ஐக்கிய அரபு அமீரக சார்ஜாவில் வாடகை செலுத்த தவறியவரை வீட்டின் உரிமையாளர் அக்குடும்பத்தை வீட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டார். இதையறிந்த சார்ஜா காவல்துறை அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்துள்ள செய்தி சமீபத்தில் தீயாக பரவியது. அவ்வாறு வெளியேற்றப்பட்ட குடும்பம் தங்குவதற்கு வீடு இல்லாமல் 20 நாட்களாக சார்ஜா அல் புதீன் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனத்தில் தங்கியிருந்த நிலைமை அறிந்த சார்ஜா போலீஸ் அவர்களுக்கு விடுதியில் தங்க ஏற்பாடு செய்தனர். சம்பவம் அறிந்த தலைமை கமாண்டர் பிரிகேடியர் சைஃப் அல் […]
Category: பிற செய்திகள்
கெண்டை மீன் தோல் மூலம் தீ காயங்களுக்கு நிவாரணம்…
பிரேசில் நாட்டை சார்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் திலப்பியா என்ற கெண்டை மீன்களின் தோலை பயன்படுத்தி தீ காயங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக தீயினால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மனிதர்களின் தோல்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பிரேசில் நாட்டில் திலப்பியா (Tilapia) என்ற கெண்டை மீனின் தோலை எடுத்து அதை சிகிச்சைக்கு பயன்படுத்துவது பரவலாக கணப்படுகிறது. ஆற்றில் வளரக்கூடிய கெண்டை மீன் வகைகள் பிரேசில் நாட்டில் அதிக அளவில் […]
கீழக்கரை சதக் கல்லூரி பேருந்து மற்றும் தனியார் வேன் மோதி விபத்து..
இன்று (28/05/2017) கீழக்கரை சதக் கல்லூரி பேருந்து மீது தனியார் வாகனம் மோதியதில் அதில் பயணம் செய்த மூன்று மாணவிகள் மற்றும் இரு வாகனத்தின் ஓட்டுனர்களும் காயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள். மேலும் இச்சம்பவத்தை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாட்டு மூத்திரத்தைக் குடிக்க ஆதரிக்கும் மத்திய அரசு… மாட்டிறைச்சிக்கு தடை..
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மூன்று வருடத்தை நிறைவு செய்யும் பரிசாக சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாக சுற்றுப் புற சூழல் அமைச்சகம் மூலம் பசு, எருமை, ஒட்டகம் போன்ற மிருகங்களை இறைச்சிக்காக வெட்டுவதற்கும், விற்பதற்கும் தடை விதித்துள்ளது. இது தனி மனிதனின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாகும். ஒரு மனிதன் தான் எதை உண்ண வேண்டும் என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டிய மிக மோசமன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். இந்த சட்டம் […]
சென்னையில் இயற்கை ஆரோக்கியத்தை வலியுறுத்தும் “arogya”கண்காட்சி..
சென்னையில் மே மாதம் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வணிக வளாகத்தில் “arogya” “ஆரோக்யா” எனும் இயற்கை மருத்துவ சம்பந்தமான கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சி காலை 10.00 மணி முதல் மாலை 08.00 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இக்கண்காட்சியில் இயற்கை மருத்துவமான ஹோமியோபதி, யுனானி, சித்த மருத்துவம், யோகா மற்றும் இயற்கை சார்ந்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், ஆலோசனைக் கூட்டங்கள், மருத்துவ ஆலோசனைகள் […]
தொடர்பு எல்லைக்கு உள்ளே வாருங்கள்!
