கீழக்கரை தாலுகா திருப்புல்லாணி பிர்க்கா வண்ணாங்குண்டு குருப் வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் கீழக்கரை சமுகபாதுகாப்புத்திட்ட தாசில்தார்.எம் தமிம்ராஜா தலைமையிலும் வட்ட வழங்கல் அலுவலர்.உமாராணி மற்றும் மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இம்முகாமில் 6 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளும், 3பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைகளும், குடும்ப அட்டையில் பெயர்சேர்த்தல், பெயர்நீக்கம் , பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப்பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 69 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இம்முகாமில் திருப்புல்லாணி வருவாய் […]
Category: நிகழ்வுகள்
கருவேல மர ஒழிப்பில் களமிறங்கிய SDPI கட்சி – மாநிலம் தழுவிய சீமை கருவேல மரம் அகற்றும் பணி இன்று பரமக்குடி அருகே துவங்கியது
மண் வளத்தை நாசமாக்கி நீர் ஆதாரங்களை உறிஞ்சும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் மாநில அளவிலான களப் பணியினை கட்சியினர் இன்று 17.03.17 துவங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று SDPI கட்சியின் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு கலை கல்லூரி அருகே தந்தரேந்தல் கிராமத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை கட்சியின் மாநில செயலாளரும், சுற்று சூழல் பிரிவு மாநில பொறுப்பாளருமான டி. ரத்தினம் கலந்து கொண்டு கருவேல மரங்களை வெட்டி நிகழ்ச்சியினை தொடங்கி […]
கீழக்கரை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்..
கீழக்கரையில் 17-03-2017 (வெள்ளிக்கிழமை) அன்று, கீழக்கரை புதுத்தெருவில் பல்வேறு சமுதாய பணிகளை பொதுமக்கள் நலனுக்காக செய்து வரும் முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இச்சிகிச்சை முகாமுக்கு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கத்தின் (MYFA) தலைவர்.S.A.C.பவுசுல் அலியூர் ரஹ்மான் தலைமை வகிக்கிறார், மேலும் முன்னாள் MYFA & தெற்கு தெரு முன்னாள் செயலாளர்.S.M.சீனி அப்துல் காதர் வாழ்த்துரை வழங்குகிறார். நன்றியுரையை நூரானியா பள்ளியின் தாளாளர். S.M. […]
கீழக்கரையில் ரேஷன் கடை முற்றுகை ஆர்ப்பாட்டம் – தி.மு.க நிர்வாகிகள் 20 க்கும் மேற்பட்டோர் கைது
கீழக்கரை நகரில் இன்று 13.03.17 காலை 11.30 மணியளவில் கீழக்கரை நகர் தி.மு.க சார்பாக ரேசன் கடைகள் முன்பாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கிட கோரி ரேஷன் கடை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு தெரு அப்பா பள்ளிவாசல் பின்புறம் உள்ள ரேசன் கடையின் முன்பாக நடைபெற்ற முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் செயலாளர் S. A.H.பசீர் அகமது தலைமையில் நகர் கழக நிர்வாகிகள் கென்னடி, மூர் ஜெய்னுதீன், ஜமால் பாருக், முன்னாள் வார்டு கவுன்சிலர் சாகுல் […]
பெரிய பட்டிணத்தில் திமுக சார்பில் ரேஷன் கடை முற்றுகை ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் ரேஷன் கடைகளில், கடந்த சில மாதங்களாக பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை சரி வர வினியோகிக்கவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது. சர்க்கரை மட்டும் வழங்குவதால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 13.03.17 ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் உள்ள இரன்டு ரேசன் கடைகள் முன்பாகவும் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்கம் பசீர் […]
மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று 12.03.17 காலை 11 மணியளவில் இராமநாதபுரம் ஜனார்தன் மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கீழக்கரை தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமீம் ராசா இரண்டாவது முறையாக மாவட்ட செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான கீழக்கரை சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாவட்ட செயலாளர் தாசில்தார் தமீம் ராசாவுக்கும், அவருடன் பொறுப்பேற்றிருக்கும் அனைத்து […]
கட்டுரை போட்டியில் வென்ற முஹைதீனியா பள்ளி மாணாக்கர்களுக்கு பாராட்டு
கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளி மாணவ மாணவிகள் கடந்த 20.02.17 அன்று தாஸீம் பீவி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ”THE SINGLE PAGE WILL CHANGE” என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில் பங்கேற்று சான்றிதழ்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் பள்ளியின் கல்விக் குழு பொருளாளர் சேகு பஷீர் அஹமது, பள்ளியின் முதல்வர் NM சேகு சஹபான் பாதுஷா ஆகியோர் மாணாக்கர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவப்படுத்தினர். வெற்றி பெற்ற பள்ளி […]
இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி
இந்தியாவில் பிப்ரவரி 1928ம் ஆண்டு 28ம் தேதி சி.வி.ராமன் கண்டுபிடிப்பை போற்றும் வண்ணம் அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு வருடமும் முன்னனி பள்ளிகள் மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பல அறிவியல் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவார்கள். அத்தினத்தை கொண்டாடும் விதமாக கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு 3 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வடிவமைத்த மாதிரி அறிவியல் படைப்புகள் பொது மக்கள் பார்வைக்காக இன்று வைக்கப்பட்டது. அறிவியல் […]
இளைஞர்கள் விளையாட்டு துறையில் சாதனை படைக்க வேண்டும் – இந்திய கப்பற்படை முன்னாள் கமாண்டோ செய்யது ஹமீதா கலை கல்லூரியில் சிறப்புரை
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று 10.03.17 விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக இந்திய கப்பற்படையின் ஓய்வு பெற்ற கமாண்டர் ஏ. வைத்தியநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் “இந்திய அளவில் இளைஞர்களுக்கும் கல்லூரி காலத்தில் பயிலும் விளையாட்டில் ஆர்வம் மற்றும் அதிக ஈடுபாடு கொண்ட மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு பாதுகாப்புத் துறைகளில் அதிக வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. மாணவ மாணவியர் அனைவரும் […]
கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளியில் ரூபெல்லா தடுப்பூசி முகாம் – சுகாதார இணை இயக்குனர் முன்னிலையில் நடைபெற்றது.
கீழக்கரையில் இன்று 11.03.17 வடக்கு தெரு முஹைதீனியா மெட்ரிகுலேஷன் பள்ளி தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு டாக்டர் ராசிக்தீன் தலைமை வகித்தார். சுகாதார இணை இயக்குனர் காஞ்சனா முன்னிலையில் முன்னதாக விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்து தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இந்த நல்ல முயற்சியினை முன்னெடுக்கும் அரசு துறையினருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளியின் தாளாளர் மௌலா முகைதீன், […]
கீழக்கரை தீனியா மெட்ரிக் பள்ளியில் ரூபெல்லா தடுப்பூசி முகாம் – ஏராளமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
கீழக்கரையில் இன்று 11.03.17 கிழக்கு தெரு தீனியா மெட்ரிகுலேஷன் பள்ளி, வடக்கு தெரு முஹைதீனியா மெட்ரிகுலேஷன் பள்ளி, மேலத் தெரு ஹமீதியா பெண்கள் மேனிலை பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர். முன்னதாக அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத் துறையினர், அரசு மருத்துவர்கள் முன்னிலையில் பெற்றோர்களுக்கான தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தீனியா […]
ராமநாதபுரத்தில் வட்டியில்லா வங்கி – ‘ஜன் சேவா’ கூட்டுறவு சங்கம் துவக்க விழா நிகழ்ச்சி – சமுதாய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு
வட்டியில்லாத வங்கி நடைமுறைகளை விரும்ப கூடியவர்களுக்கான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு அமைப்பாக ஜன் சேவா கூட்டுறவு சங்கம் இருக்கிறது. முற்றிலும் வட்டி இல்லாத நிலை, லாபத்தில் பங்கீடு மற்றும் சாமானிய மக்களின் பொருளாதார தேவைகளை சரி செய்து முன்னேற்றம் அடைய வழிவகைகளை செய்வது இந்த சங்கத்தின் முதன்மை நோக்கமாக கூறப்பட்டு இருக்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 7 மாநிலங்களில் 31 கிளைகள் செயல்படுகிறது. 21000 வாடிக்கையாளர்களை கொண்டு சுமார் 450 கோடி […]
கீழக்கரை அருகே நல்லிருக்கை கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாம்..
