கீழக்கரையில் போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது..

கீழக்கரையில் இன்று (28-01-2018) காலை முதல் அரசு சுகாதார நிலையம், பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கீழக்கரை ஹமீதியா பள்ளி, கிழக்குத் தெரு ஜலாலியா மதரசா வளாகம் மற்றும் பல பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் தொடரும் சமூகப் பணிகள்…

கீழக்கரையில் பொதுமக்கள் நலன் கருதி தொடங்கப்பட்ட 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை மாதந்தோறும் தேவையுடையவர்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜனவரி மாதத்திற்கான உணவுப்பொருட்களும் மற்றும் முதியோர்களுக்கான ஊக்கத்தொகையும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மூலம் தேவையுடையோருக்கு வழங்கப்பட்டது. இப்பணிகள் மென் மேலும் சிறந்து வழங்க பொருளாதார உதவியும், மக்களின் பிரார்த்தனையும், ஒத்துழைப்பும் மிக அவசியமான ஒன்றாகும். இந்த நற்காரியத்தில் உங்கள் கரங்களை இணைத்துக்கொள்ள கீழ் கண்ட வங்கி முகவரிக்கு […]

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் நடத்திய கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா …புகைப்படத் தொகுப்புடன்..

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி நடத்தினர். இப்போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு இன்று (27-01-2018) பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆலிம் ஆசிஃப் தலைமை தாங்கி சிறப்புரையாற்றிறார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். புகைப்படத் தொகுப்பு

கீழக்கரையில் 69வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது – களத்தில் இருந்து நூற்று கணக்கான புகைப்படங்களுடன்..

இன்று இந்தியா முழுவதும் 69வது குடியரசு தின விழா கோலாகலமாக்க் கொண்டாடப்பட்டு வருகிறது் இந்நிலையில் கீழக்கரையிலும்  இன்று (26-01-2018) அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை,  காவல் நிலையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிறவனங்கள் மற்றும் இன்னும் பல அரசியல் மற்றும் சமூக அமைப்பினராலும் குடியரசு தின விழா இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு  சிறப்பாக கொண்டாடப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முனைவர், நடராஜன் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிய பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் சுகாதார […]

கீழக்கரை காவல் துறையுடன் பொது நல அமைப்புகள் இணைந்து நடத்திய போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – புகைப்படத் தொகுப்புடன்..

கீழக்கரையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொடரும் வாகன விபத்துக்களை தடுக்கும் விதமாக கீழக்கரை காவல் துறையுடன் பொது நல அமைப்புகள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (25.01.2017) மாலை 5 மணியளவில் ஹூசைனியா மஹாலில் கீழக்கரை கோட்டம் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் திலகவதி வரவேற்புரை ஆற்றினார். முகம்மது சதக் பாலிடெக்னிக் பேராசிரியர். முனைவர் அலாவுதீன், கீழக்கரை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் செய்யது ஜகுபர் […]

முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம்..

முகம்மது சதக் பாலிடெக்னிக் வளாகத்தில் 23-01-2018 அன்று ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் டி.வி.எஸ் சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அலாவுதின் தலைமையுரையாற்றினார். கல்லூரி துணை முதல்வர் சேக்தாவுது மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். மரியதாஸ் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்றார். இந்த வேலை வாய்ப்பு முகாமில் டிப்ளமோ மின்னியல், இயந்திரவியல், மின்னணுவியல் துறை மற்றும் தொடர்பியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் டி.வி.எஸ் சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் நிறுவன […]

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு..

ஜனவரி 25ம் தேதியான இன்று இந்தியா முழுவதும் வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கல்லூரி மற்றும் பள்ளி நிலையங்களில் மாணவ, மாணவிகளுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இன்று (25-01-2018) கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நகராட்சி அலுவலர் சக்திவேல் உறுதி மொழி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் MM.மௌலா முகைதீன், கல்விக்குழு துணைத் தலைவர் MMS.முகைதீன் இப்ராஹிம், பொருளாளர் சேகு பசீர் மரைக்கா, இணை செயலாளர் MAY.ரஃபீக் […]

கீழக்கரை காவல் துறையுடன் பொது நல அமைப்புகள் இணைந்து நாளை நடத்தும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தடுப்பு நிகழ்ச்சியில் ADSP வெள்ளத்துரை சிறப்புரை..

