இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் மாதம் நெருங்க இன்னும் 6 வாரங்களே உள்ளன. இஸ்லாம் சமுதாய மக்கள் வாழ்நாளின் இந்த முக்கிய கடமையை நிறைவேற்ற எதிர்பார்த்த வண்ணம் பல லட்சம் மக்கள் இருக்கிறார்கள். தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி, “புனித பயணங்கள்” என்ற பெயரில் எளிய நடையில் ஹஜ் புனித பயணத்தின் செயல்முறைகளை விளக்கும் புத்தகம் வெளியிடப்பட உள்ளது. இப்புத்தகத்தை முனைவர். ஹுசைன் […]
Category: நிகழ்வுகள்
சாலையில் கொட்டப்படும் மணல் – தொடரும் அவலம்..
கீழக்கரையில் கட்டுமானப் பணிகளுக்காக மணல் கொட்டப்படும் அவலம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இன்று (09-07-2017) காலை வள்ளல் சீதக்காதி சாலையில் கொட்டப்பட்டிருந்த மணலால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். அது சம்பந்தமாக நம் கீழை நியூஸ் இணையதளத்திலும் பல முறை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியிட்டு இருந்தது கவனிக்கதக்கது. இப்பிரச்சினையில் கடுமையான நடவடிக்கை எடுக்காத வரை இப்பிரச்சினை தீர்வுக்கு வராது. https://keelainews.in/2017/03/28/klkroad-280317-03/
கீழக்கரை நினைவலைகள் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது..
சோனகன் என்ற நெய்னா முஹம்மது எழுதிய “கீழக்கரை நினைவலைகள்” நூல் இன்று (07-07-2017) மாலை 05.00 மணியளவில் பல கீழக்கரை பிரமுகர்கள் முன்னிலையில் சதக்கத்துன் ஜாரியா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நெய்னா முகம்மது எழுத்துப் பணி இன்னும் சிறப்பாக செயல்பட கீழைநியூஸ் வோர்ல்ட் நிறுவனம் வாழ்த்துகிறது.
கீர்த்தி மிகு கீழக்கரையை மேலும் கீர்த்தியாக்கிய “நினைவலைகள்” நூல் வெளியீட்டு விழா….
சோனகன் என்ற மஹ்மூது நெய்னா வளர்ந்து வரும் எழுத்தாளர் என்பதை விட வளர்ந்த எழுத்தாளர் என்றால் மிகையாகாது. 1993ம் வருடம் மதுரை வக்ஃப் வாரிய கல்லூரியில் இளநிலை பட்டத்தை முடித்து, பின்னர் முதுநிலை பட்டத்தை சென்னை புதுக்கல்லூரியில் முடித்தவர். மஹ்மூது நெய்னாவில் கைவண்ணத்தில் “கீழக்கரை நினைவலைகள்” வெளியீட்டு விழா வரும் வெள்ளிக்கிழமை (07-07-2017) அன்று மாலை 05.00 மணியளவில் ஜதக்கதுன் ஜாரியா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர். […]
திருப்புல்லாணி மேலப்புதுக்குடியில் குர்ஆன், ஹதீஸ் போட்டி..
திருப்புல்லாணி மேலப்புதுக்குடி தமுமுக கிளையின் சார்பாக நடந்த குர்ஆன் மற்றும் ஹதீஸ் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியை மேலப்புதுக்குடி ஆலிம் சஃபர் சாதிக் மன்பயி கிராத் ஓதி தொடங்கி வைத்து சிறப்புறையாற்றினார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ஆலிம் அணீஸ் ரகுமான் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் தமுமுக முன்னாள் உலாமா அணி மாவட்ட செயலாளர் ஹனீப் ராஷாதி சிறப்பரையாற்றினார். நிகழ்ச்சியின் நன்றியுரையை தமுமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ரைஸ் இப்ராஹிம் வழங்கினார். மேலும் விழாவின் ஏற்பாடுகளை தமுமுக கிளை சகோதரர்கள் சிறப்பாக […]
சத்தியப்பாதை கல்வி தர்ம அறக்கட்டளை மற்றும் கீழை நியூஸ் சார்பாக ஆம்புலன்ஸ் நிதியுதவி..
