கீழக்கரையில் தற்போது தென்காசியை அடுத்த குற்றாலம் ஐந்தருவி பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட சுவை மிகுந்த மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நீண்ட நாள்களுக்கு பிறகு தற்போது மாம்பழ வரத்து தொடங்கியிருப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பழங்களை வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ மாம்பழம் ரூ.100 க்கு விற்பனையாகிறது. முக்கனிகளில் முத்தான கனியான இந்த மாம்பழங்களை பார்க்கும் போதே, அதன் தித்திக்கும் சுவையை நினைத்து நாவில் நீர் சுரக்கிறது. இதுகுறித்து குற்றாலம் ஐந்தருவி தோட்டங்களில் இருந்து கீழக்கரைக்கு மாம்பழங்களை […]
Category: பிற செய்திகள்
கண்ணொளிக்கு அழகூட்ட புதிய கண் கண்ணாடி கடை இராமநாதபுரத்தில் திறப்பு…
கண்ணுக்கு மை அழகு என்பது பழைய கவிதை, ஆனால் கண்ணுக்கு அழகூட்ட கண்ணாடியும், லென்சும் அழகு என்பது புதிய உலகு வார்த்தை. அதை மெய்ப்படுத்தும் விதமாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் திருப்தி பட வைக்க தொடங்கப்பட்டது தான் சமீபத்தில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை சாலையில் கனகமணி மருத்துவமனைக்கு எதிரில் திறக்கப்பட்டு இருக்கும் ‘மைமூன் ஆப்டிகல்ஸ்’. இங்கு அனைத்து தரப்பட்ட மக்களும் பயனடையும் வகையில் அனைத்து வகையான, அனைத்து முன்னனி நிறுவனங்களின் கண் கண்ணாடி […]
கீழக்கரை வீதிகளில் ‘ஜவ்வு மிட்டாய்’ வாங்க அலைபாயும் சிறுவர் கூட்டம் – மலரும் நினைவுகள்
கீழக்கரை பகுதியில் 40 வயதைக் கடந்து விட்டவர்கள், தாங்கள் சிறுவர்களாய் விளையாடி திரிந்த காலத்தில், தெருக்களுக்குள் பம்பாய் மிட்டாய் என்ற இந்த ஜவ்வு மிட்டாயை நண்பர்களோடு சேர்ந்து கொண்டு விதவிதமான டிசைன்களில் வாங்கி சாப்பிட்டதை மறந்திருக்க முடியாது. கீழக்கரை பகுதியில் இதற்கு சவுக்கு மிட்டாய், சவ்வு மிட்டாய், பொம்மை மிட்டாய் என பல பெயர்களில் அழைப்பதுண்டு. அதிலும் நிச்சயமாக நோன்பு பெருநாள், ஹஜ்ஜுத் பெருநாள் மணல் மேட்டு கண்காட்சி திடலில், ஊஞ்சலில் அமர்ந்தவாறு, பால்ய நண்பர்களுடன் புத்தாடைகள் […]
கைப்பந்து போட்டியில் தொடர்ந்து வாகை சூடும் கீழை இளைஞர்கள்..
கீழக்கரையைச் சார்ந்த இளைஞர்கள், மேற்பனைக்காடு பேட்டை வளர்பிறை அணியினர் சார்பாக நடத்தப்பட்ட கைப்பந்துக்கான சுழற் கோப்பை போட்டியில் முதல் பரிசாக ரூபாய்.8000/- வென்றார்கள். இந்தப் போட்டியில் முதல் பரிசைக் கீழக்கரை அணியும், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பரிசை கீரமங்கலம், திருப்பாலக்குடி, மேற்பனைக்காடு அணியினர் முறையே வென்றனர். தொடர்ந்து வாகை சூடி வரும் கீழக்கரை அணிக்கு கீழை நியூஸ் நிர்வாகம் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒருநாள் கருத்தரங்கம்.
