ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் தற்போது தமிழகம் முழுவதும் சகாயம் IAS வழிகாட்டுதலின் படி மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் ஜெனரிக் மெடிக்கல் ஷாப் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தின் முதல் மக்கள் மருந்தகம் கீழக்கரை அருகே ஏர்வாடியில் துவங்கப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சிக்கல் அருகே மேலகிடாரம் ஊராட்சியில் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி […]
Category: நிகழ்வுகள்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக பங்குனி உத்திர திருவிழாவில் மோர்ப்பந்தல்..
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட மையத்தின் சார்பில் இன்று(09-04-17) நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மோர் பந்தல் மற்றும் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இராமநாதபுரம் தாலூகா அலுவலக நுழைவு வாயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் சுமார் 6000 பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அன்னதானம், பானக்கம், தண்ணீர், மோர் போன்ற தாகம் தீர்க்கும் பானங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இப்பணியை இராமநாதபுரம் தாலுகா அலுவலக சங்கத்தினர் தொடர்ந்து 52 வது […]
வாலிபால் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெரும் கீழக்கரை இளைஞர்கள்..
08-04-2017 அன்று ஒப்பிலானில் அல்-அப்ரார் நண்பர்கள் சார்பாக சூரிய ஒளிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல ஊர் அணியினர் கலந்து கொண்டார்கள். இப்போட்டியில் முதல் பரிசு முதல் நான்காம் பரிசு வரை, ஒப்பிலான் சைபுல் இஸ்லாம் அணி, ஒப்பிலான் அல்-அப்ரார் அணி, நிரப்பையூர் அணி மற்றும் கீழக்கரை அணி என முறையே வென்றனர். இப்போட்டியில் பரிசுத் தொகையாக ₹.5002 முதல் ₹.1002 வரை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. இப்போட்டியில் பரிசு பெற்ற கீழக்கரை இளைஞர்களை கீழை நியூஸ் […]
கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி 29ம் ஆண்டு விழா…
கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி 25ம் ஆண்டு விழா 06-04-2017 அன்று சிறப்பாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டு மாணவி ரஷீதத் நலீஃபா கிராத்துடன் தொடங்கியது. கல்லூரியின் முதல்வர்.சுமையா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர்.நாதிரா பானு கமால் கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மலேசிய அரசின் தென்னிந்திய தூதரக அதிகாரி அஹ்மத் பஸாரஜாம் பின் அப்துல் ஜலீல் மற்றும் அவரது துணைவியார் சித்தி நூர் மவர் பின்டி […]
மலேசிய தூதரக அதிகாரிகள் கீழக்கரையை ரசித்து.. ரசித்து .. பார்த்து மகிழ்ந்தனர்…
கீழக்கரையில் கடந்த சில தினங்களாக மலேசிய தூதரக அதிகாரிகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இச்சுற்றுப்பயணத்தில் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். அவர்களுடைய பயணத்தைப் பற்றி வரலாற்று ஆய்வாளர் அபூ சாலிஹ் கூறுகையில், கீழக்கரையில் இரவு நேரங்களில் நடந்தே சென்று கடைகளயும், உண்பண்டங்களையும் மிகவும் ரசித்ததோடு இல்லாமல், மலேசியாவின் சாயல் அதிகமாக இருப்பதாக வியந்தனர். மேலும் கீழக்கரை வரலாற்று அம்சங்கள் அடங்கிய புத்தகத்தை கீழக்கரை ஆர்வலர்களின் மலேசியா அதிகாரிகள் ஆர்வத்துடன் வேண்டுகோள் வைத்தனர். மேலும் மலேசியா […]
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தேசிய கடற்படை தினம்..
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கப்பல் துறைச் சார்பாக “54வது இந்திய தேசிய கடற்படை தினம்” கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர். அப்பாஸ் மைதீன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியின் வரவேற்புரையை கல்லூரி கப்பல் துறைப் பேராசிரியர் தங்கவேல் வழங்கினார். மேலும் 54வது இந்திய தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு உச்சிப்புளி, இந்திய கப்பற்படையின் ஐ.என்.எஸ். பருந்துவின் கமாண்டிங் ஆபிசர். கேப்டன். விஷால்ராய், கல்லூரியில் […]
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா..
