கீழக்கரை அல் பையினா பள்ளி மாணவர்களுக்கு உலக கல்வியை மட்டும் போதிக்காமல், மறுமை வாழ்கையை மாணவர்கள் மேம்படுத்துவதற்கான அனைத்து போதனைகளும் மாணவர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அதன் வரிசையில் படிக்கும் வயதில் மாணவர்கள் வாய் இல்லா ஜீவராசிகளை மனித நேயத்துடன் பேண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு ஆடு போன்ற கால்நடைகளுக்கு உணவளித்தல், நீர் வழங்குதல் போன்ற விசயங்களை மாணவர்கள் மத்தியில் செய்து காண்பித்து நற்போதனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் […]
Category: போட்டோ கேலரி
இஸ்லாமியா பள்ளி மாணவன் விபத்தில் பலி – தாளாளர் இரங்கல் – இன்று மாலை பள்ளி (09-04-2018) விடுமுறை..
நேற்று 8/4/2018 மாலை 06.30 மணி அளவில் ஏர்வாடி பகுதி புது மாயாகுளம் அருகே சாலையோரம் நடந்து சென்ற கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் சுகாஸ் என்பவரை பின்னால் இருந்து வந்த சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்து, இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து விட்டார். மாணவனின் ஆத்மா சாந்தமடைய இறைவனை பிரார்த்திப்பதோடு, குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை பள்ளி நிர்வாகம் […]
வெறிச்சோடிய கீழக்கரை சாலைகள், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திமுக விடுத்த போராட்டம் முழு வெற்றி…
தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டின் எதிர்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமை கட்சி சார்பாக முழு கடை அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. திமுக அழைப்பை ஏற்று பல் வேறு அமைப்புகளும், வர்த்தகர் சங்கங்களும் ஆதரவளித்தனர். இந்த கடையடைப்பு காரணமாக தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலைக்கு வந்துள்ளது. கீழக்கரையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதே போல் வாகன ஓட்டுனர்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் […]
“முஹம்மது சதக் பொறியியல்” கல்லூரியின் 1984-88 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி..
கீழக்கரை “முஹம்மது சதக் பொறியியல்” கல்லூரியின் “1984-88 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி” கல்லூரி; முதல்வர் முனைவர். அப்பாஸ் மைதீன் தலைமையிலும், கல்லூரி டீன். முனைவர் முஹம்மது ஜஹாபர் மற்றும் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் முன்னிலையிலும் நடைபெற்றது. கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் தனது தலைமையுரையில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நாம் அனைவருக்கும் பழைய கல்லூரி […]
மண்டபத்தில் மீனவ கூட்டுறவு சங்க தேர்தல் அதிமுக அணி வெற்றி..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் FRD 27 மண்டபம் வடக்கு மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 26-ம் தேதி வேட்புமனுக்கள் பெறப்பட்டது. 27 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 27-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் 8 மனுக்கள் திருப்ப பெறப்பட்டது. இதில் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் மீதமுள்ள 18 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர். 18 வேட்பாளர்களும் தீவீர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு […]
இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் யூனியன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் யூனியன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணம் கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள் கடலோர ஒழுங்கு முறை மண்டலம் CRz 1 க்கு பதிலாக CR Z4 ஐ செயற்கை கோள் மூலமாக கடற்கரை பகுதிகளை படம் எடுத்து இப்போது நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதன் மூலம் கடற்கரை கடற்கரையை சார்ந்த […]
கீழக்கரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முழு கடையடைப்பு – வர்த்தகர் சங்கம் முழு ஆதரவு – சங்க செயலாளர் அறிக்கை..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசயத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் விதமாக நடக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை (04/04/2018) தமிழ்நாட்டில் உள்ள எதிர்கட்சி மற்றும் அதன் தோழமை கட்சிகளும் முழு கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர். அதன் அடிப்படையில் நேற்று (03/04/2018) கீழக்கரை திமுக நகரச் செயலாளர் பசீர், கீழக்கரையில் உள்ள வர்த்தகர் சங்கம் மற்றும் ஓட்டுநர் சங்கங்களுக்கும் கடையடைப்பில் கலந்து கொள்ளுமாறு நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று (04/04/2018) நடந்த வர்த்தகர் சங்க கூட்டத்தில், […]
இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் சுங்கத்துறையால் பறிமுதல் – கடத்தல் காரர்கள் தப்பியோட்டம்…
இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் ஏற்றிக்கொண்டிருந்த ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல்அட்டை கொண்ட பத்து மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுபடகும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கடத்தல்காரர்களை சுங்கத்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து பதப்படுத்தப்பட்ட கடல்அட்டையை இலங்கைக்கு கடத்திச்செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சுங்கத்துறையினர் வேதாளை கடற்கரையை சுற்றிவளைத்து சோதனை செய்தபோது சந்தேகம் இடமான வகையில் நின்று கொண்டிருந்த படகை சோதனை செய்தனர், அதில் கடல்அட்டை […]
கீழக்கரையில் புதிய மருந்தகம் திறப்பு..
