இவள் ‘அவள்’ இல்லையா?? – ஒரு கண்டன பதிவு..

நிர்பயா,  இந்தப் பெயரை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த டிசம்பர் 16,  2012 அன்று  இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் நகரில் வலம் வந்த பொழுது, அரசு வாகன ஓட்டுநர் மற்றும் நண்பர்கள் 6நபர்களால் பலாத்காரம் செய்து சாலையில் வீசிய பொழுது சாமனிய பெண் முதல் இந்தியாவின் பெண் மந்திரிகள் வரை தெருவில் இறங்கி பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக ஓங்கி குரல் கொடுத்தனர்.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வரை இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. அனைத்து ஊடகங்களும் இந்த வழக்கைப் பற்றி […]

மண்டபம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி போராட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தங்கை ஆசிஃபா வின் பாலியல் படுகொலைக்கு நீதி வேண்டியும், அதற்கு காரணமான காட்டுமிராண்டிகளுக்கு விரைவில் தூக்குத் தண்டனை வழங்க வழியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த மனிதாபிமானமற்ற செயலை ஆதரித்தும்,  குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய,  பாஜக அமைச்சர்களையும் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களிலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக கருத்துச் சொல்லும் பாஜக காட்டுமிறாண்டிகளையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இச்செயலுக்கு இந்திய பிரதமர் மோடி பொறுப்பேற்று […]

இராமேஸ்வரம் குந்து காலில் ரூ 70 கோடியில் மீன்பிடி இறங்குதளம் மீனவர்களிடம் ஆலோசனை..

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திலுள்ள குந்துகாலில் ரூபாய் 70 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்குதளத்தை ஒன்றரை வருடங்களில் கட்டிமுடிக்கப்பட்டு மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தமிழக மீன்வளத்துறையின் முதன்மைசெயலாளர் கோபால் தெரிவித்தார். இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் இருந்து பாக்ஜலசந்தி  கடற்பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது  இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து வருகிறது, இது போன்ற சம்பவங்கள்  இன்றல்ல நேற்றல்ல கடந்த 30 வருடங்களாகவே இலங்கை கடற்படையால் இந்திய […]

மூன்று நாள் தொடர் மழையில் ஈரமாகிய நிலங்கள்.. நோயின் பயத்தில் மக்கள்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த மூன்று தினங்களாக கோடை காலத்தை வரவேற்கும் விதமாக அடை மழை பெய்தது.  இதனால் மக்கள் மனதும், நிலங்களும் குளிர்ச்சி ஆனது. ஆனால் செயல்பாடு இல்லாமல் இருக்கும் நகராட்சியை நினைத்து மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.  அதிகாரிகள் இல்லாத நிர்வாகம், சீர் இல்லாத நிர்வாகமாகவே மாறியுள்ளது. மழை பெய்து மூன்று நாட்கள் ஆகியும் சாலைகளில் தேங்கி கிடக்கும் கழிவு நீரை சீராக்க எவ்விதமான முயற்சியும் எடுக்கவில்லை.  டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்கனவே […]

தவ்ஹீத் ஜமா அத் சார்பாக முக்குரோடு பகுதியில் மோர் பந்தல்…

கீழக்கரை முக்குரோடு பகுதியில் இன்று (14/04/2018) காலை முதல் தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக பொதுமக்களுக்கு மோர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அப்பகுதியில் இருந்து ஏர்வாடி, இராமநாதபுரம் வழியாக வெளியூர் செல்ல  காத்திருப்பவர்களுக்கும்,  அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கும் மோர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பாக பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை..

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக புல்லந்தையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தென்மண்டல செயலாளர் இளங்கோ, மாவட்டசெயலாளர் பத்மநாபன், திருப்புலானி ஒன்றிய செயலாளர் சேக் அப்துல்லாஹ், கீழக்கரை செயலாளர் பிரபாகரன், இணைச்செயலாளர் ஹபில் ரஹ்மான்,  தலைவர் சுகுமார், துணைத்தலைவர் காசிம், பொருளாளர் அயன்ராஜ்,  வீரத்தமிழர் முன்னனி செயலாளர் வாசிம், இளைஞர்பாசறை பொறுப்பாளர் மகேந்திரன்,  துபாய் செந்தமிழ் பாசறை ஒருகிணைப்பாளர் யாசீர் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து […]

மீன்பிடி தடை காலம் நாளை (15/04/2018) தொடக்கம்.. மீனவர்கள் கோரிக்கை இந்த வருடம் நிறைவேறுமா??

