மாணவர்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி…

கல்வி மட்டுமே உலகத்தில் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய மிகப் பெரிய ஆயுதம் இது நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகள்.  இந்த வார்த்தைகளை மெய்மைபடுத்தும் முயற்சியில் ஈடுபடும் நிறுவனம் தான் THE BISHOP’S MODEL UNITED NATION  ஆகும். இந்த கல்வி நிறுவனம் இந்தியாவில் உள்ள பல கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை ஒன்று திரட்டி ஐக்கிய அமைப்பில் நடைபெறும் நிகழ்வுகளை போலவே உலகில் நடைபெறும் அன்றாட விசயங்களை கலந்துரையாட செய்து மாணவர்களை தயார் செய்கிறார்கள். இந்நிகழ்வு வருடந்தோறும் இந்தியாவில் […]

கீழக்கரையில் மக்கள் சேவையில் களம் இறங்கிய “சாலை வெல்ஃபேர் அசோசியேசன்”.

கீழக்கரை நகர் வளர்ச்சிக்கு என்றுமே அரசாங்கத்தை நம்பி இருந்தது இல்லை என்பதற்கு அடையாளமே அங்கு சமூக பணிகள் புரிந்து வரும் எண்ணற்ற சமூக நலச் சங்கங்களே. அந்த நல்நோக்கோடு இன்று அந்த வரிசையில் இணைந்துள்ளது “சாலை வெல்ஃபேர் அசோசியேசன் “. சமீபத்தில் சமூக பணிகளை தொடங்கிய இவ்வமைப்பின் அதிகாரபூர்வமான அலுவலகம் இன்று (07-01-2018) காலை 11.30 மணியளவில் 13/26, சாலை தெரு என்ற முகவரியில் ஆரம்பம் செய்யப்பட்டது. இந்த அமைப்பு மூலம் கல்வி உதவி, மருத்துவ உதவி, […]

கீழக்கரையில் அமைச்சர் மணிகண்டன் பொங்கல் பரிசுகள் வழங்கினார்…

கீழக்கரையில் இன்று (06-01-2018) அமைச்சர் மணிகண்டன் தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு அளிக்கும் அன்பளிப்பு பொருட்களை வழங்கினார். இந்த பொங்கல் பரிசுகளை முதல் கட்டமாக கீழக்கரை 3 வது வார்டு மக்களுக்கு அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வின் போது அமைச்சர் உடன் D, R. O முத்துமாரி மற்றும் அஇஅதிமுக நகர் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சுற்றுப்புற சூழலுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் – ஒரு பார்வை.

ஐக்கிய அரபு அமீரகம் எல்லா நிலையிலும் சுகாதாரத்தை பேணுவதில் முன்னிலை வகிக்கும், அதே போல் சூழலை பேண தவறும் நபர்களை கூட அந்நாட்டின் சட்ட திட்டம் சுகாதாரத்தை பேண வைத்து விடும். உதாரணமாக ராசல் கைமா அமீரகத்தில் உள்ள அல் ஜையிஸ் மலைப்பகுதியில் தினமும், அதிலும் முக்கியமாக விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வருவதுண்டு. வரும் மக்கள் குப்பைகளை கீழே போட்டு அசுத்தப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அந்தப் பகுதிக்குள் நுழையும் பொழுதே நகராட்சி சார்பாக குப்பைகள் […]

கீழக்கரையில் புதிய உதயம் – அல்மாஸ் ஆப்பக்கடை – ஒரு நேரடி ரிப்போர்ட்…

கீழக்கரையில் கடற்கரை ஓரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது “அல்-மாஸ் ஆப்பக்கடை”. இங்கு வகை வகையான ஆப்பம் முதல் அனைத்து வகையான சிக்கன், மட்டன், ஆட்டுக்கால்சூப் போன்ற உணவு வகைகளும் கிடைக்கின்றது. இக்கடையின் உரிமையாளர் கூறுகையில் நாங்கள் இங்கு வியாபாரம் தொடங்கும் பொழுது தூரமாக உள்ளதே என்று எண்ணினோம், ஆனால் எங்களுடைய சுவையின் மீது நம்பிக்கை வைத்தே தொடங்கினோம் என்றார். அல் மாஸ் ஆப்பக்கடை உரிமையாளர் கூறியது போலவே மக்கள் அங்கு கிடைக்கும் சுவையான உணவுக்கு தேடி வருவதை நாம் காண […]

