சவுதி அரேபியா ஜித்தாவில் இயங்கி வரும் FRIENDS REPUBLIC CLUB எனப்படும் அமைப்பு ஜித்தாவில் பணிபுரியும் பல மாநிலங்களில் உள்ள இளைஞர்களை உள்ளடக்கி கடந்த பல வருடங்களாக இயங்கி வந்தது. கடந்த 12.01.2018 அன்று முறைப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பாக அதற்கான பிரத்யோக அனையாளச் சின்னத்துடன் மக்களுக்கு ZAFIRO FINE DINING என்ற ஹோட்டலில் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வமைப்பில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் மற்றும் பல மாநிலத்தைச் சார்ந்தவர்கள் உறுப்பினராக இணைந்து கிரிக்கெட், வாலிபால், கூடைப்பந்து மற்றும் […]
Category: போட்டோ கேலரி
கீழக்கரையில் ”தஃவா குழு” சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..
அவசரமான உலகில் நம் பிறப்பின் அவசியமும், அர்த்தமும் தெரியாமல் தறிகெட்ட குதிரை போலவே ஒவ்வொருவருடைய எண்ணங்களும், செயல்களும் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது. இன்றைய நவீன உலகில் இஸ்லாமிய சமுதாயமோ மறுமை வாழ்கை என்ற நினைப்பை மறந்தவர்களாக இம்மை வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருமறை குர்ஆன் “நன்மையை ஏவி தீமையை அழிக்கட்டும்” என்று வலியுறுத்துவது போல் ஒரு பிரிவினர் இத்தனை பரபரப்புக்கு இடையிலும் மார்க்கத்தை எத்தி வைக்கும் பணியை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் […]
கீழக்கரையில் உதயமாகும் புதிய மருந்தகம் ..
கீழக்கரையில் நாளை (15-01-2018) அன்று வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள அனஸ் காம்ப்டக்ஸ் வளாகத்தில் “3M PHARMACY” என்ற பெயரில் புதிய மருந்தகம் ஆரம்பம் ஆக உள்ளது. கீழக்கரையில் பல சிறப்பு மருத்துவமனைகள் வளர்ந்து வரும் வேளையில் மக்களின் தேவையை தீர்க்க, தரமான மருந்துக்கடைகளும் அவசியமாகிறது. இத்தொழில் சிறப்புற கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.
கீழை பதிப்பகத்தின் “மொழிமின்” மற்றும் “ஆன்மீக அரசியல்” இன்னும் சில நாட்களில் வெளியீடு..
கீழை நியூசின் அங்கமான கீழை பதிப்பகத்தின் வெளியீடான வி.எஸ்.முகம்மது அமீன் எழுதிய “ஆன்மீக அரசியல்” மற்றும் நூருத்தீன் எழுதிய “மொழிமின்” புத்தகங்கள் விரைவில் வெளி வர உள்ளது. இன்றைய நவீன அரசியலில் எத்தனை முகங்களில் மக்கள் பார்க்கப்படுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்ட கூடிய நூலாகும் “ஆன்மீக அரசியல்”. அதே போல் நவீன உலகில் மனிதன் காலையில் விழித்தது முதல் உறங்கும் வரை வாட்ஸ் அப் முதல் ஃபேஸ் புக் வரை எவ்வாறு ஆட்கொள்ளப்படுகிறான் என்பதை விவரிக்கிறது […]
கீழக்கரை நகர் நல இயக்க சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் ….
கீழக்கரை நகர் நல இயக்கம் கடந்த பல வருடங்களாக மக்களுக்கு பல் வேறான சேவைகள் செய்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் பொருளாதார உதவிகள் செய்து வருகின்றனர். கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொது சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நகர் நல இயக்கத்துக்கு இந்த வருடத்திற்கான சிறந்த பொது சேவைக்கான விருதினை வழங்கினர். இந்த விருதினை […]
குளிர் பிரதேசத்தை கீழக்கரைக்கு கொண்டு வந்த அல் பையினா பள்ளி…
உலகம் முழுவதும் இந்த வருடம் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பனி மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த பனி மழை கீழக்கரைக்கும் வந்துவிட்டதோ என ஆச்சர்யமூட்டும் வகையில் கீழக்கரை அல்பையினா பள்ளி மாணவச் செல்வங்கள் தங்கள் கை வண்ணத்தால் பனி மழையை பள்ளியின் வளாகத்திற்கே கொண்டு வந்து விட்டனர். 11-01-2018 அன்று அல்பையினா பள்ளியில் “Bayyinah’s Winter Wonderland” என்ற பெயரில் குளிர் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தங்கள் கைவண்ணத்தில் பல வகையான படைப்புகளை பார்வைக்கு […]
கீழக்கரை அரசு அலுவலகங்களில் தமிழர் திருவிழா கொண்டாட்டம்…
கீழக்கரையில் இன்று (12-01-2018) தாலூகா அலுவலகத்தில் வட்டாட்சியர் கணேசன் முன்னிலையில் தாலூகா அலுவலர்கள் அனைவரும் சேர்ந்து தமிழர் கலாச்சார முறைப்படி பொங்கல் பொங்க வைத்து கொண்டாடினர். கீழக்கரை நகராட்சி அலுவலகத்திலும் நகராட்சி ஆணையாளர் வசந்தி முன்னிலையில் நகராட்சி அலுவலர் பொங்கல் திருவிழாவை கொண்டாடினர். இன்றை முதல் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் இன்று முதலே தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. —————-/////——————
இராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் செஞ்சிலுவை சங்கம் சார்பாக பொங்கல் விழா..
இராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரெட் கிராஸ் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழா. தமிழக மண்ணின் மைந்தர்கள் விழாவான பொங்கல் விழா தமிழர்களின் பாரம்பரியத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமான பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர். இந்த பொங்கல் திருவிழாவில் ஏராளமான செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ————-///————
கடந்த வருடம் கேட்ட கேள்விக்கு பதில் தர தகவல் உரிமை ஆணையத்திடம் நேரடியாக முறையீடு..
கடந்த நவம்பர்.17, 2016ம் ஆண்டு கீழக்கரை நகராட்சியிடம் ஒரே ஒரு கேள்வி என்று கீழக்கரையில் உள்ள பல பிரச்சினைகளுக்கான விளக்கம் கேட்டு கீழக்கரை சட்டப்போராளிகள் சார்பாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரை அதற்கான விளக்கமான பதில் கிடைக்கவில்லை. அந்த கேள்வியை ஒட்டி மேல்முறையீடும் செய்யப்பட்டது, ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க படாமலே இருந்தது. அதே சமயம் மனுக்கள் மூலமாக மட்டும் எதையும் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்கள் இருந்தாலும், […]
நல் உணவே மருந்து.. உணவுக்கு வழிகாட்டும் MYFA அமைப்பு…
கீழக்கரை புதுத்தெரு MYFA சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேவையுடைய குடும்பங்களின் மாதாந்திர உணவுத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதாந்திர உணவுத் திட்டம் மூலம் சுமார் 70 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த உணவு திட்டம் சம்பந்தமாக MYFA சங்க செயலாளர் பாதுஷா கூறியதாவது, ”இந்த திட்டமானது கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக நடத்தி வருகின்றோம். இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்குகிறோம். மேலும் […]
கீழக்கரை அலையோசை சாரலாக ஒலித்தது துபாய் 89.4FM ரேடியோவில் …
துபாய்க்கு வேலை தேடி சென்றவர்கள் சூழ்நிலையின் காரணமாக முழு நேரமும் வேலை, சம்பாத்தியம் என்று காலம் கடந்தவர்கள் பலர். ஆனால் அந்த வேலை பளூவிலும் சமூக சேவையின் மூலம் முத்திரை பதித்தவர்கள் சிலர். ஆங்கிலத்தல் சொல்வதென்றால் “BEST OUT OF LOT”. அவ்வாறு முத்திரை பதித்தவர்தான் கீழக்கரையைச் சார்ந்த நஜீம். கீழக்கரையை சார்ந்த நஜீம் ஐக்கிய அரபு நாட்டில் அரேபியா ஹோல்டிங் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் பிறந்த மண்ணாகிய கீழக்கரையிலும் சமூக அக்கறையுடன் தான் வந்த […]
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மெகா வேலைவாய்ப்பு முகாம்.
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மெகா வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையிலும், சென்னை பேனியன் டெக்னாலஜி சொலுசன் இயக்குநர் மீரான் மற்றும் ஜெனரல் மேனேஜர் சலீம் முன்னிலையிலும் நடைபெற்றது. கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி பிலால் அனைவரையும் வரவேற்றார். கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மெகா வேலைவாய்ப்பு முகாமில் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் பல்வேறு பொறியியல் துறைகளைச் சோர்ந்த 454 மாணவர்கள் கலந்து கொண்டனர். சென்னை பேனியன் […]
பேச்சுப் போட்டியில் பரிசுகள் வென்ற இஸ்லாமியா பள்ளி..