செடிகளைப் போன்றே உறவுகளும். அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும்.. மினுக்க வேண்டும்.. அருகே செல்ல வேண்டும்.. உரமிட வேண்டும். இல்லையேல் செடிகளைப் போன்றே உறவுகளும் வாடிவிடும். அவர்கள் நம்மைவிட்டு விலக முற்படும்போது நாம் அடிக்கடி அருகே செல்ல வேண்டும். அதிக அன்பு வைத்திருப்பவர்களுக்கு மத்தியில்தான் அடிக்கடி பிணக்கு ஏற்படும். “என்னதான் இருந்தாலும் என்னோடு அவர் இவ்வாறு நடந்துகொண்டாரே..” என்பதுதான் ஒரே ஆதங்கமாக இருக்கும். அன்பும் நட்பும் மட்டுமல்ல.. குடும்ப உறுவுகள் சிதைவதற்கும் ஏதோ ஒரு சிறு காரணம் […]
முஸ்லிம் தனியார் சட்டம் – சமூக மாற்றத்துக்குத் தயாராவோம் …
முஸ்லிம் தனியார் சட்டம் நம்மை படைத்த இறைவனால் அருளப்பட்ட வாழ்வியல் சட்டம் எனப் பேசவும் எழுதவும் செய்கின்றோம் . எந்தவொரு சட்டமாக இருந்தாலும் அந்தச் சட்டத்தால் விளையக்கூடிய பயன்களும் நற்பெறுகளும் ஏடுகளிலும், தாள்களிலும் மட்டுமே பொறிக்கபட்டிருக்கு மேயானால் அதனை பயனுள்ள சட்டமாக எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . அன்றாட நடைமுறை வாழ்வில் அவற்றின் நன்மைகளையும் நற்பேறுகளையும் நுகர்ந்தால் மட்டுமே அதைப் பயனுள்ள சட்டமாக மக்கள் ஏற்றுகொள்வார்கள். எனவே இஸ்லாமிய குடும்பவியல் சட்டங்கள்படி வாழ்வை முழுமையாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியது […]
முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் சிறுவர், சிறுமியர்களுக்கான சேர்க்கை…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி – சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி – சென்னை மற்றும் ஈரோடு […]
வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கேபிள் டிவி நிறுவனத்தில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையங்களில் அனைத்து இ-சேவைகளையும் பெறலாம்..
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 8 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் திருத்தங்கள் ஏதும் செய்ய விரும்பினால், இம்மையங்களுக்குச் சென்று கைரேகை அல்லது கருவிழியினைப் பதிவு செய்து தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும் புகைப்படம், கைவிரல் ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றையும் […]
அமீரகத்தில் இருந்து வெளிநாட்டவர்கள் இனி ஹஜ் செல்ல முடியாது…
அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் இனி அமீரகத்தில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற அமீரக அரசாங்கம் தடை விதித்துள்ளது. சவுதி அரசாங்கம் வழங்கிய ஒதுக்கீடு முறையை Quota) பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அமீரக குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இனி ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்படும் என்று இஸ்லாமிய விவகாரம் மற்றும் நல்வாழ்வு துறை அதிகாரி டாக்டர் அஹ்மத் அல் மூசா தெரிவித்துள்ளார். சவூதி அரசு ஒவ்வொறு நாட்டுக்கும் அந்த நாட்டில் வசிக்கும் முஸ்லிம்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் […]
விலை குறைவான ‘ஜெனரிக்’ மருந்துகளை மருந்து சீட்டில் எழுத தவறினால் கடும் நடவடிக்கை – இந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை
இந்திய மருத்துவ கழகம் MEDICAL COUNCIL OF INDIA விதிமுறைகளின் படி நோயாளிகளுக்கான மருந்து சீட்டில் மருத்துவர்கள் அனைவரும் ‘ஜெனரிக்’ பெயரில் தான் மருந்துகளை எழுத வேண்டும். எந்த ஒரு நிறுவனங்களின் ‘பிராண்ட்’ பெயரிலும் எழுத கூடாது. ஜெனிரிக் GENERIC பெயர் என்பது நீங்கள் உபயோகிக்கும் மருந்துகளின் உண்மையான மூலப் பொருளின் CHEMICAL வேதியியல் பெயர். உதாரணம் : PARACETAMOL பிராண்ட் BRAND பெயர் என்பது உங்களுக்கான மருந்துகளை 500 சதவீதத்திற்கும் மேல் கொள்ளை இலாபம் வைத்து […]
நீர் நிலைகளை காக்க முன்னுதாரணமாக விளங்கும் மதுரை SBOA பள்ளி மற்றும் பசுமை நடை இயக்கம்..
