உலக புகையிலை எதிர்ப்பு தினம் – கீழக்கரை நகராட்சி சார்பாக விழிப்புணர்வு பேரணி..

உலகம் முழுவதும் மே 31ம் தேதி புகையிலை எதிர்ப்பு தினமான கடைபிடிக்கப்படுகிறது.  இத்தினத்தை ஒட்டி கீழக்கரை நகராட்சி சார்பாக புகையிலையின் தீமையை விளக்கி விழிப்புணர்வு ஏற்பாடு செய்யபட்டது. இப்பேரணி கீழக்கரை நகராட்சி ஆணையர் வசந்தி தலைமையில் மற்றும் அனைத்து நகராட்சி அலுவலர்களின் முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. இப்பேரணியில் புகையிலையின் தீமையை விளக்கும் வண்ணம் பதாககைகளை ஏந்தியபடி கீழக்கரையின் முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையில் தொடங்கி அனைத்து தெருக்களிலும் நகராட்சி ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர்.  […]

குப்பையில்லா நகராட்சி, ப்ளாஸ்டிக் இல்லா நகராட்சி – கழிவுகள் கையாள்வது பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்…

கீழக்கரை நகராட்சியில் இன்று (31-05-2017) காலை 11.00 மணியளவில் கீழக்கரை திடக்கழிவு மேலான்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2016ன் படி அத்திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி கீழக்கரையில் உள்ள வர்த்தக உரிமையாளர்களுடன் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குப்பைகளை பிரித்தளித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விதிமுறைகள் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டம் கீழக்கரை ஆணையர் M.R.வசந்தி தலைமையிலும், தலைமை எழுத்தர் சந்திரசேகர் முன்னிலையிலும், வர்த்தக சங்க செயலர் ரோட்டரி சுப்பிரமணியன் அவர்களால் தொடங்கப்பட்டது. இக்கூட்டத்தில் திடக்கழிவு விதிகள் பற்றியும், […]

திறப்பதற்கு (குடியை கெடுப்பதற்கு) சில நிமிடங்கள்.. மூடுவதற்கு (நல்வழி படுத்த) ஆறு மாத அவகாசம்…

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் சாராயக்கடையை அடைக்க கோரி பல இடங்களில் போராட்டங்களும், அதே போராட்டங்கள் மூலம் பல இடங்களில் கடைகள் சூறையாடப்படும் அளவுக்கு சென்றது. ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காமல் தமிழக அரசாங்கம் மூடப்பட்ட கடைகளை மற்ற பிற இடங்களில் திறப்பதற்கான முயற்சியிலேயே இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து கீழக்கரையில் சில நாட்களுக்கு முன்னர் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள மதுக்கடைகளை நாம்தமிழர் கட்சியினர் முற்றுகையிடப்போவதாக அறிவித்து […]

இராமநாதபுரம் அருகே இரு பிரிவினர் மோதல் – ஒருவர் கொலை ! பதட்டம்!

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள நாகாச்சி கிராமத்தில் உள்ள ஒரு பிரிவினருக்கும் கடற்கரை அருகில் உள்ள மீனவ குடியிருப்பான அழகத்தாவலசை கிராமத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் அழகத்தாவலசையை சேர்ந்த நாகராஜ், லட்சுமனன் ஆகியோரை மற்றொரு பிரிவினர் உச்சிப்புளி மார்க்கெட்டில் வைத்து வெட்டியுள்ளனர் இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் லட்சுமனன் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமணையில் அனுமதிக்கந்நட்டுள்ளார். காவல்துறையினர் விசாரனை நடத்தி பதட்டத்தை தனிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கீழக்கரையும்.. நோன்பு கஞ்சியும்…

இன்று கீழக்கரையில் முதல் நோன்பு திறக்கும் நேரம் நெருங்கி விட்டது. நோன்பை எந்த அளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்போமோ அதுபோல் கீழக்கரை பள்ளி வாசல்களில் அசர் நேரத் தொழுகைக்குப் பிறகு ஊற்றப்படும் நோன்பு கஞ்சிக்கு காத்திருக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த நோன்பு கஞ்சி பெரியவர் முதல் சிறியவர் வரை, செல்வந்தர் முதல் வறியவர்கள் வரை எந்த பாகுபாடின்றி வாங்கி செல்லும் காட்சியை நோன்பு காலங்களில் காண முடியும். பள்ளிகளில் ஊற்றப்படும் கஞ்சிக்கு நிகர் எதுவும் கிடையாது. […]

சவுதி ஜித்தாவில் கீழக்கரை மக்களின் இஃப்தார் சங்கமம்…

இன்று சவுதி அரேபியா மற்றும் அனேக மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நோன்பு தொடங்கியது. முதல் நோன்பான இன்று சவுதி அரேபியா ஜித்தாவில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் கீழக்கரை சகோதரர்கள், குடும்பத்தினர் மற்றும் அவர்கள் சார்ந்த நட்பு வட்டாரங்களுக்கான இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆர்யாஸ் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் ஏராளமான கீழக்கரை மற்றும் அப்பகுதி சார்ந்த மக்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சி எல்லா தரப்பு மக்களையும் […]

தகுதி இல்லாதவர்களுக்கு உதவித்தொகை ரத்து.. வட்டாட்சியர் நேரடி ஆய்வில் அதிரடி..

