கீழக்கரை நகர் எஸ்.டி. பி.ஐ கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது..

கீழக்கரை நகர் SDPI கட்சி  சார்பாக 27-04-2018 அன்று  மாலை 7.00மணியளவில் மத்திய பா.ஜா.க ஆட்சியில் மக்களின் நிலை என்ற தலைப்பில் முஸ்லிம் பஜார் லெப்பை டீக்கடை அருகே  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர தலைவர் அஸ்ரஃப் தலைமை தாங்கினார்.  அதன் தொடர்ச்சியாக தொகுப்புரையை செயற்குழு உறுப்பினர் அஹமது நதீர், வரவேற்புரையை  நூருல் ஜமான் நகர் துணை தலைவர்(SDPI. கட்சி) ஆகியோரும் வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு நகர் செயலாளர் காதர், கிழக்கு  தெரு ஜமாத் துணை பொருளாளர். […]

கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற இராமேஸ்வரத்தில் சிறப்பு யாக பூஜை..

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இராமேஸ்வரத்திற்கு நேற்று (27/04/2018)  மாலை வந்தார். இரவு இராமேஸ்வரம் அரசு விடுதியில் தங்கிய அவர் இன்று காலை இராமநாதசுவாமி கோயிலில்  அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை சிறப்பு  கலச பூஜை நடத்தினார். அதன்பின்னர் காசி விஷ்வநாதர் ஆலயம் முன்பு சுமார் 16 குருக்கள் களை கொண்டு  சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. அதன் பின்னர் மூன்றாம் பிரகாரத்தை சுற்றிவந்த அவர் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதியில் சுவாமி தரிசனம் […]

இராமநாதபுரம் சிஎஸ்ஐ கல்வியல் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக ரத்த தான முகாம்..

இராமநாதபுரம் மாவட்டம் சிஎஸ்ஐ கல்வியல் கல்லூரியில் இன்று (28/04/2018) காலை 11 மணியளவில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக ரத்த தான முகாம் நடந்தது. இந்த முகாமை டாக்டர் தேவமனோகரன் மார்டின் தலைமையில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஹாருண் முன்னிலையில் சுமார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.  இம்முகாமில் செய்யது ஹமிதா கல்லூரியின் உதவி பேராசிரியர் மோகனமுருகன் 65 வது முறையாக ரத்ததானம் வழங்கினார். இதற்கு முன்னதாக […]

வடக்குத்தெரு சமூக நல அமைப்பு மற்றும் பிரைட் கிட்னி சென்டர் இணைந்து நடத்தும் மாபெரும் சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்…

கீழக்கரை NASA – வடக்குத்தெரு சமூக நல அமைப்பு மற்றும் மதுரை பிரைட் மருத்துவமனையும்  இணைந்து நடத்தும் மாபெரும் இலவச சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்  3-5-2018 (வியாழக்கிழமை) அன்று  நடைபெற உள்ளது. இந்த முகாம் வடக்குத் தெரு முகைதீனீயா தைக்கா வளாகத்தில் நடைபெற உள்ளது.  இம்முகாம் காலை 09.00 மணி முதல் இநடைபெற உள்ளது.  இந்த முகாமில் மூத்த சிறுநீரக சிறப்பு மருத்துவர் K.முரளிதரன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளார். இந்த மருத்துவ முகாமில் […]

கண்ணீருடன் தினகரன் ஆறுதல்.. தினகரனை தொடர்ந்து கீழக்கரை முன்னாள் நகராட்சி தலைவி ஆறுதல்..

இராமநாதபுரம் சிதம்பரம் பிள்ளை ஊரணியில் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக வர்த்தக அணி செயலாளர் தவமுனியசாமி மர்மநபர்களால் வெட்டப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை காண வருகைதந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரையும்,  அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறி கண்கலங்கினார். இவருடன் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன்,மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், எம்.எல்.ஏக்கள்  தங்கதமிழ்செல்வன், முத்தையா, முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ முருகன், நடிகர் […]

ரியாதில் திடீர் புயல் காற்று..