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இந்திய வளங்களை சீராக பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒருநாள் கருத்தரங்கம் 15-02-2017 அன்று நடைபெற்றது. கல்லூரி டீன் முனைவர் முகம்மது ஜஹாபர் தலைமையிலும், கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது. கல்லூரி ஆங்கிலத்துறை துணைப்பேராசிரியர் முனைவர் கௌரி மனோகரி வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக சென்னை DJM நிறுவன உரிமையாளர் இமானுவேல் வசந்தகுமார் கலந்துகொண்டு இந்தியா இயற்கையாகவே பல வளங்களை உள்கட்டமைப்புடன் கொண்ட நாடு. சீனா போன்ற […]
கீழக்கரையில் ரோட்டரி சங்கம் – சென்னை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதய பரிசோதனை முகாம்
கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் 19.02.2017 அன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாடார் பேட்டை மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை கலந்து கொண்டு ஆலோசனை பெறலாம். இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் இலவசமாக இருதய அறுவை […]
கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளியில் நாளை சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறுகிறது ..
கீழக்கரையில் நாளை (07-02-2017) வடக்குத் தெரு முஹைதீனியா பள்ளி வளாகத்தில் 4 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது. ஆதார் எடுக்கும் பணி இன்றும் (06-02-17) நடைபெற்றது. முகாமுக்கு வரும்பொழுது சிறார்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் கொண்டு வருமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
தொடர்ந்து வாகை சூடும் வடக்கு தெரு அல்ஜதீத் வாலிபால் அணி..
கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த அணியாகும் அல் ஜதீத் வாலிபால் கிளப். இந்த கிளப்பின் அணி உள்ளூர் மற்றும் வெளியூரில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளனர். இந்த வாரம் இராமேஸ்வரம் SRM VOLLEYBALL TOURNAMENT நடைபெற்றது. இந்த போட்டியில் அல் ஜதீத் வாலிபால் கிளப் முதல் பரிசை வென்றுள்ளது. அடுத்ததாக இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசினை முகம்மது பாய்ஸ் கிளப், ஒப்பிலான் மற்றும் CVC கிளப், கீழக்கரை முறையே வென்றுள்ளனர். வெற்றி பெற்ற அணியினருக்கு […]
தவ்ஹீத் ஜமாத்தின் சுவரொட்டி எதிர்ப்பு- ” பீட்டாவை தடை செய், புளு கிராசை தடை செய்”
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மார்க்க பணிகளை வீரியமாக செயல்படுத்துவது அனைவரும் அறிந்ததே. அதேபோல் சமூக பணிகளிலும் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். சமீபத்தில் ஏற்பட்ட ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு முக்கிய காரணிகளான PETA மற்றும் BLUE CROSS அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் இன்று கீழை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட ” பீட்டாவை தடை செய்” மற்றும் ” புளு கிராசை தடை செய்” என்று அச்சிட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
துபாயில் இரத்ததான முகாம்.. ஈமான் அமைப்பு ஏற்பாடு..
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளில் ஒன்று ஈமான் அமைப்பாகும். அவ்வமைப்பு மூலம் பல சமுதாயம் மற்றும் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகள் துபாயில் நடத்தப்படுவதுண்டு. அதன் தொடர்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமை (20-01-2017) அன்று 68 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய தூதரக அதிகாரி நிர்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இம்முகாம் துபாய் தேரா சலாஹுதீன் சாலையில் அமைந்துள்ள அஸ்கான் […]
போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 5 மற்றும் ஏப்ரல் 2ம் தேதிக்கு மாற்றம்..