மீன்வளத்தை பாதுகாக்க வருடந்தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே மாதம் இறுதிவரை தமிழக கடல் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடை காலம் நாளை முதல் தொடங்குகிறது. இதன் காரணமாக ராமேசுவரம் மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்படும். மீன்பிடி தடை காலம் தொடங்கியுள்ளதால், கடலோர மாவட்டமான கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், சென்னை உள்ளிட்ட […]

கீழக்கரையில் சூறாவளிக் காற்றுடன் மழை..

கீழக்கரையில் நேற்று ((13/04/2018) திடீரென பலத்த  சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இன்று (14/04/2018) கோடை மாதமான சித்திரை பிறந்த நிலையில் திடீர் மழை கீழக்கரை மக்கள் மத்தியில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியா தம்மாம் மாநகரில் கீழக்கரை மக்கள் சங்கமம்..

நேற்று வெள்ளிக்கிழமை பகல் சவூதி அரேபியா தம்மாம் மாநகரில் கீழக்கரை மக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் கீழக்கரையை சார்ந்த 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டிகளை பிரபுக்கள் தெரு ஃபுர்கான் நடத்தி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தம்மாம் சோஷியல் ஃபோரத்தின் ரூரல் ஏரியா தலைவர் ரமீஸ்தீன்,சோஷியல் ஃபோரத்தின் முன்னாள் மத்திய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பணிநியமன ஆணை மற்றும் கல்வியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா…

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியும், இந்திய தொழில்நுட்பக்கழக மாணவர் கூட்டமைப்பும் இணைந்து பணிநியமன ஆணை மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையிலும்,  கல்லூரி டீன் முனைவர். முஹம்மது ஜஹாபர்,   செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன்  முன்னிலையிலும் நடைபெற்றது. ​ கல்லூரி துணை முதல்வர் […]

இலங்கையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு கடந்த முயன்ற 2கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.

இராமேஸ்வரத்தை சுற்றியுள்ள கடற்பகுதி இலங்கைக்கு மிக அருகாமையில் இருப்பதால் இலங்கையில் இருந்து இராமமேஸ்வரத்திற்கும் – இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கும் போதை பொருட்கள், மாத்திரைகள், கடல் அட்டை மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட  பொருட்கள் கடத்துவது வாடிக்கையாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் வழக்கம் போல் ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது யாழ்ப்பாணம் அருகேயுள்ள   பேசாலை பகுதியில் இருந்து இராமேஸ்வரத்தை நோக்கி சந்தேகத்திற்குறிய முறையில்  ப்ளாஸ்டிக் படகு ஒன்று சென்று கொண்பிருந்தது. இதனையடுத்து அந்த […]

மண்டபம் அருகே 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது..

மண்டபம் அருகேயுள்ள வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கள்ளதோணி மூலம் கடத்த வைத்திருந்த 1கோடி மதிப்பிலான  140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் 4 பேரையும் மற்றும் அவர்கள் வைத்திருந்த 7 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் மூன்று கார்களையும் பறிமுதல் செய்து மண்டபம் க்யூபிரிவு போலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்துள்ள  வேதாளை தென் கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கள்ளதோணி மூலம் கஞ்சாவை கடத்த இருப்பதாக மண்டபம்  கியூபிரிவு […]

இராமநாதபுரம் அரண்மனை முன்பு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் அரண்மனை முன்பு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையிலும்,  மாவட்ட செயலாளர் லிங்கத்துரை முன்னிலையிலும் நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து   பொருளாளர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் வரவேற்புரையாற்றினார்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், […]