சவுதி அரேபியா ரியாத் நகரில் இன்று (26-04-2018) மாலை 06.30 மணி முதல் புழுதியுடன் கூடிய கடுமையான புயல் காற்று வீசத் தொடங்கியுள்ளது. அல்கசீம் பகுதியில் காற்று மற்றும் பனிக்கட்டியுடன் தொடங்கிய மழை, ரியாத் நகரை புயலாக தாக்க தொடங்கி உள்ளது. ரியாத் நகரில் தூசி படர்ந்து உள்ளதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரியாத் நகரமே தூசி மழையில் மூழ்கியுள்ளது. இந்த புயல் காற்று நாளை அமீரகம் அபுதாபியை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஆசிஃபாவிற்கு நீதி வேண்டி SDPI கட்சி சார்பாக இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

சமீபத்த்தில் பாலியில் வன்முறையால் படுகொலை செய்யப்பட்ட   ஆசிபாவிற்கு நீதிவேண்டி இராமநாதபுரம் மாவட்டம் SDPI கட்சி சார்பாக நடத்தப்பட்ட இப்பேரணி இராமநாதபுரம் சின்னக்கடை 4 முக்கு ரோடு பகுதியிலிருந்து துவங்கி சந்தை கடையில் இன்று மாலை (24/04/2018) ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த பேரணியில் 8 வயது குழந்தை ஆசிபாவை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்கிற அடிப்படையில்  கண்டன உரையை SDPI  கட்சி மாநில  பொது செயலாளர் அப்துல் ஹமீது […]

கீழக்கரை காவல் ஆய்வாளருக்கு பிரிவு உபச்சார விழா…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் திலகவதி. அவர் தற்சமயம் சிபிசிஐடிக்கு மாற்றலாகி  செல்கிறார். மாற்றலாகி செல்லும் திலகவதிக்கு காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், சார்பு ஆய்வாளர்கள் செந்தில் முருகன், பொந்து முனியாண்டி, தங்கசாமி, கிருஷ்ண மூர்த்தி, திருப்புல்லாணி சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் அவரது பணிசிறக்க வாழ்த்தினர்.

சவுதி அரேபியா ஜித்தாவில் 13வது இஸ்லாமிய மாநாடு…

ஜித்தாவில் வருடந்தோறும் தமிழ் தாவா சென்டர் மற்றும் தமிழ் மக்கள் ஒருங்கிணைப்பில் இஸ்லாமிய தமிழ் மாநாடு நடைபெறும்.  இந்த வருடம் கடந்த 20/04/2018  தேதி அம்மாநாடு நடைபெற்றது.  இந்த வருடம் இஸ்லாமிய மாநாநடு ஆஷிஃபா கொலைக்கான கண்டன மாநாடாகவும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் இப்ராஹிம் மதனீ,  நூஹ் அல்தாஃபி,  அஸ்ஹர் ஸீலானி மற்றும் அப்துல் வதூத் ஜிப்ரி ஆகியோர் மறுமையின் அவலங்கள்,  இளைய சமுதாயமே,  விதி-ஓர் ஈமானிய பார்வை மற்றும் நாம் சந்திக்கும் சவால்களும் […]

இராமநாதபுரத்தில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி…

இராமநாதபுரம் மாவட்டம் 29வது  சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக   இராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பேருந்துகளில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் இரவில் ஒளிரும் இருவண்ண ஸ்டிக்கர்களை ஒட்டி துவக்கி வைத்தார்.  பின்னர் பயணிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். இதனை தொடர்ந்து அரசு புறநகர் பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், […]

கீழக்கரையில் மார்க்சிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…

கீழக்கரையில் மார்க்சிஸ்ட் கட்சியின்  தாலுகா குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று  (22/04/2018) இந்து பஜார் பகுதியில்  நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8வயது சிறுமி ஆசிபாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும்,  அருப்புக்கோட்டை கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு தூண்டிய பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் தொடர்பு உடையவர்கள் அனைவர் மீதும் பாரபட்ச்சம் இல்லாமல்   விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு தாலுகா […]

இராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில்   மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன்,  தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் M. மணிகண்டன்,  நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா,  RDO சுமன்  மாவட்ட கல்வித்துறை அதிகாரி முருகன் மற்றும் புதுமடம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்வேஸ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள்,  ஆசிரியர்கள்,  மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

கடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…

இன்று காலை 8.30 மணி முதல் நாளை இரவு 11.30 மணி வரையிலும்  இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி, மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்தியக் கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று  மற்றும் நாளை கடலோரப் பகுதிகளில் 18 முதல் 22 விநாடிகள் இடைவெளியில் கடல் அலைகள் 8.25 அடி முதல் 11.50 அடி உயரத்திற்கு எழுந்து சீற்றத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் […]

இராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செல்லும் வழியில் அமைந்துள்ள கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா மற்றும் மழலையருக்கான பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை (20/04/2018) மாலை 04.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கீழக்கரை தாசீம் பீவி கல்லூரி முதல்வர் சுமையா தாவூத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  பின்னர் அவருடைய சமூக சேவையை பாராட்டி பள்ளி நிர்வாகம் சார்பாக சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது. பின்னர் அதைத் தொடர்ந்து பள்ளி […]

ஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..

