முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கையால் ‘மூலிகைத் தாய்’ எனும் பட்டம் பெற்ற ஈரோடு மூதாட்டிக்கு, ஜெர்மனி நாட்டின் சர்வதேச அமைதி பல்கலைக்கழகம் ‘வைத்ய பூஷன் விருது’ வழங்கி கவுரவித்துள்ளது.ஈரோடு மாவட்டம் கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (66). ஐந்தாம் வகுப்பு வரையே படித்துள்ள இவர், 16 ஆண்டுகளுக்கும் மேலாக மூலிகைச் செடி சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 2004ம் ஆண்டு இவரது கணவர் இறந்தார். இரண்டு மகன்களுக்கு திருமணமாகி விட்டது. இதையடுத்து, ஈரோடு சாவடிபாளையம் கிராமத்தில் தனியாக வசித்து […]
Category: மகளிர் பக்கம்
கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய ‘பல் மருத்துவப் பிரிவு’ துவக்கம் – ( பெண் பல் மருத்துவர்களின் பிரத்யேக பேட்டி) – கீழை டைரி 11
கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய பல் மருத்துவப் பிரிவு கடந்த சில மாதங்களுக்கு முன் நவீன வசதிகளுடன் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கீழக்கரை நகரில் பல் மருத்துவம் என்பது என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. கீழக்கரை நகரில் இருந்து பல் மருத்துவம் பயின்ற கிழக்குத் தெருவை சேர்ந்த டாக்டர்.ஹஃப்ஸா பாத்திமா, டாக்டர்.சில்வியா ஜெயத்துடன் இணைந்து கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் […]
கீழக்கரை பெண் மருத்துவர் அல் அம்ராவின் ‘அல் ஃபலா கிளினிக்’ இன்று இனிதே ஆரம்பமாகியது
கீழக்கரை வடக்குத் தெரு இடி மின்னல் மளிகை கடையில் இருந்து வடக்குத் தெரு தைக்கா செல்லும் சாலையில் கீழக்கரை பெண் மருத்துவர் அல் அம்ராவின் ‘அல் ஃபலா கிளினிக்’ இன்று (30.03.2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இனிதே ஆரம்பமாகியது. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தாசீம்பீவீ அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா..
கீகக்கரை தாசீம்பீவீ அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் நேற்று (08-03-2018) 11.00 மணியளவில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வு கல்லூரி முதலவர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்புரை வழங்கினார். சென்னை சான்ட்விச் ஸ்கொயர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் முகமம்து தன்வீர் இக்பால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் பெண்கள் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் உத்திகள் பற்றியும் தொழில் தொடங்கி முன்னேற்றம் அடைவது எப்படி என்பது குறித்தும் தொழிலை […]
பெண்களின் வாழ்வியலை மாற்றப்போகும் ORGANIC BABY நிகழ்ச்சி..
கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA சார்பாக வரும் செப்டம்பர் 8ம் தேதி ORGANIC BABY எனும் மெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெண்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி புதிதாக திருமணமான பெண்கள், குழந்தைப்பேறுக்காக காத்திருக்கும் பெண்கள், திருமண வாழ்கையில் அடி எடுத்து வைக்க போகும் பெண்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. பெண்களுக்காக இத்துறையில் அனுபவம் வாய்ந்த பெண்ணால் நடத்தப்படும் நிகழ்ச்சி. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின் பெண்கள் பிரசவம் […]
இன்று சர்வதேச ‘மகளிர் தினம்’ – பெண்ணியம் காப்போம் – சிறப்பு கட்டுரை
பெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பு, ஆதரவு, அடக்கம், இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழும், இறைவனின் உன்னதமான படைப்பினம் பெண் ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், இல்லத்தரசியாய், சகோதரியாய், தோழியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? பாசத்தால் வார்த்தெடுத்த உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த […]
கீழக்கரை தாசீம் பீவி கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி..தொடரும் பேரணிகள்..
கீழக்கரையில் இன்று (06-02-2017) தாசீம் பீவி பெண்கள் கல்லூரி சார்பாக சீம கருவேல மரங்களின் தீமைகளை விளக்கும் விதமாக பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு கருவேல மரங்களின் தீமைகளை விளக்கும் வண்ணம் பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்தப் பேரணியை கல்லூரி முதல்வர் சுமையா கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மேலும் கல்லூரியின் பல் வேறு துறைகளின் பேராசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி கீழக்கரையின் முக்கிய பகுதிகளில் சென்றது. தாசீம் பீவி […]
கீழக்கரையில் இருந்து கவிதை வடிவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் பட்டதாரி பெண்மணி..
கீழக்கரையில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பருத்திக்காரத் தெருவை சேர்ந்த வணிக மேலாண்மை பட்டதாரி பஹ்ஜத் சாலிஹ் கவிதை வடிவில் எழுதி முக நூலில் பதிந்துள்ளார். அதில் அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், தொன்று தொட்ட தமிழ் கலாச்சாரத்தினை காக்கும் விதமாகவும், உலகளாவிய அளவில் தமிழின கலாச்சார பாதுகாப்பு போராட்டத்தில் பங்கேற்று இருக்கும் இளைஞர் பட்டாளத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது எம் தமிழின எழுச்சி இருளில் மறைந்த தமிழகத்தை இமய உச்சியில் ஏற்றி வைத்தது – எங்கள் […]
You must be logged in to post a comment.