கீழக்கரை நகரில் கடந்த சில ஆண்டுகளாக வாகன போக்குவரத்து நெரிசல் சொல்லொண்ணா துயரத்தை பொதுமக்களுக்கு தந்து வருகிறது. கீழக்கரையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வாகன பெருக்கத்தால் சாலைகள் முழுமையும் எந்நேரமும் வாகனங்கள் நிரம்பி இருக்கிறது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்படும் வாகன ஓட்டிகளால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணாக்கர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவர்களால் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்களால் தொடர்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. இது சம்பந்தமாக கீழக்கரை காவல் துறையுடன் பொது […]

நகராட்சியை நவீன படுத்த வந்த உபகரணங்கள், நலிந்து கிடக்கும் அவலம்..

கீழக்கரை நகராட்சியின் சுகாதாரம்தை மேன்படுத்த போவதாக அறிவித்து, அதற்கான நவீன கம்பெக்டர் வாகனம் மற்றும் நவீன ?? குப்பைக் கொட்டும் தொட்டிகளும் பல லட்சம் ரூபாய் செலவில் வந்திறங்கி, நகராட்சி ஆணையரால் அத்திட்டம் தொடங்கியும் வைக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் தொடங்கி சில தினங்களிலேயே மக்கள் பெரும் அவதிக்கும், அதிருப்திக்கும் ஆளாகியுள்ளார்கள், காரணம் முறையான பயிற்சி எடுக்காமல் கம்பெக்டர் வாகனம் மூலம் குப்பைகளை அள்ளுவதால், கழிவுகள் சாலைகளிலும் சிந்துகிறது. அதே போல் 4 சக்கரங்களுடன் வாங்கப்பட்ட குப்பை கொட்டும் […]

கீழக்கரையில் காவல்துறை அதிகாரி தலைமையில் போக்குவரத்து நெரிசல் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம்..

கீழக்கரையில் இன்று (21-01-2018) காவல்துறை ஆய்வாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் காவல் நிலைய அலுவலகத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பல் வேறு சமூக அமைப்புகள் ,வர்த்தக அணி மற்றும் அரசியல் கட்சிகள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.  காவல்துறை ஆய்வாளர் பேசுகையில் நிர்ணயிக்கப்பட்ட பயணிகள் அளவுக்கு மேலாக ஆட்டோக்களில் பொதுமக்கள் பயணம் செய்தல்,  முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அதி வேகமாக வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபரீதம் மற்றும் அதன் விளைவுகளை விளக்கினார். ஊருக்ககுள் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது […]

இராமநாதபுரம் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளியில் தேசிய தீ விபத்து தடுப்பு தினம்..நேரடி வீடியோ ரிப்போர்ட் மற்றும் புகைப்பட தொகுப்பு..

இராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் மேல் நிலை பள்ளியில் 20-01-2018 அன்று தேசிய தீ விபத்து தடுப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அலுவலர் சாமிராஜ் தலைமை வகித்தார். மேலும் நிலைய அலுவலர் நாகராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னனி தீயணைப்பு வீரர்கள் ராஜேந்திரன் மற்றும் கேசவன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் விபத்து ஏற்பட்டால் முதலுதவி கொடுக்கும் முறை, வீட்டில் மற்றும் வெளியிடங்களில் […]

தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்..

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை – தேசிய பசுமைப்படை இராமநாதபுரம் வருவாய் மாவட்டத்தில் உள்ள 250 தேசிய பசுமைப்படை அமைவுப்பள்ளிகளின் ஒருங்கிணைப்பு ஆசிரியர்களுக்கு 1 நாள் பயிற்சி முகாம் இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் 20.01.2018 சனிக்கிழமை நடைபெற்றது.  பயிற்சி முகாமிற்கு இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகன் தலைமை வகித்தார். இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் டி.பிரேம் மற்றும் பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் அண்ணாமலை ரஞ்சன் முன்னிலை வகித்தார். இம்முகாமிற்கு சிறப்பு […]

கீழக்கரை நகராட்சியில் ”பேவர் ப்ளாக்” வேலை தொடங்கியது … இப்பொழுது “நிலைக்குமா” அல்லது மீண்டும் “பிளக்குமா”…

கீழக்கரை நகராட்சியில் கடந்த ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் பல இடங்களில் மண் சாலைகள் மற்றும் தார் சாலைகள் இருந்த இடத்தில் பேவர் ப்ளாக் சாலைகள் அமைத்தார்கள். நகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த பணியில் முறைகேடு என்றும், தரம் இல்லை என்றும் பல் வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதே போல் சமூக ஆர்வலர்கள் மூலமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்கள் பெற பட்ட பொழுது தொடர்ந்து சில குறிப்பிட்ட குத்தகைகார்ரகளுக்கே ஒப்பந்தம்  வழங்கப்பட்டதும் தெரிய வந்தது. இச்சூழலில் […]

சாயல்குடி பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு..

