‘சீன தேசம் சென்றாலும் சீர் கல்வியைத் தேடு’ என்பது முன்னோர்களின் வாக்கு. ஆனால் இன்று நம் இந்திய தேசத்திலேயே அதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் எண்ணுகிறோம். அதையும் தாண்டி அவர்களுடைய உள்ளார்ந்த திறமைகளை வெளிக் கொணர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்காமல் விட்டு விடுகிறோம். அதே போல் எல்லா […]
Category: பிற செய்திகள்
செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 18வது ஆண்டு விழா..
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 07.04.2018 அன்று காலை 10.30 மணியளவில் 18-வது ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமையேற்று ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்கள் இராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை மற்றும் இராமநாதபுரம் கல்வியியல் கல்லூரி மற்றும் புனித ஆந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும் மற்றும் மதுரை, இராமநாதபுர மறைமாவட்ட திருமண்டில சட்ட ஆலோசகருமான P. மனோகரன் மார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். […]
அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் ..
இராமநாதபுரம் அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் தலித் இன மக்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய மோடி அரசை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதம் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்றன முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் முன்னிலை வகித்தார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் செல்லத்துரை, மாநில பேச்சாளர் ஜெய்னூல் ஆலம் கருணா கரண், மாவட்ட துணை […]
சூரைக்காற்றின் வேகத்தால் கடல் சீற்றம், விசைப்படகு நாட்டுபடகுகள் சேதம்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் குறைவாக காணப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்து வருகின்றது. இதனால் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடையும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை காற்றின் வேகம் அதிகரித்து சூரை காற்றாக மாறியதில் ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு நாட்டுபடகுகள் மற்ற படகுகளுடன் மோதி படகு முழுவதும் சேதமடைந்து […]
அமீரகத்தில் தொழில் துறை அமைச்சர் – புத்தகம் வெளியீடு மற்றும் தொழில் முனைவோருக்கான ஆலோசனைக்கூட்டம்..
சமீபத்தில் தாயகத்திலிருந்து துபாய் வருகை தந்த தொழில்துறை அமைச்சர் சம்பத்துடன் துபாயில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பல் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்தில் தொழில் முனைவோருக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டி மைய்யம் துபாயில் அமைக்கப்பட வேண்டும் என்று ஈமான் அமைப்பின் சார்பாக பொது செயலாளர் ஹமீது யாஸீன் அமைச்சரிடம் கோரிக்கையை எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்வில் ஈமான் அமைப்பை சார்ந்த துணை பொதுச்செயளாலர் மொகைதீன், தொழில் அதிபர் ஏ.எம்.முகைதீன், ஜமால் முகைதீன் […]
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு புது வாழ்வு திட்ட பணியாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் நுழைவு வாயிலில் தமிழ்நாடு புது வாழ்வு திட்ட பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக அனைத்து ஊராட்சிகளிலும் மீண்டும் புது வாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதியான ஏற்கனவே புதுவாழ்வுரிட்டம் 1ல் பணி செய்த பணியாளர்களே புது வாழ்வு திட்டம் 2ல் பணி செய்வார்கள் என்பதை நிறைவேற்றுதல், உயர் நீதிமன்ற தடை ஆணையை ஏற்று ஆள் தேர்வு முறைக்கான […]
மனிதநேயம் வளர்க்கும் அல் பையினா பள்ளி..
கீழக்கரை அல் பையினா பள்ளி மாணவர்களுக்கு உலக கல்வியை மட்டும் போதிக்காமல், மறுமை வாழ்கையை மாணவர்கள் மேம்படுத்துவதற்கான அனைத்து போதனைகளும் மாணவர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அதன் வரிசையில் படிக்கும் வயதில் மாணவர்கள் வாய் இல்லா ஜீவராசிகளை மனித நேயத்துடன் பேண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு ஆடு போன்ற கால்நடைகளுக்கு உணவளித்தல், நீர் வழங்குதல் போன்ற விசயங்களை மாணவர்கள் மத்தியில் செய்து காண்பித்து நற்போதனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் […]
இஸ்லாமியா பள்ளி மாணவன் விபத்தில் பலி – தாளாளர் இரங்கல் – இன்று மாலை பள்ளி (09-04-2018) விடுமுறை..