சத்தியப்பாதை கல்வி தர்ம அறக்கட்டளை (SECT) மற்றும் கீழை நியூஸ் சார்பாக வடக்குத் தெரு சமூக அறக்கட்டளையின் (NASA Trust) ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு இந்திய ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்கொடைக்கான காசோலையை சத்தியப்பாதை கல்வி தர்ம அறக்கட்டளையின் நிறுவனரும், கீழை நியூஸ் நிர்வாகத்தின் மூத்த ஆலோசகருமான கே.எம்.அப்துல்லாஹ் நாசா அறக்கட்டளையின் ஒருங்கினைப்பாளர் மஹ்ரூஃபிடம் வழங்கினார். இந்நிகழ்வின் போது நாசா அறக்கட்டளையின் உறுப்பினர்ரகளான பஷீர், கண்மணி சீனி, அப்துல் சமது, ஜாகிர் உசேன், அகமது மிர்சா […]
கீழக்கரையில் குதூகலத்துடன் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
புனித மாதம் ரமலானில் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ஈகைத் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று இந்தியாவில் தமிழகத்தில் கீழக்கரை மற்றும் அனைத்து பகுதிகளிலும் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. கீழக்கரையில் பாரம்பரியமான தொழுகைப் பள்ளியான ஜும்மா பள்ளி, தெற்குத் தெரு மற்றும் அனைத்து ஜமாத் பள்ளிகளிலும் தொழுகை நடைபெற்றது. அதே போல் நபி வழித் தொழுகை தவ்ஹீத் ஜமாத், மக்தூமியா பள்ளி வளாகம், வடக்குத் தெரு சமூக […]
தமிழகத்தில் ஷவ்வால் பிறை தென்பட்டது.. நாளை (திங்கள்) பெருநாள் …
தமிழகத்தில் பல இடங்களில் ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்பட்டது. அதன் அடிப்படையாக கொண்டு நாளை (திங்கள் கிழமதமிழகம் முழுவதும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது. பிறை பார்த்தலின் அதிகாரபூர்வமான அறிவிப்பை தவ்ஹீத் ஜமாத் மற்றும் பிற அமைப்புகள் வெளியிட்டுள்ளனர். கீழைநியூஸ் வோர்ல்ட் நிர்வாகம் அனவருக்கும் ஈகைத் திருநாளின் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
கீழக்கரை சின்னக்கடை தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து..
கீழக்கரையில் ரமலான் மாதம் 29ம் நாளான இன்று சின்னக்கடை தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஜமாத்தினர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் அனைத்து சமுதாய மதநல்லிணக்க இப்தார் விழா……….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் அனைத்து சமுதாய மக்கள் சார்பாக இப்தார் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைராத்துல் ஜலாலியா பள்ளி தாளாளர் டாக்டர்.சாதிக் தலைமை வகித்தார். இஸ்லாமியா பள்ளி தாளாளர் முகைதீன் இப்ராகிம் முன்னிலையில் வகித்தார். மேலும் தொழிலதிபர் கே.ஆர்.டி.கிருஷ்ண மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். கீழக்கரை தாசில்தார் தமீம்ராஜா, ஆணையர் வசந்தி, தொழிலதிபர் உமர் அப்துல் காதர் மற்றும் விசிக, எஸ்.டி.பி,ஐ, காங்கிரஸ், மஜக, உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கீழக்கரையில் உறுதிமொழி மற்றும் கவிதையுடன் தொடங்கிய திடக்கழிவு மேலான்மை விழிப்புணர்வு பணி…
கீழக்கரை நகராட்சி சார்பாக இன்று (21-06-2017) திடக்கழிவு மேலான்மை விழிப்புணர்வு (Solid Waste Managment Awareness) பணிகள் உறுதிமொழி மற்றும் கவிதையுடன் தொடங்கியது. இப்பணிகள் இன்று கீழக்கரை அன்பு நகர் பகுதியில் சுமார் 172 வீடுகளில் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களுக்கும் குப்பைகளை கையாள்வது மற்றும் எவ்வகையான குப்பைகளை பிரித்து நகராட்சி வழங்கியுள்ள ப்ளாஸ்டிக் வாளிகளில் போடுவது என்ற செய்முறை விளக்கங்கள் நகராட்சி ஊழியர்களால் செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவி/தலைவர்களிடம் சுகாதாரம் […]
பெருநாளுக்கு தயாராகும் கீழக்கரை…
ரமலான் மாதம் 30 நாட்களும் பிரார்த்தனையிலும், இறைவனை துதிப்பதிலும் அதிகம் அதிகம் மக்கள் நேரத்தை செலவிடுவார்கள். கடைசி பத்து நாட்களில் இரவு நேரத் தொழுகையுடன் பெருநாள் கொண்டாட்டத்திற்கும் தயாராக தொடங்கிவிடுவார்கள். பெருநாளுக்கு சிறுவர்கள் விரும்பும் வெடி, மத்தாப்பு கடைகள், பெருநாள் சிறப்பு கைலி, வேஷ்டி கடைகள், இளைஞர்கள் இரவு நேரத்தில் மகிழ்ச்சியுர டீக்கடைகள், இனிப்பு வகை வியாபாரம் என்று கீழக்கரை கடைத்தெரு களை கட்ட தொடங்கிவிட்டது. பெருநாள் கொண்டாட்டத்திற்காக வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருந்து மக்களும் ஊருக்கு வரத் […]
கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக சிறப்பு இரவு நேரத் தொழுகை..
ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் மிகவும் கண்ணியமிக்க நாட்களாகும். ஓரு மனிதன் இறைவனிடத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படையாக கீழக்கரையில் பல் வேறு அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல்களில் இரவு நேர சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக கடந்த பல வருடங்களாக சமுதாய நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) , தெரு மக்கள் இஸ்லாத்தின் இறைத்தூதர் வழியில் தொழுகை முறையை அமைத்துக் கொள்ளும் […]
கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக இரவு நேரத் தொழுகை
கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரமலான் மாதத்தின் கடைசி பத்து தினங்களுக்கான சிறப்பு இரவு நேரத் தொழுகை நடைபெற்றது. கியாமுல் லைல் எனும் இரவு நேரத் தொழுகை கீழக்கரை தெற்கு தெரு கிளை, வடக்குத் தெரு கிளை, நடுத்தெரு மரதசா, சாலைத் தெரு, கிழக்குத் தெரு கிளை, 500 ப்ளாட் கிளை ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த சிறப்புத் தொழுகைக்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆண்களும் பெண்களும் ஆவலுடன் கலந்து கொண்டார்கள். இதுபற்றி கீழக்கரை தவ்ஹீத் […]
கீழக்கரையில் புதிய உதயம் ஜமான் பிரதர்ஸ்..
கீழக்கரையில் இருந்து வெளியூருக்கு சென்று பொருட்கள் வாங்க சென்ற காலம் மாறி தற்பொழுது கீழக்கரையை நோக்கி சுற்றுவட்டார மக்கள் பொருட்கள் வாங்க தொடங்கியுள்ளார்கள். அந்த அளவுக்கு மக்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களுக்கான சில்லரை மற்றும் மொத்த கடைகள் கீழக்கரை நகரில் தொடங்கப்பட்டு உள்ளன. வீட்டு உணவுப் பொருட்களில் தொடங்கி அன்றாட பொருட்கள் வரை அனைத்தும் கிடைக்கும் வகையில் வியாபார ஸ்தலங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் சமீபத்தில் உருவாகியுள்ளது ஜமான் பிரதர்ஸ். இங்கு வீட்டிற்கு மற்றும் அனைத்து […]
கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..
கீழ்க்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் 16-06-2017 அன்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கல்லூரி வளைத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி முஹம்மது அஃபரின் பானு கிராத்துடன் தொடங்கியது. இராமநாதபுரம் ஆட்சித் தலைவர் நடராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சிக்கு சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் ஹாலித் ஏ.கே அஹமது புகாரி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்புரை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறப்பு மார்க்க […]
துபாயில் சென்னை சதக் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..
ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்னை சதக் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் 1999-2016 வரை படித்த மாணவர்களின் சந்திப்பு துபாய் தேரா பகுதியில் உள்ள HOTEL RAIN TREEல் ஜுன் 16ம் தேதி, வெள்ளிக்கிழமை ரமலான் மாத இஃப்தார் விருந்து நிகழ்ச்சியுடன் மாலை 05.00 மணி முதல் நடைபெற்றது. இச்சந்திப்பில் பல் வேறு துறைகளில் பயின்ற மாணவர்கள் தங்களின் நண்பர்களை மகிழ்ச்சியுடன் சந்தித்து தாங்கள் கடந்து வந்த பாதைகளை பகிர்ந்து கொண்டார்கள். மேலும் தற்சமயம் அவர்கள் வேலை […]
கீழக்கரை தாலுகாவில் முதியோர் உதவித் தொகை தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது..
கீழக்கரை தாலுகாவில் கடந்த இரண்டு மாதமாக முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகள் பற்றிய ஆய்வு கீழக்கரை தாசில்தார் மற்றும் அரசு ஊழியர் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. அச்சமயத்தில் பல தகுதியில்லாத நபர்கள் உதவித் தொகை பெறுவது கண்டறியப்பட்டு தகுதியானவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து கீழக்கரை வட்டம் கீழக்கரை பிர்கா காஞ்சிரங்குடி குரூப் கஸ்தூரிபுரம் கிராமம் மற்றும் வடக்குத் தெரு பகுதிகளில் பயனாளிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தொடர்பாளர் நாகராணி மூலம் […]
திமுக சார்பாக கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்..
இன்று (12-06-2017) கீழக்கரை முஸ்லிம் பஜாரில் திமுக மற்றும் தோழமைக் கட்சி சார்பாக மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நகரச் செயலாளர் SAH.பசீர் அகமது தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையை மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகம்மது இக்பால் நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சிகளும் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் ஆர்பாட்டத்தில் மாட்டிறைச்சிக்கு தடை செய்த மத்திய […]
கீழக்கரை நகராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது…
நேற்று உலகம் முழுவதும் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் உலகசுற்றுச்சூழல் தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.‘தீவு நாடுகளும்இ காலநிலை மாற்றமும்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றுச் சூழல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் செயற்படுகின்றது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், […]
You must be logged in to post a comment.