கீழக்கரையில் இன்று (28-02-2018) புதிய மருந்தகம் “அப்போலோ ஃபார்மஸி” திறக்கப்பட்டது. இப்புதிய மருந்தகத்தை அந்நிறுவனத்தின் மேலாளர் சிவகுமார் திறந்து வைத்தார். இப்புதிய மருந்தகம் மணீஸ் பேக்கரி ஆட்டோ ஸ்டான்ட் எதிரில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில் அமைந்துள்ளது.
தாசிம்பீவி கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்..
கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 10 மற்றும் 11ம் தேதிகளில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கம் SKILLED YOUTH PROFESSIONAL ASSOCIATION (SYPA) மற்றும் JANSEVA (வட்டியில்லா வங்கி) ஆகிய அமைப்புடன் இணைந்து தாசிம் பீவி மகளிர் கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கருத்தரங்கில் கல்லூரி பெண்கள் மட்டும் குடும்ப பெண்கள் கலந்து கொள்ளலாம், இதற்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் […]
கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளயில் அறிவியல் கண்காட்சி – புகைப்பட தொகுப்பு…
இந்தியாவில் ஃபிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளியில் இன்று (28-02-2018) பள்ளி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் அனைத்து வகுப்புகளில் இருந்தும் பல மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்காண்காட்சியில் மரம் வளர்த்தல், இயற்கை வளத்தை பேணுதல், பூகோள அமைப்பு, கோள்கள் அமைப்பு, விஞ்ஞான வளர்ச்சி, தகவல் தொடர்பு வளர்ச்சி, இயற்கையோடு இணைந்நு வாழ்தலின் அவசியம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போன்ற செயல்பாடுகளை விளக்கும் வண்ணம் பள்ளி […]
மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம் “THEMIDA-18”
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத்துறையின் சார்பாக மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் “THEMIDA-18” மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமையேற்று துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், “கணினித்துறையில் மிகவேகமாக வளர்ந்து வரும் பல தொழில்நுட்பங்கள் மனிதரின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மனிதருக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது. அதுமட்டுமன்றி இன்று மருத்துவத் துறையில் பிரம்மிக்கும் வகையில் அறுவைச் சிகிச்சையிலும் […]
உயரழுத்த மின் டவர் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி..
இராமநாதபுரம் பரமக்குடி காக்கா தோப்பு அருகே முருகன் 34, என்ற இளைஞர் மது போதையில் உயரழுத்த மின் டவர் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபரம் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞரை சமாதானப் படுத்த முயற்சித்தனர். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் போதையில் இருந்த வாலிபர் கீழே இறங்கி வர மறுப்பு. இந்த வாலிபர் தமிழக அரசு சார்பில் மானிய விலையில் வழங்மும் […]
ஜித்தாவில் “FRIENDS REPUBLIC CLUB” நடத்திய மாபெரும் வாலிபால் போட்டி..
தமிழகம், கேரளா மக்கள் மற்றும் அதிகமான கீழக்கரை இளைஞர்கள் இணைந்து கடந்து வருடம் ஆரம்பிக்கப்பட்ட கிளப் “FRIENDS REPUBLIC CLUB”. இந்த கிளப் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (23-02-2018) அன்று பல நாட்டு வீரர்கள் கலந்து கொண்ட மாபெரும் வாலிபால் போட்டி பின்மாலிக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் லெபனான், சிரியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா கிளப்கள் சார்பாக பல அணிகள் மோதினர். இறுதியாக முதல் பரிசு சவுதி ரியால்.5000/- மற்றும் கோப்பையை அஜீசியா கிளப் வென்றது. […]
கச்சத்தீவு அந்தோனியர் ஆலய திருவிழா.. ஏராளமானோர் பங்கேற்பு..