நேற்று 8/4/2018 மாலை 06.30 மணி அளவில் ஏர்வாடி பகுதி புது மாயாகுளம் அருகே சாலையோரம் நடந்து சென்ற கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் சுகாஸ் என்பவரை பின்னால் இருந்து வந்த சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்து, இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து விட்டார். மாணவனின் ஆத்மா சாந்தமடைய இறைவனை பிரார்த்திப்பதோடு, குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை பள்ளி நிர்வாகம் […]
மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை..
மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகோடு நடந்துள்ளதாக மீனவ பெண்கள் குற்றசாட்டு. நடவடிக்கை எடுக்க வேண்டிய மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் முறைகேட்டிற்க்கு துனை போவதை கண்டித்து ஆறு மணி நேரமாக மீன்வளத்துறை அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவ பெண்கள் ஆர்பாட்டம் நடத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. கடந்த […]
கீழக்கரை பகுதிகளில் பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தஞ்சை தொல்லியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், கீழக்கரை வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆனா மூனா சுல்த்தான் அவர்களுடன் இணைந்து பழங்கால கல்வெட்டுகளை கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர். தமிழகம் உலக வரலாற்று அரங்கில் ஒரு மைல் கல்லாக வரலாற்று ஆசிரியர்களால் இன்றும் பார்க்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தை சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் சிறப்புடன் ஆட்சி செய்து வந்துள்ளனர். இதற்கு முத்தாய்ப்பாக இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் தமிழக வரலாற்றில் ஒரு மணிமகுடமாக விளங்கும் பகுதியாகும். இப்பகுதியில் வரலாற்றுச்சிறப்புமிக்க […]
தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாநில தலைவருடன் ‘கீழை நியூஸ்’ நிர்வாகிகள் சந்திப்பு
ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகிய பத்திரிகை மற்றும் ஊடக துறை என்பது சமூக பொறுப்புணர்வுடன் உண்மை செய்திகளை உடனுக்குடன் சாமானியனுக்கு கொண்டு செல்லும் மாபெரும் பணியினை செம்மையாக செய்து வரும் உன்னதமான துறையாகும். இதனை மென்மேலும் சிறப்புடன் செய்வதற்கு பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், நிருபர்கள், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள் போன்றோரின் அர்ப்பணிப்பு எழுத்துக்களால் சொல்லி விட முடியாது. இந்த பத்திரிகை துறை நண்பர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் (தமிழ்நாடு பத்திரிகை ஊடகவியலாளர் யூனியன்) என்கிற […]
கீழக்கரையில் உள்ளூர் ‘வரலாற்று சுற்றுலா’ – அல் பையினா பள்ளி மாணவர்களுடன் வரலாற்று ஆரய்ச்சியாளர்கள் பங்கேற்பு
‘வரலாறு தெரியாதவர்கள் ; வரலாறு படைக்க மாட்டார்கள்’ என்பது முன்னோர்கள் வாக்கு. ஆனால் இன்று நம்முடைய தொன்மையான சரித்திரமும், மூதாதையர் வழி வரலாறும் முறையாக தெரியாததன் விளைவாக நம்முடைய பண்டைய கலாச்சாரம், இஸ்லாமிய விழுமங்கள், விருந்தோம்பல், சமத்துவ நட்புறவு சித்தாந்தம், ஆதி தொழில், பொருளாதாரம், உள்ளூர் பழக்க வழக்கங்கள், பேச்சு வழக்கு மொழி, ஆரோக்கியம், மருத்துவ முறை, சத்தான உணவு முறை, முத்தான உறவு முறை, பண்டைய உள்ளூர் விளையாட்டுகள் உள்ளிட்ட பாரம்பரிய விஷயங்கள் எல்லாம் காலப் […]
கீழக்கரையில் புதிய மருந்தகம் திறப்பு..
கீழக்கரையில் இன்று (28-02-2018) புதிய மருந்தகம் “அப்போலோ ஃபார்மஸி” திறக்கப்பட்டது. இப்புதிய மருந்தகத்தை அந்நிறுவனத்தின் மேலாளர் சிவகுமார் திறந்து வைத்தார். இப்புதிய மருந்தகம் மணீஸ் பேக்கரி ஆட்டோ ஸ்டான்ட் எதிரில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில் அமைந்துள்ளது.
தாசிம்பீவி கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்..
கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 10 மற்றும் 11ம் தேதிகளில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கம் SKILLED YOUTH PROFESSIONAL ASSOCIATION (SYPA) மற்றும் JANSEVA (வட்டியில்லா வங்கி) ஆகிய அமைப்புடன் இணைந்து தாசிம் பீவி மகளிர் கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கருத்தரங்கில் கல்லூரி பெண்கள் மட்டும் குடும்ப பெண்கள் கலந்து கொள்ளலாம், இதற்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் […]
கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளயில் அறிவியல் கண்காட்சி – புகைப்பட தொகுப்பு…
இந்தியாவில் ஃபிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளியில் இன்று (28-02-2018) பள்ளி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் அனைத்து வகுப்புகளில் இருந்தும் பல மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்காண்காட்சியில் மரம் வளர்த்தல், இயற்கை வளத்தை பேணுதல், பூகோள அமைப்பு, கோள்கள் அமைப்பு, விஞ்ஞான வளர்ச்சி, தகவல் தொடர்பு வளர்ச்சி, இயற்கையோடு இணைந்நு வாழ்தலின் அவசியம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போன்ற செயல்பாடுகளை விளக்கும் வண்ணம் பள்ளி […]
மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம் “THEMIDA-18”
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத்துறையின் சார்பாக மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் “THEMIDA-18” மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமையேற்று துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், “கணினித்துறையில் மிகவேகமாக வளர்ந்து வரும் பல தொழில்நுட்பங்கள் மனிதரின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மனிதருக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது. அதுமட்டுமன்றி இன்று மருத்துவத் துறையில் பிரம்மிக்கும் வகையில் அறுவைச் சிகிச்சையிலும் […]
உயரழுத்த மின் டவர் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி..
இராமநாதபுரம் பரமக்குடி காக்கா தோப்பு அருகே முருகன் 34, என்ற இளைஞர் மது போதையில் உயரழுத்த மின் டவர் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபரம் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞரை சமாதானப் படுத்த முயற்சித்தனர். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் போதையில் இருந்த வாலிபர் கீழே இறங்கி வர மறுப்பு. இந்த வாலிபர் தமிழக அரசு சார்பில் மானிய விலையில் வழங்மும் […]
ஜித்தாவில் “FRIENDS REPUBLIC CLUB” நடத்திய மாபெரும் வாலிபால் போட்டி..
தமிழகம், கேரளா மக்கள் மற்றும் அதிகமான கீழக்கரை இளைஞர்கள் இணைந்து கடந்து வருடம் ஆரம்பிக்கப்பட்ட கிளப் “FRIENDS REPUBLIC CLUB”. இந்த கிளப் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (23-02-2018) அன்று பல நாட்டு வீரர்கள் கலந்து கொண்ட மாபெரும் வாலிபால் போட்டி பின்மாலிக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் லெபனான், சிரியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா கிளப்கள் சார்பாக பல அணிகள் மோதினர். இறுதியாக முதல் பரிசு சவுதி ரியால்.5000/- மற்றும் கோப்பையை அஜீசியா கிளப் வென்றது. […]
கச்சத்தீவு அந்தோனியர் ஆலய திருவிழா.. ஏராளமானோர் பங்கேற்பு..
கச்சத்தீவு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 1532 ஆண் பக்தர்களும், 336 பெண் பக்தர்களும், ஆண் குழந்தைகள் 29 மற்றும் பெண் குழந்தைகள் 23 பேர் என 1920 பக்தர்கள் இன்று நண்பகல் கச்சத்தீவு சென்றனர். இலங்கையில் இருந்து சிங்களம் மற்றும் தமிழ் பக்தர்கள் என 6500 பக்தர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்திற்கு சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரத்தால் ஆன 40 அடி உயரமுள்ள கொடி மரத்தை தமிழக பக்தர்களால் […]
கீழக்கரையில் கூடுதலாக ஒரு அரசியல் அமைப்பு தொடக்கம்..
தமிழக மக்கள் நல சங்கத்தின் கீழக்கரை கிளை இன்று தொடங்கப்பட்டது. இதற்கான கூட்டம் இன்று (24-02-2018) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 75கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். இந்த சங்கம் வரும் மார்ச் மாதம் முதல் அரசியல் கட்சியாக செயல்படும் என்று அறியப்படுகிறது. இச்சங்கத்தின் கீழக்கரை கிளை தலைவராக செல்வம், செயலாளராக பெருமாள், பொருளாளராக தங்கராஜ், துணை தலைவராக சசிகுமார், நகர் துணை தலைவராக ஹாஜா முகைதீன், துணை செயலாளராக பிரவீன்குமார் மற்றும் நகர் இளைஞர் அணி […]
You must be logged in to post a comment.