கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி 25ம் ஆண்டு விழா 06-04-2017 அன்று சிறப்பாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டு மாணவி ரஷீதத் நலீஃபா கிராத்துடன் தொடங்கியது. கல்லூரியின் முதல்வர்.சுமையா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர்.நாதிரா பானு கமால் கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மலேசிய அரசின் தென்னிந்திய தூதரக அதிகாரி அஹ்மத் பஸாரஜாம் பின் அப்துல் ஜலீல் மற்றும் அவரது துணைவியார் சித்தி நூர் மவர் பின்டி […]
Category: பிற செய்திகள்
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு முதல் மரியாதை கொடுத்தே ஆக வேண்டும்…
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலை அருகே அமைந்துள்ள ஊரணியில் கிணறு வெட்டும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் முழுதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் கண்மாய், ஊரணி போன்ற நீர் நிலைகளில் கிணறு அமைத்து அதன்மூலம் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் எஸ்.பி.மணிவண்ணன் அறிவுறுத்தலின் பேரில் ஏ.டி.எஸ்பி இன்பமணி கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி தலைமையிலான போலீசார் கடந்த இரண்டு நாட்களாக […]
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தேசிய கடற்படை தினம்..
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கப்பல் துறைச் சார்பாக “54வது இந்திய தேசிய கடற்படை தினம்” கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர். அப்பாஸ் மைதீன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியின் வரவேற்புரையை கல்லூரி கப்பல் துறைப் பேராசிரியர் தங்கவேல் வழங்கினார். மேலும் 54வது இந்திய தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு உச்சிப்புளி, இந்திய கப்பற்படையின் ஐ.என்.எஸ். பருந்துவின் கமாண்டிங் ஆபிசர். கேப்டன். விஷால்ராய், கல்லூரியில் […]
துபாயில் தி.மு.க சார்பில் இரத்த தான முகாம்..
அறிவிப்பு.. துபாயில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் செயல் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு 14-04-2017 அன்று இரத்த தான முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இடம்:- துபாய் இரத்த தான முகாம், லத்தீபா மருத்துவமனை வளாகம். தேதி:- 14-04-2017 – வெள்ளிக்கிழமை. நேரம்:- காலை 11.00 மணிமுதல். அஸ்கான் ஹவுஸ் வளாகத்தில் இருந்து பஸ் வசதியும், பெண்களுக்கு தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது. தொடர்பு எண: 00 971 56 698 4551 ஈ-மெயில் :- […]
பொது சேவையை தண்டனையாக வழங்கும் அமீரக போக்குவரத்து துறை….
அமீரகத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறி பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு சிறைதண்டனைக்கு பதிலாக பொது சேவையை (Community Service) தண்டனையாக வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளது. பொது மக்களின் உயிர்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விதிமுறையை மீறிய வாகன ஓட்டிக்கு 3 மாதங்களுக்கு பூங்கா ,தெருக்கள் மற்றும் கடற்கரை போன்ற இடங்களை சுத்தப்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து குற்றவியல் நீதி மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவ்வாறு தண்டணை வழங்கப்படும் குற்றவாளிகள் வழங்கப்படும் தண்டனையை நிறைவற்றுகிறார்களா […]
கீழக்கரை நகருக்குள் மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க வாடகைக்கு இடம் கொடுக்க கூடாது – கீழக்கரை மக்கள் களம் வேண்டுகோள்
உச்ச நீதிமன்றத்தின் மகத்தான உத்தரவை அடுத்து கீழக்கரை-இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் மதுமானக் கடை இழுத்து மூடப்பட்டது. அதே போல் தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அருகே 500 மீட்டருக்குள் திறக்கப்பட்டிருந்த 3400 மதுக்கடைகளுக்கும் மூடுவிழா நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 90000 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கிறது. இந்த செய்திகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆனால், இந்த […]
நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் மூடுவது சம்பந்தமாக இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை – கீழக்கரை நெடுஞ்சாலை டாஸ்மாக் இழுத்து மூட உத்தரவு வருமா..?
கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் மின்சார வாரிய அலுவலகம் அருகே அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடையால் (கடை எண் : 6983), இந்தப் பகுதியில் அதிகளவில் சாலை விபத்துகள் நடைபெற்று வருகிறது. கடந்த 16.12.2016 அன்று உச்ச நீதிமன்றமும் மார்ச் 31 க்குள் மாநில நெடுசாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற ஆணை பிறப்பித்துள்ளது. அதே போல் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான மனுக்களை சமூக ஆர்வலர்கள் பலரும் செய்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை […]
சென்னையில் மின் விளக்குகளை ஒரு மணி நேரம் அணைத்து பூமி நேரம் அனுசரிப்பு
உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் ‘பூமி நேரம்’ என்ற நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. பூமியில் தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், தட்பவெப்ப நிலை மாற்றத்தை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படும். இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க […]
சகாயம் IAS தலைமையில் மக்கள் பாதை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா – ‘ஏப்ரல் 2’ சென்னையில் நடைபெறுகிறது
சகாயம் ஐ.ஏ.எஸ் இன் வழிகாட்டுதலின் படி, சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ”மக்கள் பாதை” என்ற பெயரில் கடந்த ஆண்டு ஏப்ரலில் இயக்கம் துவக்கப்பட்டு மிக சிறப்பான முறையில் பல்வேறு சமூகப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான இளைஞர் பட்டாளம் இந்த இயக்கத்தில் தன்னை இணைத்து வருகிறது. விவசாயிகள் பிரச்சனை, ஜல்லிக்கட்டு மீட்டெடுப்பு போராட்டம், தமிழர் கலாச்சார பாதுகாப்பு என்று பல்வேறு அறவழி போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறது. இந்நிலையில் சகாயம் […]
பாம்பனில் பத்தாயிரத்திற்கு விலை போன ருசி மிகுந்த ‘நெய் மீன்’ சீலா
இராமேஸ்வரம் தீவு மன்னார் வளைகுடா பகுதிகளில் பலதரப்பட்ட சீலா மீன் வகைகள் மீனவர்களின் வலைகளில் கிடைத்து வருகிறது. அவற்றுள் நெய் மீன் என்று பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் சீலா மீன் மட்டுமே அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. கீழக்கரை பகுதி மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் மீன் வகையறாக்களின் பட்டியலில் இந்த நெய் மீன் சீலா முதலிடத்தில் இருக்கிறது. நம் பகுதி மீனவர்களின் வலைகளில் சிக்கும் சீலா மீன் வகைகளுள் ஓலை போன்று நீளமாகவும், மெல்லியதாகவும் […]
இந்திய-மலேசிய முஸ்லிம்களின் தொடர்புகள் பற்றிய ஆவண படம் – மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளியீடு
பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் இந்திய-மலேசிய முஸ்லிம்களின் இணைபிரியா தொடர்புகள் இன்றளவும் தொட்டுத் தொடருகிறது. இது குறித்த ஆவண படம் ஒன்றினை மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் முன்னோடியாக மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை (பெர்மிம்) தாய்-சபை யினர் கீழக்கரை நகருக்கு வருகை தந்து அதன் தொன்மையை பற்றி ஆய்வு செய்தனர். மலேசிய அரசின் அங்கீகாரம் பெற்ற மலேசிய இந்திய முஸ்லீம்களின் அரசு சாரா அமைப்புகளின் தாய் சபையான பெர்மிம் பேரவை, மலேசிய […]
ஆட்டோவில் ‘ஆரஞ்ச் ஜுஸ்’ – கூடுதல் வருமானத்திற்கு புதுவித யுக்தியை கையாளும் கீழக்கரை ஆட்டோக்காரர்
கோடை காலம் ஆரம்பிக்கும் முன்னரே, கடும் வெயில் வாட்ட துவங்கி விட்டது. நண்பகல் வேளைகளில் வெளியே செல்லும் பொதுமக்கள் வெயிலின் தாக்கம் காரணமாக நாவறட்சியால் இளநீர், லஸ்ஸி, ஜுஸ் உள்ளிட்டவற்றை தேடி சென்று வாங்கி அருந்துகின்றனர். இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெருவை சேர்ந்த சிராஜுதீன் தன் ஆட்டோவின் பின் பக்கத்தில் ஜுஸ் பாத்திரத்தை பொருத்தி, ஆட்டோவில் சவாரி ஏற்றிக் கொண்டே கூலாக ஆரஞ்ச் ஜுஸ் விற்பனை செய்து கூடுதல் வருமானத்திற்கு வழி செய்திருக்கிறார். இந்த புது விதமான […]
மரம் நட விரும்பும் மக்கள் மாநகராட்சியை அணுகி அனுமதி பெறலாம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் பசுமையான நிழல் தரும் மரங்களை அதிகரிக்கும் வண்ணம், பொது இடங்களில் மரக்கன்றுகள் நட விரும்புவோர், மாநகராட்சியை அணுகி பெறலாம். மரங்களை நடுவதற்கான நிபந்தனைகள், சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் வீசிய, ‘வர்தா’ புயலால், சென்னையின் பசுமை போர்வை பாதியாக குறைந்துவிட்டது. இழந்த பசுமையை மீட்பதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில், சென்னையில் மரக்கன்றுகள் நட வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால், மரக்கன்றுகள் நடுவதற்கான அனுமதியும், நட விரும்புவோருக்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை […]
இன்று சர்வதேச ‘சிட்டுக் குருவிகள்’ தினம் – கீழக்கரையில் காணாமல் போன ‘சிட்டுக் குருவிகள்’ – அழியும் இனமாகி வரும் அபாயம் !