சில தினங்களுக்கு முன்பு போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதிகளில் நடைபெறும் என்று அரசாங்கத்தால் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. தற்பொழுது நாட்கள் மாற்றப்பட்டு மார்ச் 5 மற்றும் ஏப்ரல் 2நம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கீழக்கரை ”சட்ட விழிப்புணர்வு பிக்னிக்” மற்றும் சட்ட பயிற்சி வகுப்பு
கீழக்கரை மக்கள் களம் சார்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 01.01.2017 ஞாயிறன்று மதியம் 2.30 மணியளவில் செங்கல் நீரோடை பகுதியில் உள்ள கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை நிர்வாகி சகோதரர் அபு தென்னந்தோப்பில் சிறப்பாக நடைபெற்து. இந்த நிகழ்ச்சியை கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை தலைவர் ஆசிக் தலைமை ஏற்று துவங்கி வைத்தார். கீழக்கரை மக்கள் களத்தின் துணை தலைவர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் சட்ட விழிப்புணர்வு பயிற்சி அளித்தார். இந்த நிகழ்ச்சிச்சியில் […]
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…
உள்ளூர் விடுமுறை இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசாமி கோவிலின் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 11.01.2017 மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாகும். அதனை ஈடுகட்டும் வகையில் 28.01.2017 சனிக்கிழமை வேலை நாளாகும். – டாக்டர் நடராஜன், மாவட்ட ஆட்சியர், இராமநாதபுரம் மாவட்டம்.
கீழை நகருக்கு புதிய அத்தியாயம் கீழை நியூஸ்..
கீழக்கரையில் 29-12-2016 அன்று மாலை 8.00 மணி அளவில் கீழை நியூஸ் இணைய தளம் ஆரம்பம், கீழக்கரை மக்கள் களம் அறிமுக நிகழ்ச்சி மற்றும் சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வடக்கு தெரு இஸ்லாமிய அமைதி மையத்தில் குர்ஆன் கிராத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியை சாலிஹ் ஹுசைன் தொகுத்து வழங்கினார். மக்கள் களத்தின் பொருளாளர் மற்றும் அல் பையினா மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் ஜாஃபிர் சுலைமான் வரவேற்புரையாற்றினார். பின்னர் மக்கள் களத்தின் செயலாளர் மற்றும் கீழை […]
சரித்திரம் கூறும் கீழை பெயரை கீழாக நினைக்கும் நேரத்தில், கீழக்கரை சிறிய மழைக்கும் தாழ்ந்து போகும் அவல நிலை.
கீழக்கரையில் நேற்று இரவு சிறிது நேரம் மழை பெய்தது, மனதுக்கு இதமாக இருந்தது ஆனால் காலையில் சாலையில் இறங்கினால் மன வேதனையை தந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பே கீழை செய்தியில் சாலை ஒப்பந்தக்காரர்கள் சரியான முறையில் சாலைகள் போடப்படாத காரணத்தால் ஏற்படும் பிரச்சினைகளை சுட்டி காட்டி செய்திகள் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று கீழக்கரையில் உள்ள மேலத் தெரு, நெய்னா முஹம்மது தண்டையார் தெரு மற்றும் சின்னக்கடை தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் கழிவு நீரும் […]
இப்படியும் ஊக்குவிக்கலாம் மதரஸா சிறார்களை.. அனைத்து மாணவர்களையும் வெற்றியாளர்களாக உருவாக்கும் அல் மதரஸத்துல் முஹம்மதியா .
கீழக்கரை வடக்குத்தெருவில் இயங்கி வரும் சிறுவர்களுக்கான அல் மதரஸத்துல் முஹம்மதியா என்ற இஸ்லாமிய பாட சாலை கடந்த பல வருடங்களாக ஓசையில்லாமல் இஸ்லாமிய அறிவை சிறுவர்களுக்கு போதித்து வருகிறது. இந்த பாடசாலை வடக்கு தெருவில் பல மார்க்கம் மற்றும் சமுதாய பணிகள் செய்து வரும் வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) கீழ் இயங்கி வருவது என்பது கூடுதல் தகவலாகும். இங்கு 1. அடிப்படை ( Basic), 2. பட்டயப்படிப்பு ( Diploma) மற்றும் 3. […]
You must be logged in to post a comment.