தமிழக்கத்தில் இந்த வருடம் சரித்திரம் காணாத தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எங்கு நோக்கிலும் ஆள்துளைக் கிணறு மூலமாக தண்ணீர் எடுக்கும் தொழில் மிக வேகமாக நடந்து வருகிறது அதன் பின் விளைவு அறியாமல். தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் நீர் மட்ட அளவு சரித்திரம் காணாத அளவு குறைந்து உள்ளது. நம் நாட்டின் அரசியல்வாதிகளோ எந்த வகையில் எப்படி கொள்ளையடிக்கலாம் என்று வகை வகையாகவும், தினுசு தினுசாகவும் தினம் ஒரு திட்டம் தீட்டி வருகிறார்கள். இன்னொரு பக்கம் தமிழகத்தில் […]
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் சலுகையை நழுவ விடாதீர்கள்..
மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி சுயநிதி தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் தவிர்த்து) 25 சதவீத சேர்க்கை ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பெற்றோர்கள் இருந்த இடத்திலேயே www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். பதிவு செய்தவுடன் அதை உறுதிபடுத்தக்கூடிய குறுஞ்செய்தி நாம் பதிவு செய்யும் மொபைல் எண்ணுக்கு வரும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் அலுவலகம் போன்ற அனைத்து […]
அழிந்து வரும் விளை நிலங்கள்.. மாடி வீட்டுத் தோட்டம்.. மாறி வரும் எண்ணோட்டங்கள்…
ஓடி விளையாடிய தோட்டங்கள் மறைந்து, எங்கு நோக்கினும் ஓங்கி நிற்கும் மாளிகைகளே இன்றைய கிராமத்தின் நிலை. விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் நம்முடைய வாழ்வாதாரங்களை அழித்து வருகிறோம் என்பதுதான் உண்மை.கிராமங்கள், நகர் புறங்களாக விரிவடைந்து வருவதால் விவசாயம் முற்றிலும் அழிந்து வருவதை நம் கண் முன் பார்த்து வருகிறோம். கிராமம் என்ற வார்த்தையை செவியுற்றவுடன் பசுமையான வயல்களும், தோடங்களும், நீர் நிலைகளும் நம் மனக் கதவுகளை தட்டி எழுப்பும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் வரும் காலத்தில் […]
ஏர்வாடி கடற்கரை பகுதியில் கஞ்சா பறிமுதல்..
கீழக்கரை, ஏர்வாடி கடற்கரை பகுதியில் இன்று 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடலோர காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சோதனையிட்ட போது கஞ்சா பிடிபட்டது. பின்னர் ஏர்வாடி காவல்துறையினரின் தீவிர சோதனையில் இச்சம்பவம் தொடர்பாக நான்கு நபர்கள் தனியார் விடுதியில் பிடிபட்டனர். இதன் தொடர்பாக பயன்படுத்திய கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரனையின் போது, கைப்பற்ற பட்ட […]
வலியில்லாமல் இரத்தத்தை உறிஞ்சும் மூட்டைப் பூச்சிகள்.. அறியாத தகவல்கள்…
மூட்டைப்பூச்சி, நமது வீடுகளின் அழையா விருந்தாளிகளாக எப்போதும் தங்கியிருக்கும். முக்கியமாக வளைகுடா நாடுகளில் துபாய் போன்ற ஊரில் வசித்தவர்கள் இதன் கடியில் இருந்து தப்பித்து இருக்கவே முடியாது. நாம் பல மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுவந்தாலும், நமக்காக பசி தாங்கி காத்துக் கொண்டிருக்கும். மூட்டைப்பூச்சி பற்றிய சில அறிய தகவல்கள். மூட்டைப்பூச்சிகள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. இல்லாத இடமேயில்லை எனும் அளவுக்குஎல்லா இடங்களிலும் வசிக்கும் திறன் பெற்றவைமூட்டைப்பூச்சிகள். ஓட்டல்கள், வீடுகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், அலுவலகங்கள், […]
பொது சிவில் சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக 4கோடி பேருக்கு மேலானோர் கையெழுத்துடன் எதிர்ப்பு மனு..