“அடுத்தது என்ன?? – What Next?” – தாசிம் பீவி கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி – வீடியோ தொகுப்பாக…

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்று (06-01-018) காலை 10.00 மணி முதல் கல்லூரி வளாகத்தில் “WHAT NEXT – Plan Your Next Move – Knowledge will bring up the opportunity to make a difference” – “வாருங்கள் வழிகாட்டுகிறோம்”  என்ற தலைப்பு வாசகத்துடன் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கல்லூரி மாணவி அஃப்ரினா செரின் இறையுரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கல்லூரி துணை பேராசிரியர் ராதிகா […]

கீழக்கரையில் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்..வீடியோவுடன்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கிராம நிர்வாக உதவியாளர்கள் இன்று (05-01-2018) 5(ஐந்து) அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் தாசில்தார் சிவக்குமார் தலைமையிலும் கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கத்தலைவர் உத்தம சேகரன் முன்னிலையில் 5அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி கீழக்கரையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கச் செயலாளர். சரவணக்குமார், பாக்கியவதி, மாவட்ட இணை செயலாளர். பாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தாசிம் பீவி அப்துல்காதர் கல்லூரியில் புத்தக வெளியீட்டு விழா..

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் இன்று (05-01-2018) “தித்திக்கும் திருமறையின் மகிமைகள்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்புத்தகத்தை தம்பி சாகிபு சித்திக்பரிதா எழுதியுள்ளார். இந்நிகழ்ச்சியின் வரவற்புரையை தமிழ்துறை தலைவர் வே.அகிலா வழங்கினார். நிகழ்ச்சிக்கு சுல்தான் மரைக்காயர் மற்றும் செய்யது முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிக்ச்சியின் தலைமையுரையை இராமநாதபுரம் தமிழ்சங்கம் தலைவர் அப்துல்சலாம் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருந்தினராக ஏபிஜே அப்துல்கலாம் இன்டர்நேசனல் பவுன்டேசன் நிர்வாக அறங்காவலர் ஏபிஜேஎம் நசிமா மரைக்காயர் […]

ஆடல், பாடலுடன் கீழக்கரையில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..

கீழக்கரையில் இன்று (05-01-2018) நகராட்சி சார்பாக முக்கிய வீதிகளான பஜார் பகுதி, சின்னக்கடை தெரு மற்றும் பல பகுதிகளில் ஆடல், பாடலுடன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திடக்கழிவு மேலாண்மை, தரம் பிரித்தல், கழிப்பறைகளை உபயோகித்தல் போன்ற விழிப்புணர்வு விளக்கங்களை “முழு சுகாதாரம் தமிழகம் – தூய்மை இந்தியா திட்டம் 2018” என்ற தலைப்பில் செயல்படுத்தி வருகின்றனர். இக்கலை நிகழ்ச்சிகளை கீழக்கரை நகராட்சியுடன் இணைந்து அன்னை கம்சலை கலைக் குழுவினர் நடத்தி வருகின்றனர்.

நகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்தது பற்றிய மக்கள் கருத்தும்..சட்டப் போராளிகள் குழுமம் ஒருங்கிணைப்பாளர் விளக்கமும்…ஒரு வீடியோ பதிவு..