கடந்த சில வாரங்களாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.நடராசன் உத்தரவின்படியும், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி,  சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கிய அறிவுரைகளின் படி கீழக்கரை தாலுகா மற்றும் பிர்க்கா எர்வாடி குருப்பில் உள்ள ஏர்வாடி, ஏர்வாடி தர்கா, காட்டுப்பள்ளி தர்கா,சின்ன ஏர்வாடி, தண்ணீர்ப்பந்தல், வெட்டமனை, ஆதஞ்சேரி, கோகுல்நகர், உள்ளிட்ட பகுதிகளில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளை கீழக்கரை சமூகபாதுகாப்புத் திட்ட தாசில்தார் கே எம் தமிம்ராஜா […]

நம்மை நாமே உயர்த்திக் கொள்ள அழகிய பயிற்சி முகாம்…

ஒரு சமுதாயம் முன்னேற்றம் அடைய தனி மனித ஒழுக்கம் என்பது இன்றியமையாத ஒரு விசயமாகும். அவசர உலகில் இருக்கும் நாம் சில கால இடைவெளியில் நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்துக் கொள்வது மிக அவசியமாகும். நம் பண்புகளை சீர்படுத்தும் விதமாக கீழக்கரை வடக்குத் தெரு சகோதரர்கள் அனைவரும் இணைந்து நற்பண்புகள் என்ற தலைப்பில் நாளை (21-05-2017), ஞாயிறு அன்று இஷா தொழுகைக்குப் பிறகு சி.எஸ்.ஐ பள்ளி பின்புறம் உள்ள லண்டன் காலனியில் ஒழுக்கப் பயிற்சி (தர்பியா) முகாம் […]

அமீரகத்தில் காயிதே மில்லத் பேரவையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா..

ஐக்கிய அரபு அமீரகத்தில் அமீரக காயிரே மில்லத் பேரவையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா இதயங்கள் காப்போம் – சமய நல்லிணக்கம் காப்போம் என்ற முழுக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. இவ்விழா  19-05-2017 வெள்ளிக் கிழமை அன்று மாலை 07.00 மணியளவில் அபுதாபியில் மினா துறைமுகம் அருகில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில் ( Indian Social and Cultural Centre, Abudhabi, Near. Mina port) நடைபெறுகிறது. இவ்விழாவில் காயிதே மில்லத்தாய் வாடும் முனீருல் மில்லத் […]

தகுதியில்லாமல் அரசு உதவித் தொகை பெறும் நபர்களை கண்டறிய தாசில்தார் தலைமையில் ஆய்வு…

தமிழகத்தில் பல துறைகளில் தகுதியில்லாமல் அரசு பலன்களை பலர் அனுபவித்து வருகிறார்கள். அதைத் தடுக்கும் வகையில் சமீபத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளை பற்றி ஆய்வு மேற்கொண்டு, தகுதியற்றவர்கள் பெற்று வரும் உதவித் தொகைகளை ரத்து செய்து தகுதி உள்ளவர்களுக்கு வழங்கிட வேண்டும் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ் நடராசன் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர். […]

சென்னையில் இயற்கை ஆரோக்கியத்தை வலியுறுத்தும் “arogya”கண்காட்சி..

சென்னையில் மே மாதம் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வணிக வளாகத்தில் “arogya” “ஆரோக்யா” எனும் இயற்கை மருத்துவ சம்பந்தமான கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சி காலை 10.00 மணி முதல் மாலை 08.00 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இக்கண்காட்சியில் இயற்கை மருத்துவமான ஹோமியோபதி, யுனானி, சித்த மருத்துவம், யோகா மற்றும் இயற்கை சார்ந்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், ஆலோசனைக் கூட்டங்கள், மருத்துவ ஆலோசனைகள் […]

ரமலானை வரவேற்க தயாராகும் முஸ்லிம் சமுதாயம்..