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா இன்று (05-04-2017) காலை 09.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இறைவணக்கத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து முதல்வர் முனைவர்.சுமையா வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. முதல் நிர்வாகிகள் கல்லூரியின் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழா உறுதி மொழியுடன் பட்டமளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். கிருஷ்ண பாஸ்கர் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கான பட்டங்களை […]
கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் சிறந்த சேவை புரிந்தோருக்கான விருது வழங்கும் விழா
கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக சிறந்த சேவை புரிந்தோருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி 02.04.17 அன்று முகம்மது சதக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. 2016 – 2017 ஆம் ஆண்டுக்கான ஐந்து பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கீழக்கரை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தாவூத்கான், கிளீன் கீழக்கரை ஒருங்கிணைப்பாளர் சட்டப் போராளி அபு சாலிஹ், ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் சுரேஷ், வனக்காப்பாளர், தனியார் வங்கி ஊழியர் சுகன்யா ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர். இவ்விருதுகளை ரோட்டரி கவர்னர் […]
தாசீம் பீவி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி…
கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரியில் இன்று சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் சுமையா தாவூது தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அரசின் தொழில் முனைவோர் முன்னேற்ற கழகம் சார்பாக சென்னை கிண்டியில் இருந்து வட்டார இயக்குனர் R செந்தில் குமார், மதுரை உயர் கல்வி ஆராய்ச்சி மையத்தின் முதன்மை கல்வி அலுவலர் S . செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை […]
கிழக்குத் தெரு மதரஸாவில் நடைபெற்ற கல்வி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி
கீழக்கரை கிழக்குத் தெருவில் செயல்படும் அல் மத்ரஸத்துல் அரபிய்யதுஜ் ஜெய்னபிய்யா அரபி மதரஸாவில் 1/4/2017 அன்று மாலை 5 மணியளவில் கல்வி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மதரஸா நிர்வாக அறங்காவலர் ஹைருன்னிஸா தலைமை வகித்தார். மீரா பானு, செய்யது ஜகுபர் பாயிஸா முபல்லிகா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மௌலவி அப்துஷ் ஷக்கூர் ஆலிம் மன்பஈ கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தீனியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி நிர்வாக மேலாளர் […]
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 14வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது…
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 14வது பட்டமளிப்பு விழா 01.04.2017 அன்று காலை 11.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை கல்லூரியின் நெறியாளர் டாக்டர்.J. முஹம்மது ஜஹபர் அவர்கள் முன்னிலை வகித்து துவக்கி வைத்தார். பின்னர் கல்லூரியின் முதல்வர்.E.ரஜபுதீன் வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் மதுரை காமசராசர் பல்கலைக்கழக பல்லுயிர் மற்றும் வனவியல் துறையின் தலைவர் மற்றும் […]
கீழக்கரை நூரானியா பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம்..
இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. கீழக்கரையில் நகராட்சி ஆணையர் தலைமையில் இன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கீழக்கரை புதுத்தெரு நூரானியா பள்ளியிலும் அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழு தலைமையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாம் இன்று மாலை 05.00 மணி வரை நடைபெறும். இம்முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நூரானியா பள்ளி நிர்வாகம் அனைவரும் பயன் பெரும் வகையில் சிறப்பாக செய்துள்ளார்கள்.
கீழக்கரையில் வோடோபோன் 4G சேவை அறிமுக நிகழ்ச்சி – தனியார் நிறுவனத்தில் கேக் வெட்டி துவக்கம்
கீழக்கரை முஸ்லீம் பஜாரில் செயல்படும் SAK கம்யூனிகேஷன் செல்போன் சேவை நிறுவனத்தில் நேற்று முன் தினம் வோடோபோன் 4G சேவை அறிமுக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சசியில் தொழிலதிபர் சேகு மதார் சாகிபு தலைமையேற்று கேக் வெட்டி வோடோபோன் சேவையை இனிதே துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வோடோபோன் நிறுவனத்தினரும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை SAK கம்யூனிகேஷன் நிறுவனர் ரியாஸ் கான் மற்றும் அமீர் கான் நல்ல முறையில் செய்திருந்தனர்.