சமீபத்தில் சில காட்டுமிராண்டிகளால் 8வயதுடைய ஆசிஃபா எனும் சிறுமி  காஷ்மீரில் கூட்டு பலாத்காரம் செய்து கொடுரமாக கொலை செய்யப்பட்டாள். இந்த விவகாரத்தில் நீதி கோரியும்,  இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடைபெறுவதை கண்டித்தும் இன்று (20/04/2018) வண்ணாங்குண்டில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஒட்டு மொத்த இளைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சுவைக்கு தலைமையாக கோலகலமாக திறக்கப்பட்ட “FOUR STAR RESTAURANT”..

ஐக்கிய அரபு அமீரகம் அனேகமான இந்தியர்களுக்கு சொந்த நாடு போல் தான்.  அந்த அளவுக்கு நம் நாட்டு மக்கள் வாழ்நாளில் அதிகமான நாட்களை அங்கு செலவிட்டு வருகிறார்கள். எத்தனை வளங்களும், செல்வங்களும் இருந்தாலும் வாயின் சுவைக்கேற்ப ருசியான வீட்டு சுவையில் உணவு கிடைத்தால் அதுவே மிக்க மகிழ்ச்சியாகும். அந்த சுவையான உணவை வழங்கும் விதமாக கீழக்கரையை சார்ந்த இளைஞர்கள் “FOUR STAR RESTAURANT” என்ற தமிழ் உணவுகளை வழங்க அபுதாபி முஷஃபா பகுதியில் இன்று (20/04/2018) வெள்ளிக்கிழமை கோலகலமாக […]

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலருக்கு பத்து நாட்கள் சிறை தண்டனை..

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் காவலர் குடியிருப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் மூன்று மாதங்களாக தேடப்பட்டுவந்த தனிப்பிரிவு தலைமை காவலர் சரவணனை இன்று உச்சிப்புளி போலிசார் கைது செய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணனை பத்திரிகையாளர்கள் பார்வையில் இருந்து மறைத்து மிக ரகசியமாக இராமேஸ்வரம் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் வீட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி தனி பிரிவு காவலர் சரவணனை வரும் 28ந் தேதி வரை பத்து நாட்கள் […]

இராமநாதபுரம் பட்டணம்காத்தானில் விசை படகு நாட்டு படகு மீனவர்களுக்கான உபகரண கருவிகள் கடை ..

இராமநாதபுரம் பட்டணம்காத்தானில்  விசை படகு நாட்டு படகு மீனவர்களுக்கான உபகரண கருவிகள் கடை தமிழ்நாட்டில் முதன் முறையாக திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மகேந்திரா அன் மகேந்திரா கம்பேனி பலவிதமான இயந்திரங்களை தயாரித்து வருகின்றன,  தற்போது விசை படகு மீனவர்களுக்கு ஆழ்கடல் சென்று மீன் பிடிக்க புதிய அதி நவீன 180 முதல் 300 குதிரை திறனில் இயங்கக் கூடிய இயந்திரத்தை அறிமுகம் செய்து உள்ளன.  இந்த மரைன் இன்ஜின் இராமநாதபுரம்,  தூத்துக்குடி,  புதுக்கோட்டை,  கண்ணியாகுமரி மீனவர்களுக்கு பயன்படும். […]

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வரும் 20/04/2018 (வெள்ளிக்கிழமை) அன்று இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி மாலை 06.00 மணி முதல் கிழக்கு தெரு KECT திடலில் நடைபெற உள்ளது.  பெண்களுக்கான தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் சிற்ப்பு பேச்சாளர்கள் உஸ்தாத்.நிலாமுதீன் அஷ்ரஃபி மற்றும் உஸ்தாத்.S.அப்பாஸ் அலி ஆகியோர் சிறப்புரையுடன் இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சி சம்பந்தமான சுவரொட்டிகள் […]

ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா..

இராமநாதபுர மாவட்டம் கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் 16-04-2018 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் டாக்டர்.ஆயிஷா பர்வீன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் மழலைகள் விதவிதமான வண்ண உடைகளில் வந்து பட்டங்களை பெற்றது அனைவரையும் கவர்ந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!