கடந்த வியாழன் (13-04-2017) அன்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக இந்திய சட்ட கமிசனிடம் 4 கோடி பேருக்கு மேலானோர் கையெழுத்துடன் எதிர்ப்பு மனு சமர்பிக்கப்பட்டது. இந்த மனு முஸ்லிம் சட்ட வாரியத்தின் செயலாளர். மெளலானா முஹம்மது வாலி ரஹ்மத் சாஹிப் அவர்களின் தலைமையில் இந்திய சட்ட வாரியத்தின் தலைவர் நீதிபதி பல்பர் சிங் செளதான் அவர்களை சந்தித்து கையெழுத்து பிரதிகளுடன் கூடிய மனு வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட மனுவில் பொது சிவில் […]
இராமேஸ்வரம் – கோயம்புத்தூர் – இராமேஸ்வரம் புதிய சிறப்பு விரைவு ரயில் ஆரம்பம்..
இராமேஸ்வரம் – கோயம்புத்தூர் – இராமேஸ்வரம் புதிய விரைவு ரயில் ஏப்ரல் 22ம் தேதி முதல் ஆரம்பம் செய்யப்படுகிறது. இந்த விரைவு ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவை ஜூலை மாதம் வரை செயல்படும் என்று அறியப்படுகிறது. எண். 06062 கோயம்பத்தூர் – இராமேஸ்வரம் விரைவு ரயில் திங்கள் மற்றும் வெள்ளி மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் பாலக்காடு, பாலக்காடு டவுன், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, இராமநாதபுரம் […]
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக பங்குனி உத்திர திருவிழாவில் மோர்ப்பந்தல்..
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட மையத்தின் சார்பில் இன்று(09-04-17) நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மோர் பந்தல் மற்றும் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இராமநாதபுரம் தாலூகா அலுவலக நுழைவு வாயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் சுமார் 6000 பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அன்னதானம், பானக்கம், தண்ணீர், மோர் போன்ற தாகம் தீர்க்கும் பானங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இப்பணியை இராமநாதபுரம் தாலுகா அலுவலக சங்கத்தினர் தொடர்ந்து 52 வது […]
கீழக்கரையில் நாய் கடித்து இறந்து போன சிறுவனின் வீட்டு அருகே அதே நாய் மீண்டும் சுற்றுவதால் பொதுமக்கள் அச்சம்…
கீழக்கரையில் நாய் கடித்து இறந்து போன சிறுவனின் வீட்டு அருகே அதே நாய் மீண்டும் சுற்றுவதால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். கீழக்கரை சாலைதெருவைச் சேர்ந்த முஹம்மது சலீம் மகன் ரய்யான்(4). இச்சிறுவனை கடந்த ஆகஸ்ட் மாதம் அதே பகுதியில் சுற்றி திரிந்த நாய் ஒன்று கடித்து சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அதனைத் தொடர்ந்து கீழக்கரை நகராட்சியால் ஒருசில நாட்கள் கீழக்கரை முழுவதும் சுற்றிதிரிந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்தினர். ஆனால் சிறுவனை கடித்த நாய் தப்பிச் […]
You must be logged in to post a comment.