07.01.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ராமநாதபுரம் தமிழ் சங்கம் நடத்திய திருக்குறள் வேள்வியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளது. அப்போட்டியில் இஸ்லாமியா பள்ளி 4ஆம் வகுப்பு மாணவன் பவாஸ் அமீன் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 5 நிமிடத்தில் 90 குறள் ஒப்புவித்து முதல் பரிசு பெற்றார். மேலும் பேச்சுப்போட்டியில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ஆயிஷத் ருக்சானா முதல் பரிசும், இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி மாணவி அல் மஜா கட்டுரைப்போட்டியில் மூன்றாம் […]
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சாதித்து காட்டுவோம் “அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி” நிகழ்ச்சி…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி சார்பாக சாதித்து காட்டுவோம் “அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி” நிகழ்ச்சி 07.01.2018 அன்று இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மரைக்காயர்ப்பட்டிணம் மற்றும் வேதாளை பகுதி மக்களுக்காக தங்கச்சிமடம் லியோன் மகாலில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரனி செயளாளர் சகோதரர் அனிஸ் அஹமது தலைமையில் கல்வியாளர்கள் பாயாஸ், அஷ்ரஃப் ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு விளக்கமளித்தார்கள். இந்நிகழ்வில் 600 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
கீழக்கரை தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டம்…
கீழக்கரை தாலூகாவுக்கு உட்பட்ட VAO – Village Administrative Officer எனும் கிராம நிர்வாக அலுவலர்கள் தாலூகா அலுவலகத்தில் இன்றிலிருந்து போராட்டம் அறிவித்துள்ளனர். கீழக்கரை தாலுகா மொத்தம் 18 கிராம நிர்வாக அலுவலர்களை உள்ளடக்கியதாகும். இவர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் இன்று (08-01-2018) இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர். பின்னர் 10ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், 18 ம் தேதியிலிருந்து தொடர்ந்து வேலை புறக்கணிப்பு போராட்டம் நடத்தவும் […]
15-01-2018 அன்று மக்கள் பாதை சார்பாக உச்சிநத்தம் சூரங்குடி அருகே சமத்துவ பொங்கல்..
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிநத்தம், சூரங்குடி அருகே உள்ள அப்துல் கலாம் கலையரங்கில் நேர்மையாளர் உ.சகாயம் IAS வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள் பாதை சார்பாக சமத்துவ பொங்கல் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை ப்ரண்டஸ் சர்வீஸ் கிளப், கலாம் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் குருதி கொடை முகாம் (Blood Donation Camp), மரக்கன்றுகள் நடுதல், மக்கள் பாதையின் திட்ட விளக்கக்கூட்டம் ஆகியவை நடைபெற உள்ளன. இந்நிகழ்வில் மாணவர்கள், இளைஞர்கள் , தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் […]
அல் பையினா பள்ளியில் அறிவியல் கண்காட்சி – அறிவியல் பூர்வமான இஸ்லாமிய பார்வை..
கீழக்கரை அல் பையினா பள்ளியில் 03-01-2018 அன்று பள்ளி வளாகத்தில் அறிவியல் மற்றும் இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுடைய அறிவியல் படைப்புகளை அனைவருடைய பார்வைக்காகவும் வைத்திருந்தனர். இந்த கண்காட்சியை பற்றி பள்ளியின் தாளாளர் ஜாஃபிர் சுலைமான் கூறுகையில், “இந்தக் கண்காட்சி மாணவர்களின் அறிவுத் திறன் மற்றும் ஆளுமைத் திறனையும் வளர்க்க உதவுகிறது. மேலும் இந்த கண்காட்சி அறிவியல் என்ற அடிப்படையில் மட்டுமல்லாமல், இஸ்லாத்தின் குர்ஆன் கூறும் சித்தாந்தந்தங்களை அறிவியல் ரீதியாக நடைமுறை […]
கீழக்கரை மோகன் எலெக்ட்ரானிக்ஸ் சிறந்த விற்பனையாளராக தேர்வு..
2017ம் ஆண்டுக்கான சிறந்த விற்பனை முகவராக கீழக்கரை மோகன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் என சன் டைரக்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான STAR PERFORMER OF THE YEAR என்ற விருதை சன் டைரக்ட் விற்பனையாளர் SAK COMMUNICATION, உரிமையாளர் அமீர்கான், மோகன் எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் மோகனிடம் வழங்கினார். மேலும் மோகன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை கவுரவிக்கும் வகையில் தங்க மோதிரமும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சன் டைரக்ட் பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் – கீழக்கரையில் இருந்து நேரடி வீடியோ ரிப்போர்ட் …
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசும் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதுபோல் தனியார் வாகனங்களும் தங்களால் இயன்ற அளவு பங்களிப்பு செய்து வருகிறார்கள். அது சம்பந்தமாக கீழக்கரை பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட் …
பயனில்லாமல் தெருக்களில் தொங்கும் தொலைபேசி வயர்களின் நிலை என்ன??
கடந்த 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்பு சாதாராண தொலைபேசி மட்டுமே உபயோகத்தில் இருந்து வந்த நிலையில் இன்று 90 சதவீதத்திற்கும் மேலான வீடுகளில் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டு அலைபேசிக்கு மாறிவிட்டார்கள் என்பதுதான் யதார்த்த நிலை. ஆனால் தொலைபேசி இல்லாத தெருக்களில் கூட அதற்காக பயன்படுத்தப்பட்ட வயர்கள் அதனுடைய சந்தை மதிப்பு அறியாமல் தொங்கிய நிலையில் உள்ளது. பல இடங்களில் கேபிள் டி.வி வயர்களும் பழைய தொலைபேசி வயர்களும் அடையாளம் தெரியாத அளவு பிண்ணி பினைந்து கிடக்கின்றன. […]
You must be logged in to post a comment.