கீழக்கரை புதுத்தெரு MYFA சங்கம் சார்பாக நடைபெற்ற கைப்பந்து போட்டி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 10-04-2018 அன்று புதுத்தெரு   முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA)  நடத்திய மாநில அளவிலான 4ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி மிக சிறப்பாக, அத்தெரு குளத்துமேட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த கைப்பந்து போட்டியில் MYFA  அணி முதல் பரிசாக  ₹.15,000/- மற்றும் கோப்பையை  கைபற்றியது. அதே போல் இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, நான்காம் பரிசு மற்றும் சிறப்பு பரிசுகளை  MFC (மயிலாடுதுரை) அணியினர், IVC (கீழக்கரை) அணியினர்( MYFA […]

வேதாளை அரசு பள்ளியில் 99-ம் ஆண்டு விழா…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளையில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 99-ம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்மவிழா ண்டபம் உதவி தொடக்க கல்வி அலுவலர் P.சுதாமதி தலைமையில் நடைபெற்றது.  இவ்விழா மண்டபம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் M.ஆரோக்கிய ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் ஐய்யப்பன் வரவேற்று பேசினார்.  பள்ளி தலைமை ஆசிரியர் மு.சாந்தி ஆண்டறிக்கையை வாசித்தார். நிகழ்ச்சியில் படிப்பில் முதல் மாணவராக வெற்றி பெற்றவர்களுக்கும், மற்றும் […]

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 18வது ஆண்டு விழா..

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 07.04.2018 அன்று காலை 10.30 மணியளவில் 18-வது ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமையேற்று ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்கள் இராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை மற்றும் இராமநாதபுரம் கல்வியியல் கல்லூரி மற்றும் புனித ஆந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும் மற்றும் மதுரை, இராமநாதபுர மறைமாவட்ட திருமண்டில சட்ட ஆலோசகருமான P. மனோகரன் மார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். […]

அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் ..

இராமநாதபுரம் அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் தலித் இன மக்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய மோடி அரசை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதம் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்றன முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் முன்னிலை வகித்தார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் செல்லத்துரை, மாநில பேச்சாளர் ஜெய்னூல் ஆலம் கருணா கரண், மாவட்ட துணை […]

சூரைக்காற்றின் வேகத்தால் கடல் சீற்றம், விசைப்படகு நாட்டுபடகுகள் சேதம்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் குறைவாக காணப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்து வருகின்றது. இதனால் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடையும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை காற்றின் வேகம் அதிகரித்து சூரை காற்றாக மாறியதில் ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு நாட்டுபடகுகள் மற்ற படகுகளுடன் மோதி படகு முழுவதும் சேதமடைந்து […]

அமீரகத்தில் தொழில் துறை அமைச்சர் – புத்தகம் வெளியீடு மற்றும் தொழில் முனைவோருக்கான ஆலோசனைக்கூட்டம்..

சமீபத்தில் தாயகத்திலிருந்து துபாய் வருகை தந்த தொழில்துறை அமைச்சர் சம்பத்துடன் துபாயில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பல் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்தில் தொழில் முனைவோருக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டி மைய்யம் துபாயில் அமைக்கப்பட வேண்டும் என்று ஈமான் அமைப்பின் சார்பாக பொது செயலாளர் ஹமீது யாஸீன் அமைச்சரிடம் கோரிக்கையை எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்வில் ஈமான் அமைப்பை சார்ந்த துணை பொதுச்செயளாலர் மொகைதீன், தொழில் அதிபர் ஏ.எம்.முகைதீன், ஜமால் முகைதீன் […]

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு புது வாழ்வு திட்ட பணியாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் நுழைவு வாயிலில் தமிழ்நாடு புது வாழ்வு திட்ட பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக அனைத்து ஊராட்சிகளிலும் மீண்டும் புது வாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதியான ஏற்கனவே புதுவாழ்வுரிட்டம் 1ல் பணி செய்த பணியாளர்களே புது வாழ்வு திட்டம் 2ல் பணி செய்வார்கள் என்பதை நிறைவேற்றுதல், உயர் நீதிமன்ற தடை ஆணையை ஏற்று ஆள் தேர்வு முறைக்கான […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!