தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசும் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதுபோல் தனியார் வாகனங்களும் தங்களால் இயன்ற அளவு பங்களிப்பு செய்து வருகிறார்கள். அது சம்பந்தமாக கீழக்கரை பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட் …
Category: பிற செய்திகள்
பயனில்லாமல் தெருக்களில் தொங்கும் தொலைபேசி வயர்களின் நிலை என்ன??
கடந்த 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்பு சாதாராண தொலைபேசி மட்டுமே உபயோகத்தில் இருந்து வந்த நிலையில் இன்று 90 சதவீதத்திற்கும் மேலான வீடுகளில் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டு அலைபேசிக்கு மாறிவிட்டார்கள் என்பதுதான் யதார்த்த நிலை. ஆனால் தொலைபேசி இல்லாத தெருக்களில் கூட அதற்காக பயன்படுத்தப்பட்ட வயர்கள் அதனுடைய சந்தை மதிப்பு அறியாமல் தொங்கிய நிலையில் உள்ளது. பல இடங்களில் கேபிள் டி.வி வயர்களும் பழைய தொலைபேசி வயர்களும் அடையாளம் தெரியாத அளவு பிண்ணி பினைந்து கிடக்கின்றன. […]
மாணவர்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி…
கல்வி மட்டுமே உலகத்தில் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய மிகப் பெரிய ஆயுதம் இது நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகள். இந்த வார்த்தைகளை மெய்மைபடுத்தும் முயற்சியில் ஈடுபடும் நிறுவனம் தான் THE BISHOP’S MODEL UNITED NATION ஆகும். இந்த கல்வி நிறுவனம் இந்தியாவில் உள்ள பல கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை ஒன்று திரட்டி ஐக்கிய அமைப்பில் நடைபெறும் நிகழ்வுகளை போலவே உலகில் நடைபெறும் அன்றாட விசயங்களை கலந்துரையாட செய்து மாணவர்களை தயார் செய்கிறார்கள். இந்நிகழ்வு வருடந்தோறும் இந்தியாவில் […]
கீழக்கரையில் மக்கள் சேவையில் களம் இறங்கிய “சாலை வெல்ஃபேர் அசோசியேசன்”.
கீழக்கரை நகர் வளர்ச்சிக்கு என்றுமே அரசாங்கத்தை நம்பி இருந்தது இல்லை என்பதற்கு அடையாளமே அங்கு சமூக பணிகள் புரிந்து வரும் எண்ணற்ற சமூக நலச் சங்கங்களே. அந்த நல்நோக்கோடு இன்று அந்த வரிசையில் இணைந்துள்ளது “சாலை வெல்ஃபேர் அசோசியேசன் “. சமீபத்தில் சமூக பணிகளை தொடங்கிய இவ்வமைப்பின் அதிகாரபூர்வமான அலுவலகம் இன்று (07-01-2018) காலை 11.30 மணியளவில் 13/26, சாலை தெரு என்ற முகவரியில் ஆரம்பம் செய்யப்பட்டது. இந்த அமைப்பு மூலம் கல்வி உதவி, மருத்துவ உதவி, […]
கீழக்கரையில் அமைச்சர் மணிகண்டன் பொங்கல் பரிசுகள் வழங்கினார்…
கீழக்கரையில் இன்று (06-01-2018) அமைச்சர் மணிகண்டன் தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு அளிக்கும் அன்பளிப்பு பொருட்களை வழங்கினார். இந்த பொங்கல் பரிசுகளை முதல் கட்டமாக கீழக்கரை 3 வது வார்டு மக்களுக்கு அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வின் போது அமைச்சர் உடன் D, R. O முத்துமாரி மற்றும் அஇஅதிமுக நகர் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சுற்றுப்புற சூழலுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் – ஒரு பார்வை.