கீழக்கரை தாலுகாவில் உள்ளடங்கிய நல்லிருக்கை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தில் கீழக்கரை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கே எம் தமிம்ராஜா தலைமையிலும் வட்ட வழங்கல் அலுவலர் உமாராணி மற்றும் மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது இம்முகாமில் 3(மூன்று) பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைகளும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப்பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 24 […]
சங்க கால இலக்கிய புரட்சிப் பெண்களை நினைவூட்டும் விதமாக மாறுவேடத்தில் மாணவிகள் – தாசிம் பீவி மகளிர் கல்லூரி தமிழ் துறை சார்பாக புதிய முயற்சி
பன்னெடுங்கால சரித்திர பெருமை வாய்ந்த நம் தமிழ் மண்ணின் சங்க கால இலக்கிய புரட்சிப் பெண்களையும், நம் தாய் திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீர திருமகள்களையும் நினைவூட்டும் விதமாக தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று (10-03-2017) நடந்த மாறுவேடத்தில் அச்சு அசலாக காட்சியளித்தது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர். இவர்களுள் அவ்வையார், காரைக்கால் அம்மையார், கண்ணகி, மணிமேகலை, தில்லையாடி வள்ளியம்மை, வீர மங்கை வேலுநாச்சியார் போன்று மாணவிகள் மாறுவேடம் அணிந்திருந்தனர். இவர்களை […]
திருமாவளவனுடன் கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு
இன்று 09.03.17 இராமநாதபுரம் வந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர். அவருடன் மாநில துணை செயலாளர் கனியமுதன் உடனிருந்தார் இந்த சந்திப்பில் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் முகைதீன் இப்ராகீம், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் இராமநாதபுரம் மாவட்ட துணை அமைப்பாளர் செய்யது யாசீன், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் நகர் செயலாளர் ஹமீது யூசுப், கட்சியின் நிர்வாகிகள் நெய்னா அசாருதீன், ஜெய்னுலாப்தீன், […]
கீழக்கரை தாஸீம் பீவி மகளிர் கல்லூரி மாணவிகள் சுகாதார துறையினருடன் இணைந்து ரூபெல்லா தடுப்பூசி விழிப்புணர்வு ஊர்வலம்
கீழக்கரையில் நகராட்சி நிர்வாகத்தினர், சுகாதார துறையினருடன் இணைந்து தாஸீம் பீவி மகளிர் கல்லூரியின் நாட்டு நல திட்ட மாணவிகள் இன்று 09.03.17 விழிப்புணர்வு ஊர்வலத்தினை துவங்கியுள்ளனர். கீழக்கரை சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, அரசு மருத்துவர் ராசிக்தீன், சுகாதார துறை மலேரியா கிளினிக் அதிகாரி செல்லக்கண்ணு தலைமையில் இந்த ஊர்வலம் சிறப்பாக நடை பெற்று வருகிறது. கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமான தாஸீம் பீவி மகளிர் கல்லூரியின் மாணவிகள் பங்கேற்று […]
கீழக்கரை முஹைதீனியா பள்ளி கல்விக்குழு நிர்வாகிகள் தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழங்கிய ‘தன்னம்பிக்கை டானிக்’
தமிழகம் முழுவதும் தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அரசு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 6000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெரு முஹைதீனியா மேட்ரிகுலேஷன் பள்ளியில் அந்த பள்ளியில் இருந்து தேர்வெழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக முஹைதீனியா கல்விக் குழு நிர்வாகிகள் சிறப்பான சொற்பொழிவினை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றிய பள்ளியின் கல்விக்குழு உபதலைவர் MMS. முகைதீன் இபுராஹீம், கல்விக்குழு […]
கீழக்கரையில் ரூபெல்லா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் – சுகாதார துறையினருடன் சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளி மாணவர்கள் களமிறங்கினர்.
கீழக்கரையில் நகராட்சி நிர்வாகத்தினர், சுகாதார துறையினருடன் சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளி மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலத்தினை நடத்தினர். கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரின் அறிவுறுத்தலின் பேரில் இன்று 08.03.17 மாலை கீழக்கரை சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, சுகாதார துறை மலேரியா கிளினிக் அதிகாரி செல்லக்கண்ணு தலைமையில் இந்த ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளியின் தலைமையாசிரியை விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் […]
மகளிர் தினமான இன்று கீழக்கரையில் புதிதாக திறக்கப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம்
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் காணொளி திரை காட்சி, வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று 08.03.17 மாலை புதிதாக கட்டப்பட்டுள்ள ஏர்வாடி காவல் நிலையம், கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. பல்லாண்டு காலமாக, தனியார் இடங்களில் உள்ள வாடகை கட்டிடத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. பலமுறை இடமாற்றம் செய்யப்பட்டதால் காவலர்களும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் மகளிர் […]
கீழக்கரையில் இன்று புதிய DSP அலுவலகம் திறப்பு – தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
கீழக்கரை நகர் வடக்கு தெரு பகுதியில் BSNL அலுவலகம் அருகாமையில் புதிதாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த வருடம் பணிகள் முழுமையாக நிறைவடைந்தது. இன்று 08.03.17 இந்த காவல் துறை அலுவலகத்தை முறைப்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி திரை காட்சி, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப் பிரிவு DSP மல்லிகா மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் தலைமையேற்று விழாவினை சிறப்பித்தனர். கீழக்கரையில் காவல் துறை […]
You must be logged in to post a comment.