இறைவனின் அழகிய படைப்பில், இந்த பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால்… மனிதனை தவிர மற்றவை அனைத்தும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது ‘ஆறறிவு படைத்த மனிதன்’ தனது சுயநலத்திற்க்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் பிறவற்றுக்கு ஆபத்தாக முடிந்து விடுகிறது. எங்கும் படபடவென்று தன் சிறகுகளை […]
கீழக்கரை லூலூ சென்டர் அருகே மின் கம்பத்தில் சிக்கிய குரங்கு – உயிருடன் மீட்கப்பட்டது
கீழக்கரை நகருக்குள் அடிக்கடி வனப்பகுதிகளில் இருந்து திசை மாறி வரும் குரங்குகள் தங்கள் சேஷ்டைகளை காட்டி பொதுமக்களை பயமுறுத்துவதுண்டு. இந்நிலையில் இன்று காலை கீழக்கரை முஸ்லீம் பஜாரில் லூலூ சென்டர் அருகாமையில் மின் கம்பத்தில் ஏறி தன் சேஷ்டையை காட்டி, மின் ஒயரில் சிக்கிய குரங்கு ஒன்று கீழே இறங்க முடியாமல் அலறியது. உடனே இது குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த மின்சார வாரிய ஊழியர் பொன்ராஜ் மின் கம்பத்தில் ஏறி குரங்கினை […]
புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் இருந்து ஹஜ் கமிட்டி மூலம் 3189 பேர் பயணிக்கலாம்
இந்திய அரசின் மத்திய சிறுபான்மை நல அமைச்சகத்தின் புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை இந்திய ஹஜ் கமிட்டி இணைய தளத்தில் பார்வையிடலாம். அந்த சுற்றறிக்கையில் மொத்த இந்திய மக்கள் தொகையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 17,22,45,311 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் சேர்த்து, யூனியன் பிரதேசங்கள் உள்பட புனித ஹஜ் பயணத்திற்கான இந்த வருடத்திற்கான மொத்த இட ஒதுக்கீடு 1,23,700 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் தமிகத்தில் இஸ்லாமியர்களின் […]
ஆசியாவின் முதல் டீசல் இன்ஜின் ரயில் ஓட்டுநர் மும்தாஸுக்கு ‘மகளிர் சக்தி விருது’ – மகளிர் தினத்தில் ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.
ஆண்கள் மட்டுமே கோலோய்ச்சும் பல்வேறு துறைகளில் பெண்களும் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஆசியாவிலேயே முதல் பெண்மணியாக டீசல் இன்ஜின் ரயிலை இயக்கி சாதனை படைத்து வரும் முஸ்லீம் பெண்மணி மும்தாஸுக்கு மகளிர் சக்தி விருதினை மகளிர் தினமான மார்ச் 8 அன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார். தற்போது 43 வயதை தொட்டு விட்ட மும்பை நகரத்தை சேர்ந்த மும்தாஸ் சிறுவயது முதலே […]
துபாயில் அழகாக இருந்தால் அதிக சம்பளம் – பணியாளர்கள் இடையே பாரபட்சம் காட்டும் நிறுவனங்களுக்கு 2 மில்லியன் அபராதம் – 10 ஆண்டுகள் சிறை
அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் பணி அமர்த்தும் முறையில் பாகுபாடு காட்டுவதாக முதலாளி மீது குற்றம் சுமத்தப்பட்டால், சட்ட விதி 13 படி குற்றம் சாட்டப்பட்டருக்கு 6 மாதம் முதல் 10 வருடம் வரை சிறை தண்டனையும், 50,000 திர்ஹம் முதல் 2 மில்லியன் வரை அபராதமும் விதிக்கப்படுவதாக துபாயை சார்ந்த சட்ட நிபுணர் எச்சரித்துள்ளார். தற்காலிக வெளி விளம்பர (Out door Marketing) வேலைக்கு சட்டபூர்வமாக சேர முடியும் என்பதால், பல்வேறு நட்டை சேர்ந்த படிக்கும் மாணவர்கள் […]
கட்டப் பஞ்சாயத்து செய்து மனித உரிமை மீறும் தனியார் தொலை காட்சி நடிகைகள் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக நடிகை குஷ்பு மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் மீதும் வழக்கறிஞர் பாலாஜி என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நிஜங்கள் மற்றும் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளில் மனித உரிமை மீறுதலும் மற்றும் நீதிமன்றங்களை அவமதிக்கும் விதமாக கட்ட பஞ்சாயத்தும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் படங்களை […]
கீழக்கரையில் தொன்று தொட்டு தொடரும் சுத்தமான பசும்பால் வியாபாரம் – ‘மில்க் மேன்’ கொம்பூதி குப்புசாமியின் மலரும் நினைவுகள்
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லா பெற்றோருக்கும் குழப்பம் வரும். குழந்தையின் முதல் உணவு பால் தான். இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டபோது பிற விலங்குகளின் பாலைப் பயன்படுத்தத் தொடங்கினான். ஆடு, பசு, எருமை, கழுதை, குதிரை… ஏன் ஒட்டகப்பால் வரை மனிதன் பருகாத பாலே இல்லை. ஆனால், ‘தாய்ப்பாலுக்குப் பிறகு பசும்பாலே குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் […]
You must be logged in to post a comment.