ராமநாதபுரம் மாவட்டம்.,சாயல்குடி பேரூராட்சி இருவேலிப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து,அப்பகுதி பொதுமக்கள் , அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

“மொழிமின்” நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.. புகைப்படத் தொகுப்பு..

எழுத்தாளர் நூருத்தீன் எழுதிய மொழிமின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை புத்தகக் காட்சியில், நிலவொளி பதிப்பகத்தின் அரங்கு எண்:13-இல், 19/01/2018 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நிகழ்வுற்றது. இந்நிகழ்வு கீழை பதிப்பகம் முஸம்மில் முன்னிலையில் இந்நூலை வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் S.N. சிக்கந்தர் வெளியிட்டார். ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் சென்னை மாநகர தலைவரும் BAPASI செயற்குழு உறுப்பினருமான K.ஜலாலுதீன் பெற்றுக்கொண்டார். பின்னர் S.N. சிக்கந்தர் வாழ்த்துரை வழங்கினார். புகைப்படத் தொகுப்பு 

முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் பல சமூக அமைப்புகள் இணைந்து தேசிய இளையோர் தினம் மற்றும் தமிழர் திருநாள்.. புகைப்படத் தொகுப்புடன்..

நேரு யுவ கேந்திரா, இராமநாதபுரம் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி – மகளிர் மேம்பாட்டு அமைப்பு கீழக்கரை மற்றும் கீழக்கரை ரோட்டரி சங்கம் – முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் ரோட்ராக்ட் அமைப்புகள் இணைந்து தேசிய இளையோர் தின விழா மற்றும் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்நிகழ்வில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் A. அலாவூதின் தலைமை வகித்தார். வரவேற்புரையை திருமதி. உமையாள், மேலாளர், மகளிர் மேம்பாட்டு அமைப்பு வழங்கினார். அதைத் […]

உள்ளம் கவர்ந்த துபாய் – உலகத்தை கவரும் நாடாக மாறி வருகிறது.. SAFARI PARK ஒரு பார்வை..

“என்ன வளம் இல்லை” என் திருநாட்டில் என்று பாடிய இந்திய நாட்டில் அனைத்து வளமும் அந்நிய நாட்டுக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் “எண்ணெய்” வளத்தை மட்டும் நம்பி உருவாகிய அமீரகத்தில் உள்ள துபாய், இன்று “என்ன” வளம் எங்களிடம் இல்லை என கேட்கும் அளவுக்கு, உலகையே தன் பக்கம் ஈர்க்கும் அளவுக்கு தொழில் துறை முதல் சுற்றுலா துறை உலகில் முதல் இடத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார்கள்.  அந்த வரிசையில் இப்பொழுது சேர்ந்திருப்பதுதான் “DUBAI SAFARI […]

கீழக்கரை தஃவா குழு சார்பாக மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது…

கீழக்கரை தெற்குத் தெரு குளத்து மேடு மைதானத்தில் “கீழக்கரை தஃவா குழ” சார்பாக ஏற்பாடு செய்திருந்த  மார்க்க அறிஞர்கள் பங்கேற்ற சொற்பொழிவு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் ஏராளமான ஆண்கள், தாய்மார்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். புகைப்படத் தொகுப்பு

கண்ணாடி வாப்பா பள்ளி மாணவர்கள் கிக்-பாக்சிங்கிள் பல பதக்கங்கள் வென்று சாதனை -வீடியோ காட்சிகளுடன் ..

மஹாராஷ்ட்ரா மாநிலம் புனே நகரில் நடைபெற்ற இந்திய ஓப்பன் தேசிய கிக்-பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கீழக்கரை கண்ணாடிவாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் மொத்தம் 9 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். இந்திய கி்க்-பாக்ஸிங் அமைப்புகளின் சங்கம் (Indian Association of Kickboxing Organization) சார்பில், மஹாராஷ்ட்ரா கிக்-பாக்ஸிங் அமைப்பின் (Kickboxing Association of Maharashtra) மூலம் புனே நகரில் ஜனவரி 10 முதல் 13 வரை 7-வது இந்திய ஓப்பன் தேசிய கிக்-பாக்ஸிங் சாம்பியன்ஷிப் (7th Indian […]

மதுரை ஜல்லிக்கட்டு ஒருவர் பலி..

பாலமேட்டில் நடந்த ஜல்லிகட்டில் காளிமுத்து, வயது 19 மாடு பிடிக்கும் வீரர் போட்டியை பார்த்து கொண்டிருக்கும் பொழுது மாடு முட்டியதில் பலியானார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!