABY நிகழ்ச்சி..
கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA சார்பாக வரும் செப்டம்பர் 8ம் தேதி ORGANIC BABY எனும் மெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெண்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி புதிதாக திருமணமான பெண்கள், குழந்தைப்பேறுக்காக காத்திருக்கும் பெண்கள், திருமண வாழ்கையில் அடி எடுத்து வைக்க போகும் பெண்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. பெண்களுக்காக இத்துறையில் அனுபவம் வாய்ந்த பெண்ணால் நடத்தப்படும் நிகழ்ச்சி. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின் பெண்கள் பிரசவம் […]
இஸ்லாமியா பள்ளி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம்…
கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மற்றும் மதுரை அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் வரும் சனிக்கிழமை (12-08-2017) அன்று தெற்கு தெரு இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை முகாம் நடத்துகிறது. இம்முகாமை கீழக்கரை துணை காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி துவக்கி வைக்கிறார். இஸ்லாமியா பள்ளி தாளாளர் MMK.இபராஹிம் தலைமை தாங்குகிறார். இம்முகாமில் கண்புரை, விழித்திரை விலகல், கண் கருவிழி மாற்று, கண் […]
கீழக்கரையில் ‘மக்கள் மருந்தகம்’ திறப்பு – சகாயம் IAS வழிகாட்டுதலில் விற்பனை துவக்கம்
ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் தற்போது தமிழகம் முழுவதும் சகாயம் IAS வழிகாட்டுதலின் படி மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் ஜெனரிக் மெடிக்கல் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கீழக்கரை கிழக்கு தெரு சிட்டி யூனியன் வங்கி அருகாமையில் நேற்று 28.04.17 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் பாதை இயக்கத்தின் […]
சித்திரை வெயில்.. அக்னி நட்சத்திரம்.. நம் உடல் நலத்தில் அதிக சிரத்தை கொள்ள வேண்டிய மாதம்…
தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சித்திரை மாதத்துடன் அக்னி வெயிலும் தொடங்க இருக்கிறது. இந்த வருடம் பருவ மழை பொய்திருக்கும் நிலையில் வெயிலின் தாக்கமும் மிக உக்கிரமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் அக்னி வெயிலை எதிர்கொள்ள நம்மை நாமே இயற்கையான உணவு வகைகளுடன் தயார் படுத்திக்கொள்வது நலம். அக்னி உக்கிரத்தில் உடலை குளுமைப்படுத்தும் உணவு வகைகள் உங்கள் பார்வைக்கு:- ஆரோக்கியமான கோடை கால உணவுகள், பயனுள்ள வழிமுறைகள்:- தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக்க முடியும். […]
சமூக வலை தளம் மூலம் மருத்துவ ஆலோசனையால் ஏற்படும் விபரீதம்-அமீரக டாக்டர்கள் எச்சரிக்கை
இன்றைய நவீன உலகில் மருத்துவ ஆலோசனைகளை சமூக வலைதளத்தின் மூலம் பெறக்கூடிய மக்களின் எண்ணிக்கை பெருகி வருவதாக அமீரகத்தில் பணி புரியும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனடி தீர்வை தேடி சமூக வலை தளத்தை நாடுபவர்கள் மோசமான விளைவுகளை சந்திப்பதாகவும் தவறான நபர்களிடம் பாதுகாப்பை தேடுகிறார்கள் என்றும் எச்சரித்துள்ளார்கள். இது குறித்து டாக்டர். ஶ்ரீரிஹரி.கே.பிள்ளை கூறுகையில், கடந்த 4 வருடமாக அவரை அணுகும் நோயாளிகள் உடனடி நிவாரனத்தையே நாடுகிறார்கள், ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் […]
டெங்கு நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை இலவசமாக வழங்கும் நிறுவனம்…
இந்தியாவில் அதுவும் கீழக்கரையில் டெங்கு காய்ச்சலின் வீரியம் மிக கடுமையாக நிலவி வருகிறது. இது சம்பந்தமாக கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் தவிர்த்து பல் வேறு சமூக அமைப்புகளும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழுப்புணர்வு செயல்பாடுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் போன்ற செயல்களை மிக வீரியமாக செய்து வருகிறார்கள். ஆனால் டெங்கு கொசுவின் வீரியமோ அதைவிட வேகமாக கீழை நகரில் பரவி வருவது மிகவும் வேதனையான செய்தி. இந்த மன வேதனைக்கு இதம் தரும் விதமாக சென்னையை […]
கீழக்கரை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்..
கீழக்கரையில் 17-03-2017 (வெள்ளிக்கிழமை) அன்று, கீழக்கரை புதுத்தெருவில் பல்வேறு சமுதாய பணிகளை பொதுமக்கள் நலனுக்காக செய்து வரும் முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இச்சிகிச்சை முகாமுக்கு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கத்தின் (MYFA) தலைவர்.S.A.C.பவுசுல் அலியூர் ரஹ்மான் தலைமை வகிக்கிறார், மேலும் முன்னாள் MYFA & தெற்கு தெரு முன்னாள் செயலாளர்.S.M.சீனி அப்துல் காதர் வாழ்த்துரை வழங்குகிறார். நன்றியுரையை நூரானியா பள்ளியின் தாளாளர். S.M. […]
கீழக்கரையில் ஆஸ்துமா விழிப்புணர்வு நிகழ்ச்சி…
டிசம்பர் மாதம் உலமெங்கும் காலைப்பொழுது இனிதாக பனியுடன், குளிர்ச்சியுடன் துவங்குகிறது. கீழக்கரையிலோ காலைப்பொழுது புகையிலும், தூசியிலும் விடிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கீழக்கரை முக்குரோட்டில் இருந்து கடற்கரை வரை சாலை சீரமைக்கும் பணி துவங்கியது. ஆனால் தொடங்கிய சில நாட்களிலேயே தொடரப்பட்ட பணி அரைகுறையாக நிற்கிறது. ஆகையால் நெடுஞ்சாலை முழுவதும் தூசியும் புகை மண்டலமுமாக காட்சியளிக்கிறது. நோயாளிகள் முக்கியமாக ஆஸ்துமா நோயாளிகள் இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இது தொடர்பாக இன்று காலை 08.00 […]
You must be logged in to post a comment.