கீழக்கரையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் – இஸ்லாமியா பள்ளியில் நகராட்சி ஆணையர் துவங்கி வைத்தார்
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று 02.04.17 முதல் தவணையாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. கீழக்கரை நகரில் பல்வேறு பள்ளிகளிலும், சமூக கூடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளியில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் தலைமையேற்று போலியோ சொட்டு மருந்து முகாமை துவங்கி வைத்தார். கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா அரபி மதரஸாவில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் […]
கீழக்கரையில் DSP மகேஸ்வரிக்கு பிரிவுபசார விழா – கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ‘சிறந்த நேர்மையாளர்’ விருது வழங்கி கவுரவிப்பு
கீழக்கரை நகரில் சிறப்பாக பணியாற்றி தற்போது விருதுநகருக்கு பணியிட மாறுதலில் செல்லும் கீழக்கரை துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரிக்கு இன்று மாலை 5 மணியளவில் ஹுசைனியா மஹாலில் பிரிவுபசார விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது நேர்மையோடும், கொள்கை பிடிப்போடும் கீழக்கரை நகரில் மிக சிறப்பாக பணியாற்றியமைக்காக கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ‘சிறந்த நேர்மையாளர் விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதினை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஸ்டேஷன் மாஸ்டர் M.M.S.செய்யது இபுறாகீம் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் […]
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக ராழியா மதரஸாவில் நிலவேம்பு கசாயம் விநியோகம்
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் செயல்படும் அல் மதரஸத்துர் ராழியாவில் இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக மதரஸா மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் நேற்று வழங்கப்பட்டது. ஏராளமான மாணவர்கள் கஷாயத்தை வாங்கி அருந்தி சென்றனர். டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது போன்று நிலவேம்பு கஷாயங்களை அருந்துவதை நகரில் இருக்கும் அனைத்து மதரஸாக்களும் ஊக்கப்படுத்த வேண்டும்.
கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை தெற்கு மல்லல் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்…
கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை பிர்க்கா மல்லல் குருப் தெற்கு மல்லல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தில் கீழக்கரை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கே எம் தமிம்ராஜா தலைமையிலும், வட்ட வழங்கல் அலுவலர் உமாராணி, மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் இன்று (31-03-17) அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு ஈமக்கிரியை செய்வதற்கான உதவித் தொகைகக்கான காசோலைகளும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 […]
வள்ளல் சீதக்காதி சாலையில் விலை குறைப்பில் கிடாக் கறி விற்பனை துவக்கம் – கிலோ ரூ.440
கீழக்கரையில் கடந்த டிசம்பர் மாதம் திடீர் என கிடாக் கறி விலை ரூ440 ல் இருந்து ரூ.500 ஆக ஒரே நாளில் உயர்ந்தது. இதனால் ஏழை எளிய பொதுமக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் பெரும் மன உளைச்சல் அடைந்தனர். மேலும் நகரின் அசைவ பிரியர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர். இது சம்பந்தமாக கீழக்கரை நகரில் உள்ள பொது அமைப்பினர் மற்றும் சமுதாய அமைப்பினர் வட்டாட்சியருக்கு புகார் மனு செய்தனர். ஆனால் தீர்வு எட்டப்படாத சூழலில் கீழக்கரை நகர் SDPI […]
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கீழக்கரை வட்டக் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு…
கீழக்கரை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கீழக்கரை வட்டக் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பின்வரும் சங்கத்தின் உறுப்பினர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டார்கள். தலைவர். செல்வராஜ், செயலாளர். புல்லாணி, பொருளாளர். கோகிலா, துணைத்தலைவர். ரவிச்சந்திரன், […]
கீழக்கரை நகராட்சி சார்பாக அத்திலை தெரு பகுதியில் நிலவேம்பு கசாயம் விநியோகம்
கீழக்கரை நகராட்சியின் ஏற்பாட்டில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழக்கரை நகர் முழுவதும் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அத்தியிலை தெரு பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஏராளமாக இளைஞர்களும், சிறுவர்களும், பொதுமக்களும் வாங்கி அருந்தி வருகின்றனர். தகவல் : சமூக ஆர்வலர். அசாருதீன்
You must be logged in to post a comment.