ஐக்கிய அரபு அமீரகம் எல்லா நிலையிலும் சுகாதாரத்தை பேணுவதில் முன்னிலை வகிக்கும், அதே போல் சூழலை பேண தவறும் நபர்களை கூட அந்நாட்டின் சட்ட திட்டம் சுகாதாரத்தை பேண வைத்து விடும். உதாரணமாக ராசல் கைமா அமீரகத்தில் உள்ள அல் ஜையிஸ் மலைப்பகுதியில் தினமும், அதிலும் முக்கியமாக விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வருவதுண்டு. வரும் மக்கள் குப்பைகளை கீழே போட்டு அசுத்தப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அந்தப் பகுதிக்குள் நுழையும் பொழுதே நகராட்சி சார்பாக குப்பைகள் […]
கீழக்கரையில் புதிய உதயம் – அல்மாஸ் ஆப்பக்கடை – ஒரு நேரடி ரிப்போர்ட்…
கீழக்கரையில் கடற்கரை ஓரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது “அல்-மாஸ் ஆப்பக்கடை”. இங்கு வகை வகையான ஆப்பம் முதல் அனைத்து வகையான சிக்கன், மட்டன், ஆட்டுக்கால்சூப் போன்ற உணவு வகைகளும் கிடைக்கின்றது. இக்கடையின் உரிமையாளர் கூறுகையில் நாங்கள் இங்கு வியாபாரம் தொடங்கும் பொழுது தூரமாக உள்ளதே என்று எண்ணினோம், ஆனால் எங்களுடைய சுவையின் மீது நம்பிக்கை வைத்தே தொடங்கினோம் என்றார். அல் மாஸ் ஆப்பக்கடை உரிமையாளர் கூறியது போலவே மக்கள் அங்கு கிடைக்கும் சுவையான உணவுக்கு தேடி வருவதை நாம் காண […]
“அடுத்தது என்ன?? – What Next?” – தாசிம் பீவி கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி – வீடியோ தொகுப்பாக…
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்று (06-01-018) காலை 10.00 மணி முதல் கல்லூரி வளாகத்தில் “WHAT NEXT – Plan Your Next Move – Knowledge will bring up the opportunity to make a difference” – “வாருங்கள் வழிகாட்டுகிறோம்” என்ற தலைப்பு வாசகத்துடன் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கல்லூரி மாணவி அஃப்ரினா செரின் இறையுரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கல்லூரி துணை பேராசிரியர் ராதிகா […]
கீழக்கரையில் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்..வீடியோவுடன்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கிராம நிர்வாக உதவியாளர்கள் இன்று (05-01-2018) 5(ஐந்து) அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் தாசில்தார் சிவக்குமார் தலைமையிலும் கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கத்தலைவர் உத்தம சேகரன் முன்னிலையில் 5அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி கீழக்கரையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கச் செயலாளர். சரவணக்குமார், பாக்கியவதி, மாவட்ட இணை செயலாளர். பாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தாசிம் பீவி அப்துல்காதர் கல்லூரியில் புத்தக வெளியீட்டு விழா..
கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் இன்று (05-01-2018) “தித்திக்கும் திருமறையின் மகிமைகள்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்புத்தகத்தை தம்பி சாகிபு சித்திக்பரிதா எழுதியுள்ளார். இந்நிகழ்ச்சியின் வரவற்புரையை தமிழ்துறை தலைவர் வே.அகிலா வழங்கினார். நிகழ்ச்சிக்கு சுல்தான் மரைக்காயர் மற்றும் செய்யது முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிக்ச்சியின் தலைமையுரையை இராமநாதபுரம் தமிழ்சங்கம் தலைவர் அப்துல்சலாம் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருந்தினராக ஏபிஜே அப்துல்கலாம் இன்டர்நேசனல் பவுன்டேசன் நிர்வாக அறங்காவலர் ஏபிஜேஎம் நசிமா மரைக்காயர் […]
வாய் மணக்க வைக்கும் வெற்றிலை.. வெற்றிலை விவசாயத்திற்கு கை கொடுக்கும் கிணற்று பாசனம்..