கச்சத்தீவு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 1532 ஆண் பக்தர்களும், 336 பெண் பக்தர்களும், ஆண் குழந்தைகள் 29 மற்றும் பெண் குழந்தைகள் 23 பேர் என 1920 பக்தர்கள் இன்று நண்பகல் கச்சத்தீவு சென்றனர். இலங்கையில் இருந்து சிங்களம் மற்றும் தமிழ் பக்தர்கள் என 6500 பக்தர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்திற்கு சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரத்தால் ஆன 40 அடி உயரமுள்ள கொடி மரத்தை தமிழக பக்தர்களால் […]
கீழக்கரையில் கூடுதலாக ஒரு அரசியல் அமைப்பு தொடக்கம்..
தமிழக மக்கள் நல சங்கத்தின் கீழக்கரை கிளை இன்று தொடங்கப்பட்டது. இதற்கான கூட்டம் இன்று (24-02-2018) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 75கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். இந்த சங்கம் வரும் மார்ச் மாதம் முதல் அரசியல் கட்சியாக செயல்படும் என்று அறியப்படுகிறது. இச்சங்கத்தின் கீழக்கரை கிளை தலைவராக செல்வம், செயலாளராக பெருமாள், பொருளாளராக தங்கராஜ், துணை தலைவராக சசிகுமார், நகர் துணை தலைவராக ஹாஜா முகைதீன், துணை செயலாளராக பிரவீன்குமார் மற்றும் நகர் இளைஞர் அணி […]
மலேசியாவில் உலக தமிழர் எழுத்தாளர் மாநாடு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..
நாளை (25-02-2018) மலேசியாவில் உலக தமிழர் எழுத்தாளர் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து மலேசியா கிளம்பினார். அப்பொழுது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:-மலேசியாவில் 25-ந்தேதி உலக தமிழர் எழுத்தாளர் மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் சிறப்பு அழைப்பாளராக என்னை அழைத்து இருக்கிறார்கள். அழைப்பை ஏற்று செல்கிறேன். காவிரிநீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படுத்த […]
கீழக்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை கீழக்கரை டிடிவி அணி நகர் செயலாளர் கே.ஆர்.சுரேஷ் முன்னாள் கவுன்சிலர் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், முன்னாள் வாரியதலைவர் ஜி.முனியசாமி, மகளிர் அணி இணை செயலாளர் கவிதா, ஒன்றிய செயலாளர் முத்து செல்வம், மாவட்ட பிரதிநிதி டாக்டர்.சிவக்குமார், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் சங்கர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து மறவர் தெரு 1வது வார்டில் உள்ள அரசு […]
ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடையை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டம் வலுக்கிறது. தமுமுக தலைவர் கண்டனம் – முழுத் தொகுப்பு..
கடந்த வாரம் ஜார்கண்ட் மாநில அரசு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை எந்த வித ஆதாரப்பூர்வமான காரணங்கள் இல்லாமல் அம்மாநிலத்தில் சிறுபான்மையினரின் உரிமையை நசுக்கிம் வண்ணம் தடை செய்தது. இந்நிலையில் அத்தடையை நீக்க கோரி PFI மற்றும் அதன் தோழமை அமைப்புகளும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று தமிழகம், கேரளா இன்னும் பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் வட மாநிலங்களான ராஜஸ்தான் போன்ற இடங்களிலும் தடையை கண்டித்து கண்டன ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இத்தடையை […]
கீழக்கரை லெட்சுமிபுரத்தில் வயர் திருடிய இருவர் கைது..
கீழக்கரை லெட்சுமிபுரத்தில் அமைந்துள்ள ஒரு தோப்பில் மின் வயர்கள் திருடிய இருவர் கைது இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இத்திருடர்களை புதிதாக பதவியேற்ற காவல் கண்காணிப்பாளர் ரவிசந்திரன் அதிரடி நடவடிக்கையாக கைது செய்துள்ளார். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பாண்டி வயது 27 மற்றும் செளந்திர பாண்டி வயது 29 ஆகிய இருவரும் திருப்புல்லாணி அருகில் உள்ள தண்டரனேந்தல் பகுதியை சேர்ந்தவர்கள். இத்திருடர்களிடமிருந்து ₹. 50,000/- மதிப்புள்ள வயர்கள் மற்றும் பைக் ஒன்றும் கைப்பற்ற பட்டது. இச்சம்பவத்தை கீழக்கரை […]
You must be logged in to post a comment.