கீழக்கரையில் கடந்த வாரம் வார்டுகள் மறுவரையறை செய்வதில் உண்டாகிய குழப்பத்தை நீக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து குழப்படிகளை சீர் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து மறுவரையறை சம்பந்தமாக கருத்து தெரிவிக்க கூடுதல் நாட்களும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களிடம் இது சம்பந்தமாக கருத்து கேட்ட பொழுது, ஆச்சரியமளிக்கும் வகையில் அதன் பற்றிய விபரம் அறியாதவர்களாகவே இருந்தனர். பொதுமக்களும் விழிப்புணர்வு பெறும் வகையில் கீழக்கரை சட்டப்போராளிகள் குழும ஒருங்கிணைப்பாளர் […]

இராமநாதபுர மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்.. பேச்சு வார்த்தையில் சுமூகம்…

நேற்று (03-01-2018) கீழக்கரையில் காவல்துறை அதிகாரி வெள்ளித்துரையின் போக்கை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர், அதை தொடர்ந்து தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் மக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெள்ளதுரை ஆகியோர் உடன் இன்று (04-01-18) மதியம் பேச்சுவார்ரத்தை நடந்தது. பின்னர் அப்பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதின் அடிப்படையில் அனைத்து இயக்க நடவடிக்கைகளும் […]

உன்னை உணர்ந்தால் ஆளும் திறனும் வளரும்.. கீழக்கரையில் மாணவிகளுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி …

01/01/2018 அன்று கீழக்கரை சங்குவெட்டி தெருவில் உள்ள மதரஸா அத் தர்பியத்துல் இஸ்லாமியா மாணவிகளுக்கு ஆளுமைத் திறனை மேம்படுத்தும் வகுப்பு மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை முனைவர் ஹூசைன் பாஷா வழங்கினார். முனைவர் ஹுசைன் பாஷா ஆரம்ப காலத்தில் அமீரகத்தில் மிகவும் பிரபலமான “உணர்வாய் உன்னை” எனும் தனி மனித மேம்பாட்டு நிகழ்ச்சிகளை பல தமிழ் அமைப்புகள் மத்தியில் பயிற்றுவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருவாய்துறைக்கும், காவல்துறைக்கும் மோதலா?? ஏ.டி.எஸ்.பி ஐ கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், வீடியோ தொகுப்புடன்..

இன்று (03-01-2018) கீழக்கரை நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் , சமீபத்தில் நடந்த உத்திரகோசமங்கை திருவிழாவில் கீழக்கரை தாசில்தார் கணேசனிடம் கண்ணியக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்து தரக்குறைவான முறையில் நடந்து கொண்டார் என்று கூறி, காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வரும் திங்கள் கிழமை அன்று மாவட்ட அளவில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இது சம்பந்தமாக காவல்துறை அதிகாரி […]

கீழக்கரை புதிய?? பேருந்து நிலையம் கூரை விழுந்து ஒருவர் படுகாயம்..

கீழக்கரையில் ௨ள்ள நகராட்சி பேருந்து நிலையத்தின் பரிதாப நிலையின் காரணமாக அப்பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரை உடைந்து விழுந்ததில் மூக்குபொறி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர் கீழக்கரையில் உள்ள மீனவர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் இருக்கு கீழக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து ஏற்பட்ட பிறகாவது நகராட்சி நிர்வாகம் விழுத்துக் கொள்ளுமா??

வாலிபால் போட்டியில் வெற்றிக் கனிகளை குவித்து வரும் கீழக்கரை புதுத்தெரு (MYFA) இளைஞர்கள்…

கீழக்கரை புதுத்தெரு MYFA அணியினர் வாலிபால் போட்டியில் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூரில் (26.12.2017) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் நான்காம் பரிசு Rs.10,000 வென்றனர். இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியில் (29.12.2017) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் மூன்றாம் பரிசு Rs.10,000/- வென்றனர் இராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் (01.01.2018) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி நாயகர்களை வாழ்த்துவதில் கீழை நியூஸ் நிர்வாகம் மகிழ்ச்சியடைகிறது.