தமிழர்களின் அன்றாட வாழ்வில் வெற்றிலைக்கு என்றும் ஒரு தனி இடமுண்டு. வீட்டில் நடக்கும் எந்த ஒரு நல்ல காரியங்களுக்கும் வெற்றிலையே முதன்மை இடம் வகிக்கும். வெற்றிலை எந்த ஒரு பாகுபாடுமின்றி அனைவராலும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொருள் என்றே கூறலாம். அதற்கும் மேலாக வெற்றிலையில் அடங்கியிருக்கும் மருத்துவ குணத்திற்காகவே அக்காலத்தில் உணவுக்கு பின் உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். தென் தமிழகத்தில் முத்துப்பேட்டை, பெரியபட்டினம் உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் பணப்பயிராக வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. முத்துப்பேட்டையில் 5 […]
அ(க)ழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கும் நகராட்சி வளாகத்தில் பயன்பாடில்லாமல் கிடக்கும் கழிப்பறைகள்..
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் அனைத்து பகுதிகளுக்கும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கும் வகையில் நவீன கழிப்பறைகள் அரசங்கத்தால் கொடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கீழக்கரை நகராட்சிக்கு வழங்கப்பட்ட நவீன கழிப்பறைகள் கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் எந்த பயன்பாடும் இல்லாமல் அழிய கூடிய நிலையில் கேட்பாரற்று கிடக்கிறது. அவ்வாறு கிடக்கும் கழிப்பறைகளை முறைபடுத்தி புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடற்கறை பூங்காவில் அமைத்தால் சுற்றுலா பயணிகளுக்கும், கடற்கரைக்கு வருபவர்களுக்கும் உபயோகமாக இருக்கும். நகராட்சி நிர்வாகம் மக்கள் […]
தேங்கும் மழைநீருக்கு நிரந்தர தீர்வு காணுமா நகராட்சி.. ஒரு நேரடி பார்வை..
கீழக்கரையில் முக்கியமான தெருக்களில் ஒன்று NMT தெரு என்றழைக்கப்படும் நெய்னா முகம்மது தண்டல் தெரு. ஆனால் இங்குள்ள சிறிய தெருவில் சின்ன மழைக்கும் மக்கள் நடமாட முடியாதபடி மழைநீர் தேங்கி விடும். பின்னர் நகராட்சி லாரி மூலம் நீரை அகற்றவது ஒரு தொடர் நிகழ்வு. ஆனால் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விதம் அத்தெருவில் உள்ள பள்ளத்தை சரி செய்து நிரந்தர சாலை அமைத்தால் தீர்வு ஏற்படும், ஆனால் அதை செய்ய நகராட்சி முனைப்பு காட்டுவதில்லை. ஆனால் மறுபுறம் […]
கீழக்கரையில் இரவு முழுவதும் பெய்த மழையினால் பல இடங்கள் பாதிப்பு..
இன்று காலை ஒரு கவிஞன் கூறியது போல் காதலி போல் மகிழ்ச்சியுடன் தொடங்கிய மழை, செல்லும் பொழுது ஊர் மக்களுக்கு பல இன்னல்களை தந்து விட்டு சென்றுள்ளது. நம்முடைய நிருபர் சித்திக் களத்தில் நேரடியாக சென்று சேகரித்த தகவல்கள் உங்கள் பார்வைக்கு… கீழக்கரை அகமது தெருவில் மரக்கிளைகள் உடைந்து மின்சார கம்பத்தின் மீது விழுந்து ஆபத்து விளைவிக்கும் நிலையில் உள்ளது. கீழக்கரையில் நேற்று இரவு முதல் மழையின் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கீழக்கரை ஜின்னா […]
கீழக்கரையில் டிஜிட்டல் இந்தியாவின் அவலநிலை.. பல வங்கிகள் இருந்தும் பணம் எடுக்க ஒரு இயந்திரமும் இயங்கவில்லலை…
கீழக்கரையில் பல வங்கிகள் இருந்தும் இன்று காலை 5 மணிமுதல் 10 மணிவரை எந்த வங்கியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரமும் இயங்கவில்லை. கீழக்கரையில் உள்ள அனைத்து வங்கிகளும் எந்திரம் மூலம்தான் பணம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பொழுது அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவர்களுடைய கடமை. வங்கிகளில் பணம் இருந்தும் டிஜிட்டல் இந்தியாவில் வாழமுடியாத நிலை, பால் வாங்க முடியவில்லை, உணவு இல்லாமல் மக்கள் திண்டாட்டம், மத்திய மாநில அரசுகளின் டிஜிட்டல் இந்தியா கனவு திட்டம் […]
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக பயண புகைப்பட தொகுப்பு …
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக பயண புகைப்பட தொகுப்பு உங்கள் பார்வைக்கு.. புகைப்பட உதவி:-சுபான் பீர் முகம்மது, அமீரகத்திலிருந்து….
ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் 36 வது சர்வதேச புத்தக கண்காட்சி, தி.மு.க செயல்தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..
ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் 36 வது சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெற்று வரும் இக்கண்காட்சியில் உலகம் முழுவதுமிருந்து எழுத்தாளர்கள், பிரமுகர்கள், வாசகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் இந்தியாவை சேர்ந்த இலக்கிய பிரமுகர்கள், அரசியல் வாதிகள், எழுத்தாளர்கள் பங்கேற்று வருகின்றனர். இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் அரசு விருந்தினராக பங்கேற்று உரையாற்றும் […]
அசந்து போன அப்பாவி மக்கள், அசராத அரசாங்கம் – மக்களை வதைக்கும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு வரமா? சாபமா? கட்டுரையாளர். கீழை இளையவன்
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகளுக்கு பல்லாண்டு காலமாக உள் தாள் ஒட்டி ஒட்டியே ஆட்சியை ஓட்டி வந்த அரசாங்கம் கடைசியாக ஸ்மார்ட் கார்டு திட்டம் என்கிற பெயரில் சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் 2009 ஆம் ஆண்டோடு முடிவடைந்து விட்டது. அதில் இருந்து இரண்டு, இரண்டு ஆண்டுகள் வீதம் உள்தாள் ஒட்டப்பட்டுக் கொண்டே வந்தது. ஏறத்தாழ 13 ஆண்டு காலம் மைதாவிலும், சர்க்கரையிலும், மண்ணெண்ணெய்யிலும், பாமாயிலிலும் நனைந்து […]
தேவையுடையவர்களுடன் ஈத் மிலன் ( பெருநாள் சந்திப்பு )
சென்னை எண்ணூர் அன்னை தெரசா அனாதைகள் இல்லத்தில் கடந்த 15/07/2017 அன்று முதியோர், முதிர் மழலையர் மற்றும் அவர்களை பராமரிக்கும் சேவகர்கள் ஆகியோர்களுக்கு, ‘ரமலான் பண்டிகை பரிசாக’ உணவு வகைகள், உடுத்த புத்தாடைகள் என 200 நபர்களுக்கு கொடுத்து உதவும் – “பெருநாள் சந்திப்பு ” நடைபெற்றது. மேலும் இல்லத்தை நிர்வகிக்கும் கன்னியாஸ்திரிகளுக்கும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எண்ணூர் வட்டத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது .
கீழக்கரையை மெச்சி மகிழ்ந்த வெளிநாட்டு வாழ் சரித்திர எழுத்தாளர் மற்றும் இயக்குனர்..
கோவிந்தராஜன் விஜய பத்மா தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். தற்சமயம் அவர் கனடா நாட்டை வசிப்பிடமாகக் கொண்டு பல சரித்திர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல சரித்திர வரலாறு புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். அவர் சமீபத்தில் சுற்றுலா மேற்கொண்ட பொழுது கீழக்கரை நகரை கடந்துள்ளார். அது சம்பந்தமாக தன்னுடைய முகப்புத்தகத்தில் கீழக்கரை நகர் பற்றியும், கீழக்கரையில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி பற்றிய சிறப்புகளையும் பதிந்துள்ளார். அவருடைய பதிவு கீழே:- கீழை மாநகரின் மற்றவர்கள் சிலாகித்து பாராட்டும் பொழுது, அதனுடைய பாரம்பரியத்தை […]
You must be logged in to post a comment.