முஸ்லிம் சமுதாயத்தின் மிகவும் புனிதமான மாதமாகும் ரமலான் மாதம்.  முஸ்லிம் ஆன ஒவ்வொருவரும் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இந்த புனித மாதத்தில் இறை வணக்கத்தின் மீது ஆர்வம் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.  அதுபோல் இம்மாதத்தில் பல் வேறு இஸ்லாமிய அமைப்புகளும் மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இன்னும் புனித ரமலான் தொடங்க ஒரு மாதம் இருக்கும் நிலையில் ரமலான் மாதத்தை வரவேற்கும் விதமாக சென்னை ரய்யான் ஹஜ் மற்றம் உம்ரா சர்வீஸ் நிறுவனம் சார்பாக 03-05-2017 அன்று ரமலானை […]

வள்ளல் சீதக்காதி சாலையில் இனியதோர் உதயம் – ‘பெஸ்ட் பேக்கரி’ இனிப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சி

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் கிரவுன் ஐஸ் கம்பெனி அருகாமையில் வடக்குத் தெருவை சேர்ந்த ‘மூன் மார்ட்’ கானா சீனா பிரதர்ஸ் நண்பர்களுடன் இணைந்து புதிதாக ‘பெஸ்ட் பேக்கரி’ என்கிற பெயரில் இனிப்பகம் திறந்துள்ளனர். இந்த இனிப்பான திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று முன் தினம் 27.04.17 காலை 10 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த இனிப்பகத்தை மேலத் தெரு அலாவுதீன் ஹாஜியார் திறந்து வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  பெஸ்ட் பேக்கரி நிறுவனத்தாரின் […]

கீழக்கரை அருகே நடைபெற்ற அம்மா திட்ட முகாம்

கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை பிர்க்கா மாலங்குடி குருப் மாலங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கீழக்கரை தாசில்தார் பா இளங்கோவன் தலைமையிலும் சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் கே எம் தமிம்ராஜா முன்னிலையிலும் நேற்று அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைகளும், குடும்ப அட்டையில் பெயர்சேர்த்தல் பெயர்நீக்கம் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப்பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 15 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இம்முகாமில் திருஉத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் […]

கீழக்கரையில் ‘மக்கள் மருந்தகம்’ திறப்பு – சகாயம் IAS வழிகாட்டுதலில் விற்பனை துவக்கம்

ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் தற்போது தமிழகம் முழுவதும் சகாயம் IAS வழிகாட்டுதலின் படி மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் ஜெனரிக் மெடிக்கல் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கீழக்கரை கிழக்கு தெரு சிட்டி யூனியன் வங்கி அருகாமையில் நேற்று 28.04.17 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் பாதை இயக்கத்தின் […]

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செய்தியாளர்கள் மற்றும் அத்துறை சார்ந்தவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்..

இன்று (23.04.2017) செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் மருத்துவத் துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செயதியாளர்கள் மற்றும் அத்துறை சார்ந்தவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழக அரசு பத்திரிகையாளர்களின் நலனை கருதத்தில் கொண்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட அளவில் இலவச மருத்துவ முகாம் நடத்திட […]

ஏர்வாடி ஊராட்சி ஒன்றியம் நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா..

கீழக்கரை ஏர்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றியம் நடுநிலை பள்ளியில் 19-04-2017 அன்று ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஏர்வாடி காவல்துறை ஆய்வாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் பள்ளி மாணவ, மாணவிகளின் நிகழ்ச்சிகளும், அவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக கல்வி சோலையின் மழலை மலர்கள் மனம் மகிழ, இம் மாணவ, மாணவியர்கள் வருங்காலத்தில் இந்தியாவை வல்லரசாக உருவாக்கவும், ஊரின் அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றினைந்து ஒற்றுமையை உணர்த்தவும் சமாதான புறாக்களை […]

கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரியில் உலகத் தரக்கட்டுப்பாடு (ISO 9001:2015) பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்…

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் உலகத் தரக்கட்டுப்பாட்டின் புதிய பதிப்பான 9001: 2015 (ISO 9001 :2015) பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் இன்று (19/04/2017) இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் சுமையா துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியை தலைமை ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் (Chief Consultant / Trainer) S.S பிள்ளை,  ஆலோசகர் (Consultant ) சாஹீல் ஹமீது மற்றும் ஆலோசகர் (Consultant) P கலைச் […]

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் ஆதார் அட்டை முகாம்…

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் 5 (ஐந்து) வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் சிறப்பு முகாம் இன்று (13-04-2017) காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது.  இந்நிகழ்வு இன்று மாலை 05.00 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் ஆதார் குழு, தமிழ்நாடு கேபிள் நிறுவனம் மற்றும் வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி கல்விக் குழு ஆகியோரால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தார் தமீம் ராசா […]

உடல் உறுப்பு தானத்தை தனி மனிதனாக வலியுறுத்தும் சமூக சேவகர்.

தானத்தில் சிறந்த தானம், தான் மறைந்த பின்பும் தன் செயல்பாடுகளால் மற்றவர்களின் உயிர்களை வாழ வைக்கும் தானமாகும். அவ்வகையில் இன்று பல சமூக இயக்கங்களும், தன்னார்வலர்களும் இரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானங்களைப் பற்றி பல வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்த விசயமாகும். இதெற்கெல்லாம் மகுடம் வைத்தார் போல் திருப்பூரை சேர்ந்த சமூகசேவகர் சிவசுப்பிரமணி, கடந்த 11 ஆண்டுகளாக இரத்ததானம், உறுப்பு தானம், உடல் தானம் போன்றவற்றை வலியுறுத்தி தனிமனிதராக […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!