கீழக்கரை பொதுமக்கள் நலன் கருதி வார்டுகள் மறுவரையறை சம்பந்தமாக சீராய்வு செய்ய ஆட்சியரிடம் மனு – மக்கள் கருத்துக்கள் வீடியோவாக விரைவில்…

கீழக்கரை உசைனியா மஹாலில். நேற்று (01-01-2018) அனைத்து அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பாக சமீபத்தில் கீழக்கரை வார்டுகள் மறுவரையறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் சம்பந்தமாக கருத்து  கேட்பு  கூட்டம் நடைபெற்றது.  அக்கூட்டத்தில் ஆட்சியரிடம் புகார் மனு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டு, இன்று (02-01-2018) காலை இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிழக்கு தெரு ஜமாஅத் துணைப்பொருளாளர் முகம்மது அஜீகர், மக்கள் டீம் அப்துல் காதர், இந்தியா தவ்ஜீத் ஜமாஅத் இராமநாதபுரம் […]

இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக கொள்கை விளக்க பயிற்சிப்பட்டறை..

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் (YRC) மாணவ மாணவியர்களுக்கு ரெட் கிராஸ் கொள்கைகள் விளக்கபயிற்சிப் பட்டறை நடைபெற்றது. முதல்வர் முனைவர் இ. ரஜபுதீன் தலைமையில் கீழக்கரை ரெட் கிராஸ் புரவலர் T. முனியசங்கர் முன்னிலையில் கல்லூரி கூட்ட அரங்கில் ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் பயிற்சியை துவக்கி வைத்தார். யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர் […]

கீழக்கரையில் வார்டு மறுவரையறை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது…

கீழக்கரை வார்டுகள் மறு வரையறை குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் இயகக்ங்கள் மற்றும் ஜமாத்தார்கள் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று ஹூசைனியா மஹாலில் 01.01.2018 மாலை 6.50 மணிக்கு நடைபெற்றது. அக்கூட்டத்தில் வரவேற்புரையை மக்கள் டீம் காதர் வழங்கினார். இந்நிகழ்ச்சியினை கீழை அஸ்ரப் நகர் தலைவர் (SDPI.கட்சி) தொகுத்து வழங்கினார். இக்கூட்டத்திற்கான விளக்க உரையை மக்கள் நல பாது காப்பு கழகம்.செயலாளர். முஹைதீன் இப்ராஹிம் […]

கீழக்கரை கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் கீழக்கரை நகர் வளர்ச்சி அறக்கட்டளையின் மாணவ அமைப்பு..

கீழக்கரை நகர் வளர்ச்சி அறக்கட்டளை கீழக்கரை நகரை தன்னிறைவான, சுகாதாரமான நகராக மாற்றியமைக்க பல் வகையான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இத்திட்டத்தில் இளைய சமுதாயமும் பங்கேற்கும் வகையில் கடந்த டிசம்பர் 29ம் தேதி அறக்கட்டளையின் நிறுவனர் அஹமது புகாரி இல்லத்தில் மாணவ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின் முதற்கட்ட பணியாக கீழக்கரை கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் இன்று (31/12/2017) மாணவர்கள் ஈடுபட்டார்கள். இப்பணியில் ஆர்வமுள்ள ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கடற்கரையை சுத்தப்படுத்தினர். மேலும் […]

கீழக்கரையில் ஒரு பாரம்பரிய நடை.. இளைஞரின் பாராட்டுதலுக்குரிய முயற்சி… போட்டோக்கள் வீடியோ தொகுப்பாக…

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அடிப்படை ஆதாரம், அதனுடைய அடி நாதமாகிய வரலாற்றை பாதுகாத்து புரிந்து கொள்வதில்தான் உள்ளது. அதற்கு அழகிய உதாரணம் வளர்ச்சி அடைந்த நாடுகளாகிய ஐரோப்பா, துருக்கி, அமெரிக்கா போன்ற நாடுகள் இன்று வரை 600 முதல் 1000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுகளை பாதுகாத்து இன்றைய தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துகாட்டாக அடையாளம் காட்டி வளர்கிறார்கள். அதுபோல் வரலாற்று ஆய்வுகளுக்காக வருடம்தோறும் பல கோடிகளை செலவு செய்து வருகிறார்கள். ஆனால் பல்லாயிரம் வருட பாரம்பரியம் உள்ள […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!